கிரேக் எம் க்லீனாவின் குறும்படங்கள்.


ஸ்டேட்டஸ் என்ற சட்டையை மாட்டிக் கொண்டு உள்ளிருக்கும் அப்பழுக்குகளை மறைத்து மிடுக்காக வெளி உலகத்தில் சுற்றித் திரிந்தாலும் அசடு வழியும் தருணங்கள் சில எல்லா மனிதர்களுக்கும் வாய்ப்பதுண்டு. அந்த அசட்டு தருணங்களை குறும்படமாக எடுப்பதில் கைதேர்ந்தவர் கிரேக் எம் க்லீனா (Greg M Gilenna).


1963 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டு 23 ஆம் நாள் அமேரிக்காவில் பிறந்த இவர் திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நாடக ஆசிரியர் மட்டுமல்லாமல் சிறந்த நடிகரும் கூட. Meet The Parent, A Guy Think,  Respective Stranger போன்ற இவரது முழு நீல திரைப்படங்களைப் போல இவர் தயாரித்த குறும்படங்களும் பிரபலமானவையே. உண்மைச் சம்பவங்கள், சிக்கலான விசயங்கள், சோகமான முடிவுகள் இவற்றின் பக்கம் மறந்தும் ஒருகால் வைக்காத இவரது படைப்புகள் அனைத்தும் நகைச்சுவையை கொண்டதாக மட்டுமே இருக்கும். சார்லி சாப்ளின் மற்றும் வூடி ஆலன் இருவரையும் தன்னுடைய மானசீக குரு என கருதும் கிரேக் தம்முடைய குறும்படங்களில் தாமே முக்கிய கதாபாத்திரமாகத் தோன்றி ரசிக்கவும் வைக்கிறார். இவரது குறும்படங்கள் அனைத்தும் முன்பே குறிப்பிட்டதுபோல் தனிமனிதனின் அசடு வழியும் தருணங்களை அப்படியே நகைச்சுவையாக பிரதிபலிப்பவையாக இருக்கின்றன. குறும்படங்களைப் பற்றிய தேடலும் ரசனையும் இருந்தால் கிரேக் எம் க்லீனாவின் வேடிக்கையான படைப்புகளையும் கட்டாயம் சேர்த்துக் கொள்ளலாம்.

அவரது குறும்படங்களில் சில தங்களின் பார்வைக்கும்.

The Elevator

The Coin Machine

The Boss

The Violinist

A Love Story


The Librarian