டிங்கி வாத்து.
மிக்கி மவுஸ், டொனால்ட் டக், டாம் & ஜெர்ரி, ரோடு ரன்னர், பாப்பாய் வரிசையில் அடுக்கப்பட்டிருந்த கார்டூன் டிவிடி தொகுப்புகளை மேய்ந்து கொண்டிருந்தபோது ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்த டிங்கியை பார்த்ததும் ஒரு இருபது வயதை குறைத்துக் கொண்டு ஓடிச்சென்று தூக்கிக் கொண்டேன். அடியேனின் மனம் கவர்ந்த கார்டூன் கதாபாத்திரங்களுள் டிங்கியும் (Dinky) ஒன்று. குறிப்பாக அதன் கர கர குரலின் ரசிகன் நான்.
1930-ல் CBS தொலைக்காட்சிக்காக பால் ஹௌல்டன் டெர்ரி ( என்பவர் தொடங்கிய டெர்ரி டூன்ஸ் என்ற கார்டூன் நிகழ்சியில் 1939 முதல் 1957 வரை மொத்தம் 14 எபிசோடுகளில் அனைவரையும் மகிழ வைத்தது இந்த டிங்கி. டெர்ரி டூன்ஸ் நிகழ்ச்சியில் பிரபலமான மைட்டி மவுஸ், ஹேக் அண்ட் ஜக்கலே, காண்டி கூஸ், லூனோ வரிசையில் இந்த டிக்கி சிறிது நேரமே வந்தாலும் பலரையும் கவர்ந்தது. பால் பிரீஸ் என்பவர் டிங்கிற்கு குரல் கொடுக்க, கறுப்பு நிற வாத்துக் குஞ்சான இது ஒரு அநாதையாக சித்தரிக்கப் பட்டிருக்கும். மற்ற பறவைகள் கூட்டத்தில் இருக்கும் அது தனது மாறுபட்ட தோற்றத்தால் அனைவராலும் முதலில் வெறுத்து ஒதுக்கப்படும். பிறகு தனக்கே உரிய பல வேடிக்கைகள் மற்றும் சாகசங்களுக்குப் பின்னர் தன்னை வெறுத்து ஒதுக்கியவர்களின் அன்பையும் உறவையும் பெற்று சேர்ந்து வாழும்.
சிறுவயதில் சற்று மங்கலாகத் தெரிந்த கார்டூன் நெட்வொர்க் சேனலில் டிங்கியை கடைசியாக பார்த்த நியாபகம் இருக்கிறது. அன்று அந்த டிவிடி கடையில் மீண்டும் அதனை பார்க்க அத்தனை குதுகலம் பிறந்தது. சில சுவாரசியமற்ற தேடுதலில்தான் உன்னதமானவை கிடைக்கும் என்பதற்கேற்ப எனக்கு கிடைந்த டிங்கியை தங்களுக்கும் அறிமுகப்படுத்துகிறேன்.
1. The Orphan Duck (1939).
2. Much Ano About Nothing (1940).
3. The Lucky Ducky (1940).
4. Welcome Little Stranger (1941).
5. In Life With Fido (1942).
6. Dinky Finds a Home (1946).
7. The Beauty Shop (1950).
8. Flat Foot Fledgling (1952).
9. Foolish Dockling (1952).
10. Sink or Swim (1952).
11. Feather weight Champ (1953).
12. Wise Quacks (1953).
13. The Orphan Egg (1953).
14. The Timid Scarecrow (1953).
15. It's a Living (1957).