அப்பாஸ் கியரோஸ்தமி - இயக்குனர் இமயம்.
'சத்யஜித் ரே மறைந்தபோது நான் மிகவும் துயரடைந்தேன் ஆனால் அந்த இடத்தை நிரப்புவதற்கு சரியான நபரை தந்ததற்கு கடவுளுக்கு நன்றி தெரிவிக்கிறேன்' - அப்பாஸ் கியரோஸ்தமியைப் பற்றி அகிரா குரஸோவா குறிப்பிட்டது.
அப்பாஸ் கியரோஸ்தமி 1940 ஆம் ஆண்டு ஈரானில் உள்ள தெஹ்ரானில் பிறந்தார். சிறுவயதிலிருந்து ஓவியத்தின் மீது ஆர்வம் கொண்டிருந்த அவர் இளமையில் ஓவியம் மற்றும் வடிவமைப்புத் துறையில் பட்டம் பெற்றார். விளம்பரத்துறையில் தனது முதல் பணியைத் தொடங்கிய அவர் எழுபதுகளில் ஈரானிய திரைப்பங்கள் உலக அளவில் கவணிக்கப்பட திரைத்துறையில் முதன் முதலாக காலடி எடுத்து வைத்தார். ஆரம்பகாலகட்டத்தில் குழந்தைகள் மற்றும் விலங்குகளை வைத்து குறும்படங்கள் மற்றும் டாக்குமெண்டரிகளை இயக்கிய இவர் வேர் இஸ் த ஃபிரண்ட்ஸ் ஹோம் (Where is the Friend's Home) என்ற முழு திரைப்படம் மூலம் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து குளோசப் (Close-Up), த்ரோ தி ஆலிவ் ட்ரீ (Through the Olive Tree), டேஸ்ட் ஆஃப் செர்ரி (Taste of Cherry), 10 ஆன் டென் (10 on Ten), ஷ்ரின் (Shirin) என நாற்பதற்கும் மேற்பட்ட படைப்புகளைத் தந்து உலக அளவில் புகழ்பெற்றார்.
அப்பாஸ் தனது படைப்புகள் அனைத்திலும் எந்த கதையையும் சொல்ல முயற்சித்ததே கிடையாது. ஒரு கதாபாத்திரத்தின் வாழ்க்கை நிகழ்வுகளை அதனூடே பின் தொடரும் ஒரு கேமரா மூலம் காட்டுவதே அவரின் தனித்தன்மை. அதுவே அவரை தலைசிறந்த இயக்குனராக வைத்திருக்கிறது. இயக்குனராக மட்டுமல்லாமல் மிகச்சிறந்த கவிஞர், கதைசொல்லி, எழுத்தாளர், புகைப்பட கலைஞர், கிராபிக்ஸ் டிசைனர், என பன்முகம் கொண்டவராக அவர் விளங்கினார். 2016 ஆண்டு அப்பாஸ் கியரோஸ்தமி நம்மை விட்டு பிரிந்தாலும் அவரது படைப்புகள் எங்கோ ஒருமூலையில் இன்றும் பேசப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.
ஒரு குறும்படம் எப்படி இருக்க வேண்டும்? அல்லது எப்படி எடுக்க வேண்டும்? அப்பாஸ் கியரோஸ்தமின் குறும்படங்களில் சில தங்களின் பார்வைக்கு.
Duck Segment
No
Ordinary or Dis ordinary
Seagull Eggs
The Bread and Alley
Two Solutions One Problem