தண்ணீர் தண்ணீர்.


ருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் வயல்வெளிகளிலோ பொட்டல் காட்டிலோ ஆற்றுப் படுகைகளிலோ மண் பூசி வெயிலில் குளித்து ஆசைதீர விளையாடிவிட்டு அருகிலிருக்கும் நீர்நிலைகளில்  கிடக்கும் தண்ணீரை அள்ளிப் பருகி ஆசுவாசம் பெற்றபோது இந்த தண்ணீரை ஒருநாள் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை வரும் என்று நாமெல்லாம் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டோம். ஆனால் இன்று அது நிகழ்ந்திருக்கிறது. இன்று தண்ணீரும் அதனைச் சார்ந்த வர்த்தகமும் சுற்றுச் சூழல் சீர்கேடும் கட்டுக்குள் அடங்காத நிலையில் இருக்கிறது. அதன்படி கிராமங்களில் கூட நுழைந்து விட்ட Packaged Drinking Water என சொல்லப்படுகிற சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் எத்தகைய தரம் வாய்ந்தது? அதன் நன்மை தீமைகள் என்ன? என்பதை வர்த்தக ரீதியாகவும், சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், சூழியல் ரீதியாகவும் இந்த டாகுமெண்டரி அலசி ஆராய்கிறது. இறுதியில் அதிர்ச்சி தரும் தகவலையும் அளிக்கிறது.


இந்த டாகுமெண்டரி தயாரிப்பாளர்கள் புகழ்பெற்ற நிறுவனமான பெப்சிகோ (Pepsico) மற்றும் நெஸ்லே வாட்டர்ஸ் (Nestle Waters) என்ற இரு நிறுவனங்களில் தங்கள் ஆய்வை தொடங்குகின்றனர். அந்த நிறுவனங்களில் சுத்திகரிக்கப்படும் தண்ணீரையும் மறு சுழற்சி செய்யப்படும் என்ற நம்பிக்கையில் அந்த தண்ணீர் நிரப்பப்படும் பாட்டில்களையும் சோதனையிடுகின்றனர். மேலும் அந்த தொழில்சாலை அமைந்திருக்கும் நகரங்களையும் பார்வையிடுகின்றனர்.  ஒவ்வொரு நாளும் சுமார் 30 மில்லியன் தண்ணீர் பாட்டில்கள் பிளாஸ்டிக் கழிவுகளாக அமேரிக்காவில் வீசியெறியப்படுகின்றன என்பதை கருத்தில் கொண்டு சுற்றுச்சூழல் ஆய்வுகளும் செய்கின்றனர்.  அவர்களது ஆய்வில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் தரமற்றது என்றும், அது அடைத்து விற்கப்படும் பாட்டில்களில் புற்றுநோய் ஏற்படுத்தும் காரணிகள் இருக்கிறது என்றும், பெயரளவிற்கே அவைகள் மறுசுழற்சி செய்யப்படுகிறது என்றும் உறுதிப் படுத்துகின்றனர். இறுதியில் என்ற Forty percent of bottled water is really just filtered tap water என்ற அதிர்ச்சி தகவலையும் அளிக்கின்றனர்.
Trailer


இந்த டாகுமெண்டரி படம் அமேரிக்காவில் உள்ள இரண்டு முக்கிய பிரபலமான நிறுவனங்களை மட்டும் ஆய்வு செய்து அங்கு நிலவும் தண்ணீர் தேவைகளை அடிப்படையாக கொண்டு பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் தண்ணீரை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. இருந்த போதிலும் பல கட்டுப்பாடுகளும் சட்ட திட்டங்களும் சோதனைகளும் நிறைந்த அமேரிக்காவிலேயே இந்த நிலை என்றால் நாமெல்லாம்? என்ற கேள்வியையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது.

📎
  • Tapped
  • Directed by - Stephanie Soechtig, Jason Lindsey.
  • Written by - Josh David, Stephanie Soechtig, Jason Lindsey.
  • Country - US
  • Language - English
  • Year - 2009
  • Running Time - 1h 16min.



டாகுமெண்டரியைக் காண
Click Here