ஜெய் ஜெய் கராவி குஜராத்தி - பாடல்.


ன கன மன, வந்தே மாதரம் போல "ஜெய் ஜெய் கராவி குஜராத்தி" என்ற பாடலை குஜராத் மாநிலத்தில் அடிக்கடி கேட்கலாம். நம்ம ஊர் நீராருங் கடலுடுத்த தமிழ்தாய் வாழ்த்தை போல அங்கு இந்த பாடல் குஜராத்தி தாய் வாழ்த்தாக பள்ளிகளிலும் முக்கிய விழாக்களில் பாடப்பட்டு வருகிறது. குஜராத்தின் புகழ்பெற்ற நவீன இலக்கியத்தின் முன்னோடியான "நர்மத்" (Narmadashankar Dave) என்பவர் இந்த பாடலை இயற்றியிருக்கிறார். குஜராத்தின் அழகையும் பெருமைமையும் வீரத்தையும் போற்றும் இந்த பாடலை சில மாதங்களுக்கு முன்பு அங்குள்ள திரையரங்கு ஒன்றில் நல்ல இசையோடு முதன்முதலாக கேட்டேன். ஆரம்பத்தில் ஏதோ திரைப்பட பாடல் என நினைத்து விசாரித்தபோதுதான் அது அந்த மாநிலத்தின் பாடல் என தெரிய வந்தது. அதிலும் அடியேன் கேட்ட அந்த பாடலுக்கு ரஹ்மான் இசையமைத்தார் என அறிந்துகொண்டபோது ஆர்வம் இன்னும் அதிகமானது.


குஜராத் மாநிலம் தோற்றுவிக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் நிறவடைந்ததை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட விழாவிற்காக ரஹ்மான் இந்த பாடலை அவரது ஸ்டைலில் உருவாக்கியிருக்கிறார். பாடகி கீர்த்தி சங்கீதாவுடன் இணைந்து பல பாடகர்கள் அழகாக பாடியிருக்கிறார்கள். வழக்கமாக ரஹ்மானின் ஆல்பங்களுக்கு காட்சிவடிவம் கொடுக்கும் பரத் பாலா இந்த பாடலுக்கும் காட்சியமைத்திருக்கிறார். 2010 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த விழாவில் நம் உலகம் சுற்றும் வாலிப பிரதமர் இந்த பாடலை வெளியிட்டிருக்கிறார். இதற்குமுன் இந்த பாடலை பலர் பாடியிருந்தாலும் ரஹ்மானுக்கு பிறகு அவரது இசையில் குஜராத் முழுவதிலும் ஒலிக்கிறது. அந்த பாடல் தங்களின் பார்வைக்கும்.