The Other Pair (மகாத்மா சிந்தனை) .

ந்த உலகில் பலதரப்பட்ட ஆத்ம மனிதர்கள் வாழ்ந்தாலும் மறைந்தாலும் ஒருசிலரைத்தான் மகாத்மா என்கிறோம். அதாவது காரண காரிய இலாப நஷ்ட நோக்கமில்லாது பிறருக்காக உதவுபவர்கள் மற்றும் பிறரது துன்பங்களை தன்னுடையதாக கருதுபவர்களே மகாத்மாக்கள் என அழைக்கப்படுகின்றனர். நமக்கெல்லாம் நன்கு தெரிந்த மகாத்மா என்றால் அது காந்திஜி ஒருவர் மட்டும்தான். காந்தி நல்லவரா கெட்டவரா அவர் மகாத்மாவா என்ற ஹேராம் சிந்தனைக்கு நுழையாமல் அவரது வாழ்வில் நிகழ்ந்த சிறிய சம்பவத்திற்கு வருவோம்.


இளம் வயதில் காந்திஜி ஒருமுறை இரயில் பயணம் செய்துகொண்டிருந்த சமயம் கூட்ட நெரிசலில் தனது காலணியில் ஒன்றை அவர் தவறவிட்டார். அதனை எடுக்க இயலாமல் இரயில் விரைய உடனே செய்வதறியாமல் தனது மற்றொரு காலணியையும் அவர் கலட்டி வீசினார். காந்தியின் இந்த செயல் அவருடன் பயணம் செய்த மற்றவர்களுக்கு புரியாமல் போக, தவறவிட்ட அந்த ஒரு காலணியால் பிறருக்கும், தன்னிடம் இருக்கும் மற்றொன்றால் தமக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை என்பதால் யாருக்காவது அந்த இரண்டும் பயன் படட்டுமே என்று அதை வீசியெறிந்தேன் என அவர்களுக்கு காந்திஜி விளக்கினர். இது ஒரு சிறிய புத்திசாலித்தனமிக்க நிகழ்வு என்றாலும் முகம் தெரியாத யாரோ ஒருவருக்காக உதவும் அவரது அத்தகைய பன்பே பின்னாளில் அவரை மகாத்மாவாக மாற்றியது. காந்தியின் வாழ்வில் நிகழ்ந்த இந்த சம்பவத்தைக் கொண்டு எகிப்து நாட்டைச் சேர்ந்த இளம் இயக்குனர் சாரா ரோஷிக் தயாரித்த குறும்படம்தான் தி அதர் பேர் (The Other Pair).

இந்த குறும்படத்தில் இருவேறுபட்ட இரண்டு சிறுவர்கள் முக்கிய கதாபாத்திரமாக வருகின்றனர். அதில் ஒருவன் இரயில் நிலையத்தில் தனது காலணியில் ஒன்றை தவறவிட பிறகு என்ன நிகழ்கிறது எப்பதை காந்திஜியின் அந்த மகாத்மா சிந்தனையோடு அழகாக காட்சிப் படுத்தியிருக்கின்றனர்.


📎

  • Directed by - Sarah Rozik
  • Screenplay - Mohammed Maher
  • Music by - Mohamed Hassan Elhanafy
  • Country - Egypt
  • Language - Arabic
  • Year - 2014