Tsumiki no le - எதார்த்தம்.


Time is like a water, Gradually rising, Covering people's memories.... But those memories do not disappeared.... They are still there patiently waiting for our visit.
சுனாமி வெள்ளம் போன்ற தருணங்களில் நம் காலுக்கடியில் உயர்ந்து கொண்டே வரும் நீர்மட்டத்தை போன்றதுதான் காலம். என்றுமே வற்றாத அந்த நீர்மட்டத்தில் மூழ்கிய நினைவுகள்தான் ஏராளம். அவற்றை எல்லாம் திரும்பி பார்க்க வேண்டும் என்றால் உயர்ந்து கொண்டே வரும் அந்த நீருக்கடியில் நாமும் மூழ்க வேண்டியிருக்கும். இந்த குறும்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக வரும் பெரியவரும் அதைத்தான் செய்கிறார்.


வெள்ளநீர் சூழ்ந்த ஒரு நகரத்தின் கட்டிடத்தின் உச்சியில் யாருமற்ற பெரியவர் ஒருவர் தனிமையில் வசிக்கிறார். உயர்ந்து கொண்டே வரும் நீர்மட்டத்தை சமாளிக்க தான் வசிக்கும் கட்டிடத்தை ஒவ்வொரு பகுதியாக உயர்த்திக் கொண்டே வருகிறார். ஒவ்வொரு நாளும் அதற்கான வேலையை அவர் செய்ய ஒருநாள் தன் புகை பிடிக்கும் குழாயை நீருக்கடியில் தவற விடுகிறார். தனது மனைவியிடமிருந்து பரிசாக பெற்ற அந்த புகைபிடிக்கும் குழாயை எடுக்க நீருக்கடியில் மூழ்கத் தொடங்குகிறார். அந்த மூழ்குதலில் ஒவ்வொரு அறையாக தொடங்கி அடியாழம் வரை செல்லும் அவர் தன் கடந்த கால வாழ்க்கை நினைவுகளையும் அவற்றோடு தொடர்புடைய உறவுகளையும் திரும்பிப் பார்க்கிறார்.

ஒரு எளிமையான அனிமேஷன் தொழில்நுட்பத்தில் இந்த குறும்படம் எடுக்கப்பட்டிருந்தாலும் ஒரு மூழ்குதலின் வழியாக வாழ்வின் ஏதார்த்த நிலையையும் முதுமையின் தனிமையையும் அழகாக உணர்த்துகிறது.

📎

  • Tsumiki no le
  • (La Maison en Petits Cubes)
  • (House of Small Cubes)
  • Directed by - Kunio Kato
  • Written by - Kenya Hirata
  • Music - Kenji Kondo
  • Country - Japan
  • Year - 2008