நீங்க Boss -ஆ? Leader -ரா?



சிறு பெரு பொதுத்துறை தனியார் நிருவனங்களில் இருப்பவர்கள் தொடங்கி, இல்லற வாழ்க்கை நடத்துபவர்கள், பள்ளி கல்லூரி கல்வி வாழ்க்கையில் இருப்பவர்கள் மற்றும் ஜனநாயக தூண்கள் சரிந்துவிடாமல் தாங்கிக் கொண்டிப்பவர்கள் வரை எல்லா நிலையில் இருக்கும் ஆண் பெண் ஒவ்வெருவருக்கும் ஒரு பொறுப்பு கட்டாயம் இருக்கும். ஒவ்வொருவர் மனதிலும் ஒரு நினைப்பு கட்டாயம் இருக்கும்.
அது!

நான்தான் Boss ....
நான்தான் Leader....

சரி! நீங்க Boss -ஆ? Leader -ரா?

Boss - Leader இரண்டிற்கும் அர்த்தம் ஒன்றுதான் என்றாலும் இந்த வார்த்தைகளுக்குள் வித்தியாசங்கள் இருக்கிறது. Be a leader Not a boss என நிர்வாகவியலில் சொல்வார்கள். அதன்படி இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்களைப் பார்க்கலாம் வாருங்கள்.

Boss என்பவர் விரட்டிக் கொண்டேயிருப்பார். Leader  ஊக்கப்படுத்திக் கொண்டேயிருப்பார்.

நாளைக்கு சாயந்தரத்துக்குள்ள அந்த வேலையை செய்யல தொலைச்சுடுவேன் தொலைச்சி Let's go do the work இது Boss -ன் விரட்டல். இதுவரை நீங்க செஞ்ச வேலை ரொம்ப அற்புதம் வாழ்த்துக்கள் - இது Leader -ன் ஊக்கம்.

Boss என்பவர் அதிகாரத்தை நம்பி செயல்படுவார். Leader என்பவர் நல்ல எண்ணத்தை மட்டும் நம்பி செயல்படுவார்.

அதிகாரம் இருக்கு அதற்குமேல் Power இருக்கு அதனால் காரியத்தை முடிச்சிடலாம் என்பதுதான் Boos ன் கணக்கு. மற்றவர்களிடம் நல்ல அபிப்பிராயத்தை முதலில் சாம்பாதித்துவிட்டு பிறகு காரியத்தை சாதிக்கலாம் என்ற நினைப்பிலிருப்பவர்தான் Leader.

Boss என்பவர் பயத்தை உண்டு பண்ணுபவர்.

இதை செய்யல ஆடிட் ல பிரச்சனையாகிவிடும். அதை செய்யல இந்த வருடம் இங்கிரிமென்ட் கட். ஒழுங்கா வேலை முடியல உன்னோட வேலை காலி... இப்படி Boss எப்போதும் பயமுறுத்திக் கொண்டேயிருப்பார்.

Leader என்பவர் அன்பை பரவ செய்பவர்.

உங்களுக்கு வேலை எப்படி இருக்கு. நான் எதாவது உதவி செய்யணுமா?. வீட்டில் உள்ளவர்கள் சௌக்கியமா? என ஒரு நண்பனைப் போல அக்கரையோடு கவணிப்பவர் Leader. 

Boss -ன் நினைப்பு எப்போதும் நான் என்பதாகவே இருக்கும்.

இந்த நான்தான் சர்வாதிகாரத்தை தோற்றுவிக்கும். ஜனநாயக போர்வையிலிருக்கும் ஏழை மகன்கள் எல்லாம் இந்த நானிற்குள் அடங்கி விடுவார்கள். கிழித்த கோட்டை தாண்டக் கூடாது என நினைக்கும் இலட்சும நான்கள்.

ஆனால் Leader - ன் மனதில் ஒட்டும் உதடுகளான நாம் என்றே இருக்கும்.

Boss என்பவர் தவறுக்கு யார் காரணம்? என யோசிப்பார். Leader தவறுக்கு என்ன காரணம்? என யோசிப்பார்.

The boss shows who is wrong! The leader shows what is wrong!

ஒரு வேலை எப்படி செய்யப்பட்டிருக்கிறது? என தெரிந்து கொள்பவர் Boss. இந்த வேலையை எப்படி செய்ய வேண்டும்? என சொல்லிக் கொடுப்பவர் Leader.
 
A boss encourages you should be silent : a leader encourages you to speak.

Boss -ஸிடம் எப்போதும் பேசும் வாய் மட்டுமே இருக்கும். Leader -ரிடம் கேட்கும் காதுகள் இருக்கும்.

Boss தனக்கு கீழிருப்பவர்களை எப்போதும் திட்டிக்கொண்டே இருப்பார். ஆனால் Leader மரியாதைக்குரியவாக நடந்து கொள்வார்.

A boss is not approachable; a leader is easy to talk to.

Boss என்பவரை எளிதில் அனுக இயலாது. கூடவே இருக்கும் நந்திகளை எல்லாம் (இதில் சில எருமைகளும் எமன்களும் உண்டு) கவணித்து தாண்டிச் செல்லவேண்டும். ஆனால் Leader என்பவரை அனுகுவது மிக எளிதாக இருக்கும். எல்லா வழியையும் அடைக்கும் தாழிடாதவர் அவர்.

ஒரு வேலையை சுமையாக நினைக்க வைப்பவர் Boss. அதே வேலையை சந்தோஷமாக மாற்றுபவர் Leader.

நிர்வாக நுணுக்கங்களான இந்த வேறுபாடுகள் எல்லா நிலையிலும் தலைமை பொறுப்பை கொண்டிருக்கும் அனைவருக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். நீங்களும் அதைப் பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.

கடைசியாக, A boss is easy to find; a leader is very hard to find.

சரி! இப்ப சொல்லுங்க

நீங்க Boss -ஆ? Leader -ரா?