கசக்கும் உண்மை.

ல்ல விதைகளை நாம் முளைக்க விடுவதேயில்லை..


ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கு ஒரு விவசாயி இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டு இறக்கிறார் என்ற செய்தி வல்லரசு கனவிலிருக்கும் இந்தியாவிற்கு வெறும் செய்தியாக மட்டும் இருக்கப் போவதில்லை. அதிலும் குறிப்பாக இதில் பருத்தி விவசாயிகளே அதிகம். பருத்தி ஒரு பணப்பயிர் என்பது சந்தேகத்திற்கு இடமில்லை என்ற போதிலும் பாரம்பரியத்தை தொலைத்து ஐந்தாண்டு திட்டம், பசுமைப் புரட்சி பருத்திக்கொட்டை, புண்ணாக்கு திட்டங்களால் ஆளும் அதிகார வர்க்கத்தின் தொந்தி தள்ள விவசாயத்தில் நுழைந்த BT என்ற (GMO - Genetically Modified Organism) மரபணு மாற்றப்பட்ட விதைகளே இந்திய விவசாயிகளை இந்த நிலையில் வைத்திருக்கிறது. குறுகிய காலம், குறைவான நீர்த்தேவை, பூச்சிகளிடமிருந்து பாதுகாப்பு அதிக மகசூல் என பொய்யாக நம்பவைக்கப்பட்டு நுழைந்த அத்தகைய விதைகளில் அமோகமாக விளைந்தது என்னவோ! வறுமை மட்டுமே. இந்த டாகுமெண்டரி திரைப்படம் தற்கொலை செய்து கொண்டு இறக்கும் இந்திய பருத்தி விவசாயிகளின் மனநிலையைப் பற்றியும் இங்கு பரவலாக விளைவிக்கப்படும் (90%) மான்சாண்டோ (Monsanto) என்ற நிறுவனத்தின் BT பருத்தி விதைகளின் விளைவுகளைப் பற்றியும் ஆராய்கிறது. இறுதியில் கசப்பான (Bitter) உண்மையை உணர்த்துகிறது. 


இந்த டாகுமெண்டரி விதர்பாவில் உள்ள சிறிய கிராமத்து விவசாயி ராம் கிருஷ்ணா என்பவரை முன்னிலைப்படுத்துகிறது. அவரது அன்றாட தேவைகள், விவசாய கடன், பெண்களின் திருமண செலவுகள் இவற்றுடன் BT விதைகளின் பருத்தி விவசாயத் தொழிலுடன் ஓராண்டு பயணிக்கிறது. ஓராண்டு முடிவில் கிருஷ்ணா அறுவடை செய்தது என்ன? என்பதை காட்டுகிறது. மேலும் இரண்டாவது பகுதியாக கல்லூரி மாணவி மஞ்சுஷா என்பவரின் நேர்காணல்களின் வழியே கிராமத்திலிருக்கும் முப்பெரும் விவசாயிகளின் அனுபவங்களையும் தற்போது நிகழும் விவசாய முறையையும்  BT விதைகளின் விளைவுகளையும்  விவசாயிகளின் தற்கொலைகளைப் பற்றியும் அலசி ஆராய்கிறது. இந்த டாகுமெண்டரி ஒரு விவசாயி, ஒரு சில மனிதர்கள், ஒரு கிராமம் என்றில்லாமல் ஒட்டு மொத்த தேசத்திலிருக்கும் நமக்கென்ன செவிடன்களின் காதுகள் அதிர  அபாயமணியை அடிக்கிறது.

Trailer


📎
  • Bitter Seeds
  • Written by - Micha Peled
  • Directed by - Micha Peled
  • Music - Frank Ilfman
  • Year - 2011
  • Country - United State
  • Language - English

இயக்குனரின் தனிப்பட்ட பக்கங்களைக் காண
Click Here ➦

டாகுமெண்டரியைக் காண
Click Here ➦