லில் வெய்னின்- ராப் இசை பாடல்கள்.


போட்டிகளில் தேர்வாகும் அளவிற்கான சரிகமபதநி, பெரும் பாடகர்களுக்கு ஒத்துப் போகிற குறல்வளம், அன்பே ஆருயிரே மனே தேனே பொன்மானே கவிதை வரிகள் இதில் எதுவும் ராப் இசை பாடலுக்கு தேவைப்படாது. குழாயடி டாஸ்மாக் சண்டை, லாஸ்ட் வேல்டு டைனோசர் புளூ அளவிற்கான குரல்வளம், சில பல கெட்ட வார்த்தைகள், எட்டுத்தொகை பத்துப்பாட்டு, பதினொன் கீழ்கணக்கு நூல்களை கடகடவென படிக்கும் திறமை இருந்தால் போதும் ராப் இசை பாடகர் ஆகலாம். பாடல்களை பாடுவது என்பதை விட படிப்பதே ராப் இசை எனப்படும். தமிழில் சொல்லிசை என அழகாக குறிப்பிடப்படும் இந்த ராப் இசை ஹிப் ஹாப் என சொல்லக்கூடிய ஒருவகை இசைப் பிரிவில் உள்ள ஒரு துணை பிரிவு ஆகும். இது தோன்றிய காலம் வரையறுத்து சொல்ல முடியாவிட்டாலும் 1970 முதல் 1990 வரையிலான காலகட்டங்களை இந்த ராப் இசையின் பொற்காலமாக கருதலாம். அன்று முதல் இன்றுவரை மேற்கண்ட தகுதியுடையவர்கள் எல்லாம் ராப் இசை பாடகர்களாக இருக்க அதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒரு நபர் லில் வெய்ன் (Lil Wayne) .


Dwayne Michael Carter Jr. என்பதுதான் லில் வெய்னின் நிஜப் பெயர். 1982 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் நாள் அமேரிக்காவில் உள்ள நியூ ஆர்லியன்ஸ் மாகாணத்தில் பிறந்த இவர் தனது ஒன்பதாவது வயதிலேயே வீட்டுப் பாடங்களை ஒதுக்கி வைத்துவிட்டு ராப் இசை பாடல்களை எழுத தொடங்கி விட்டார். அக்காலகட்டத்தில் அந்த வயதில் கேஸ் மணி (Cash Money) என்ற குழுவில் இணைந்து பல பாடல்களை பாடி மன்னிக்கவும் படித்து இளம் வயது ராப் இசை பாடகர் என்ற பெருமையையும் பெற்றார். 1999 வருடம் வெளிவந்த இவரது The Block is Hot என்ற ஆல்பம் பெரும் வரவேற்பை பெற அதனைத் தொடர்ந்து வெளிவந்த Lights Out, 500 Degreez, Tha Carter I II III IV V, Am Not a Human Being போன்ற பல ஆல்பங்களும் இவருக்கு புகழை சேர்த்தது. இன்றைய நிலவரப்படி  வெய்ன் பாப் இசை பாடகர்கள் அனைவருடன் இணைந்தும் தனியாகவும் பல ராப் இசை பாடல்களை கொடுத்து வருகிறார்.

ராப் இசை பாடர்களுக்கு சர்ச்சைகளுக்கு பஞ்சமிருக்காது. அதற்கு வெய்னும் விதிவிலக்கல்ல என்பதற்கேற்ப போதைப்பொருள் உபயோகம், ஆயுத பதுக்கல், பெண் சகவாசம் என சிறைச்சாலை சென்ற அளவிற்கான சர்ச்சைகளிலும் இவர் பிரபலம். Jail didn't make me find God, He's always been there. They can lock me up, but my spirit and my love can never be confined to prison walls என அதிலிருந்து மீண்டுவந்து My aim is just to make good music every single time என தன் வேலையை கன கச்சிதமாக இன்றும் செய்து கொண்டிருக்கிறார். அதற்கு சமீபத்தில் வெளியான அவரது Lollipop என்ற தனிப் பாடலே சாட்சி.

I like people that enjoy life, 'cause I do the same.

I'm blessed and I thank God for every day for everything that happens for me.

Trying to tear down the past prohibits you from building up your future.

என்பதே மூன்று கிராமி விருதுகள் உட்பட இசைக்கான பல விருதுகளை வாங்கிய லில் வெய்னின் வெற்றி இரகசியம்.

ஸ்னோப் டாக்கிற்கு அடுத்து ராப் இசை பாடகர்களில் அடியேனை மிகவும் கவர்ந்தவர் லில் வெய்ன். அவரது பாடல்கள் பல பார்ப்பதற்கு மட்டுமல்லாமல் கேட்பதற்கும் காதை கூசும் ரகத்தைச் சேர்ந்தது. அதனால் நியாய தர்ம சென்சாருக்கு உட்பட்டு அவரைப் பற்றிய சிறிய அறிமுகத்தோடு அவரது பாடல்கள் சிலவற்றை மட்டும் இங்கு  அசைபோடுகிறேன். 

பாடல்களைக் காண