கூஃபி.

கார்டூன்களின் உலகம் என அழைக்கப்படும் வால்ட் டிஸ்னியின் பட்டறையில் செதுக்கப்பட்ட கார்டூன் கதாபாத்திரங்கள் ஏராளம். அதில் கழுத்துவரை மறைக்கப்பட்ட டி-சர்ட், அதனோடு சுற்றப்பட்ட மப்ளர், தொளதொளக்கும் பேண்ட், வெள்ளை கையுரை, பொருத்தமில்லாத காலணி, தலையில் தொப்பி சகிதம் இருக்கும் கூஃபியை எளிதில் மறக்க முடியாது.



ஆந்திரோ போமோர்ஃபிக் வகையைச் சேர்ந்த ஒருவகை நாய்தான் இந்த கூஃபி. 1931 -ஆம் ஆண்டு வால்ட் டிஸ்னி ஸ்டுடியோவைச் சேர்ந்த ஆர்ட் பாபிட் (Art Babbitt)என்பவரே இதனை படைத்தார். ஃபிராங்க் வெப் (Frank Webb) என்ற மற்றொரு கலைஞர் கூஃபிக்கு முழு உருவம் கொடுக்க, 1932-ஆம் ஆண்டு மிக்கி ரெவ்யூ (Mickey's Revue) என்ற தொடரில் மிக்கி மவுஸின் இசைக் கச்சேரியை கேட்கும் மினி மவுஸ், ஹொரெஸ் ஹோர்ஸ்பொலார், கிளாரபெல்லே கவ் போன்ற மற்ற கதாபாத்திரங்களுடன் டிப்பி டோவ் (Dippy Dawg) என்ற பெயரில் கூஃபி முதன்முதலாக கருப்பு வெள்ளையில் தலைகாட்டியது. அதே வருடம் திவூஃபி பார்டி (The Whoopee Party) என்ற தொடரில் கூஃபி ஜி கூஃப் (Goofy g Goof)என்ற பெயரில் தெளிவாக அறிமுகமாக, அதனைத் தொடர்ந்து மிக்கி மவுஸ், டொனால்ட் டக் போன்ற புகழ்பெற்ற கார்டூன் கதாபாத்திரங்களுடன் நட்புடன் இணைந்து அனைவரையும் ரசிக்க வைத்தது. 1960 வருடத்திற்கு பிறகு இந்த கூஃபி தனக்கென தனி தொடர்களில் தோன்றி 1969 ஆம் வருடம் வரை கார்டூன் ரசிகர்கள் அனைவரையும் கொள்ளையடித்தது. கார்டூன் தொடர்கள் மட்டுமல்லாமல் டாக் பேசஸ் (Dogfaces) என்ற காமிக் புத்தகத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும், இரண்டாம் உலகப்போரில் அமேரிக்கா பயன்படுத்திய 602, 756 விமானப் படைக்கு சின்னமாகவும் கூஃபி இருந்தது குறிப்பிடத்தக்கது.

புதியன தேடல் ஒருபுறமிருந்தாலும் ஆரம்ப காலகட்ட கார்டூன் தொடர்களின் மீதும் அதன் கதாபாத்திரங்களின் மீதும் அடியேனுக்கு அலாதி பிரியமுண்டு. அந்த பிரியத்துடன் கூஃபியைப் பற்றிய அறிமுகத்தோடு அது மகிழ்வித்த கார்டூன் தொடர்கள் சிலவற்றை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

1. Goofy's Glider

2. Goofy's and Wilbur

3. The Olympic Champ

4. Two Gun Goofy

5. Goofy Father's Lion

6. Teachers are Prople

7. Two weeks vocation

8. African Diary

9. No Smoking

10. Cold War