Shadow Tree - நீரியல் சுழற்சி.


நீர் - சூரிய ஒளி - நீராவி - மேகக் கூட்டங்கள் - மழை - நீர் என்ற நீரியல் சுழற்சியில்தான் இந்த உலகில் வாழும் அனைத்து உயிரினங்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த நீரியல் சுழற்சியில் மரங்களும் முக்கிய பங்குவசிக்கின்றன. மரங்கள்தான் நிலத்தடியில் மழைநீரை சேமிக்கவும், நீரை எளிதில் ஆவியாகவிடாமல் சமநிலையில் வைத்திருக்கவும், காற்றை சுத்தப்படுத்தி வலுவிழந்த மேகக் கூட்டங்களை மழையாக மாற்றவும் பெரும் உதவி செய்கின்றன. அவற்றையெல்லாம் மறந்து நாம் காடுகளை அழித்து மழைப் பொழிவை குறைத்து கொஞ்சநஞ்சம் இருக்கும் நீரையும் கெடுத்து நீரின்றி அமையாது உலகு, மரம் வளர்போம் மழை பெறுவோம்" என குட்டிச்சுவரிலும் வாகனத்திற்கு பின்னாலும் வசனமாக எழுதி வைத்துவிட்டு அக்கம் பக்கத்தில் நீருக்காக கையோந்தி நிற்கிறோம். மேலும் எது நன்நீர் என ஆயிரம் அடியைத் தாண்டி தோண்டி ஆதாரம் தேடி அலைகிறோம். இந்த குறும்படத்தில் வரும் ஆப்பிரிக்க தேசத்து சிறுவனும் அப்படித்தான். தனக்கு கிடைத்த மீனின் வாழ்வுக்காக தூய்மையான நீரைத் தேடி தான் வசிக்கும் இடத்தைச் சுற்றி அலைகிறான். கடைசியில் ஒரு சிறிய மரத்திலிருந்து அதனை பெறும் வழிமுறையை கண்டுபிடிக்கிறான். அதன்மூலம் அந்தச் சிறுவனுக்கு தேவையான நீர் கிடைத்ததா என்பதையும், இந்த உலகம் உயிர்ப்புடன் இருக்கச் செய்யும் நீரின் முக்கியத்துவத்தையும், அதற்கு உதவும் மரங்களின் மகத்துவத்தையும், இவற்றிற்கு பின்னால் இருக்கும் நீரியல் சுழற்சியின் அறிவியலையும் நமது சிலிகன் மூளைக்கு உரைக்குமாறு  இந்த குறும்படம் அழகாக காட்டுகிறது.


📎

  • Shadow Tree
  • (Mti Wakiwuli)
  • Directed by - Biju Viswanath
  • Written by - Betsy Burke, Biju Viswanath
  • Photography - Biju Viswanath
  • Sound - Rakhi
  • Language - Swahili
  • Country - Tanzania
  • Year - 2014.