ஒளி ஓவியம்.


னடாவைச் சேர்ந்த பிரபல புகைப்பட கலைஞர் கிரிகோரி கோல்ட்பர்ட் (Gregory Colbert) என்பவரின் Nomadic Museum என்ற தற்காலிக கண்காட்சி உலகப் பிரபலமானது. கிரிகோரி அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட கேமராக்கள் மூலம் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் உள்ள அந்நியோனியத்தை படம்பிடித்து அந்த புகைப்படங்களை தான் நடத்திவரும் கண்காட்சியில் பார்வைக்கு வைத்து வருகிறார். அதற்கென அவர் இந்தியா, பர்மா, இலங்கை, எகிப்து, டோமினிக்கா, எத்தியோபியா, கென்யா, டோங்கா, நமீபியா,  மன்றும் அண்டார்டிகா என அறுபது இடங்களில் சுற்றித் திரிந்து, அங்கு வாழும் சாதாரண முகங்கள், ஆதிவாசிகள், புத்த துறவிகள், நடன கலைஞர்கள் என எளிமையான மனிதர்களை துணையாகக் கொண்டு, அவர்களுடன் யானை, திமிங்கிலம், ஈபிள், கழுகு, சிறுத்தை, காட்டு நாய்கள், சிம்பன்சி, முதலை போன்ற விலங்குகளை இணைத்து படம் பிடித்திருக்கிறார். கலைநயம் கொண்ட இவரது புகைப்படங்களின் மீது பத்து மில்லியனுக்கும் மேற்பட்டவர்களின் நேரடி பார்வைபட  அவற்றைப் பற்றியே இந்த டாகுமெண்டரி திரைப்படம் விவரிக்கிறது.


இந்த டாகுமெண்டரியில்  நேர்காணல்கள், உண்மைச் சம்பவங்கள் மற்றும் சிலரின் முகங்கள் என எதுவும் கிடையாது. அதற்கு பதிலாக கிரிகோரியின் கண்காட்சியில் உள்ள புகைப்படங்கள் அனைத்தும் அவரது குழுவினர்களின் உதவியுடன் நகரும் காட்சிகளாக படம் பிடிக்கப்பட்டு பின்னணியில் ஒலிக்கும் இசை மற்றும் சிறுசிறு கவிதைகளோடு அழகாக அமைந்திருக்கிறது. மொத்தம் 60 நிமிடங்கள் கொண்ட இந்த டாகுமெண்டரி காட்சிகள் ஒவ்வொன்றும் ஒரு கதை போல் இருக்க, அது மனிதனுக்கும் விலங்குகளுக்கும் உள்ள நெருக்கத்தையும் தவிர்த்து மனிதனின் ஆசையையும் கற்பனையையும் புகைப்படமாகச் சொல்கிறது. புகைப்படம் எடுக்கும் கலையை பயில்பவர்களுக்கும், புகைப்பட கலையில் ஆர்வம் கொண்டவர்களுக்கும் மட்டுமல்லாமல் அனைவரும் ரசிக்கும் அளவிற்கு இந்த டாகுமெண்டரி இருக்கிறது.

Trailer


📎

  • Ashes and Snow
  • Written and Directed by - Gregory Colbert.
  • Music - Lisa Gerrard, Patrick Cassidy, Michael Brook, David Darling, John Johannsson.
  • Cinematography - Gregory Colbert, Giorgos Arvanitis, Philippe Vene, Acacio Almeido, Koji Nakemura.
  • Language - English, Spanish, Japanese.
  • Year - 2005.

கிரிகோரி கோல்ட்பர்ட்டின் தனிப்பட்ட பக்கங்களைக் காண
https://gregorycolbert.com/

Ashes and Snow டாகுமெண்டரியைக் காண
Click Here