ச.ரி.க.ம.ப.த.நி.ச...
இன்று உங்களுக்கு சங்கீதம் கற்றுக் கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்.
"ஒருநிமிடம் இருங்கள் ஓடிவிடாதீர்கள் முழுதாக படியுங்கள்".
சங்கீதம் என்றவுடன் நமக்கெல்லாம் ச.ரி.க.ம.ப.த.நி.ச என்பதுதான் நினைவுக்கு வரும். அது என்ன? ச.ரி.க.ம.ப.த.நி.ச.
இந்த சரிகபதநிச என்பது கர்நாடக சங்கீதத்தின் அடிப்படையான ஏழு முதன்மை ஸ்வரங்களாகும்.
ஷட்ஜம்,
ரிஷபம்,
காந்தாரம்,
மத்யமம்,
பஞ்சமம்,
தைவதம்,
நிஷாதம்
என்ற இந்த ஏழு ஸ்வரங்களை உச்சரிக்கும்போது வெளிப்படும் ஓசையின் முதல் எழுத்தே ச.ரி.க.ம.ப.த.நி.ச (கண்ணை மூடிக்கொண்டு ஒருமுறை சொல்லிப்பாருங்கள்). ஆங்கிலத்தில்
Shadja,
Rishabha
Gandhar,
Madhyam,
Pancham,
Dhaivat,
Nishad
என்பதன் முதல் எழுத்துகள் Sha.Ri.Ga.Ma.Pa.Dha.Ni என சரியாக வரும். இந்த ஏழு முதன்மை ஸ்வரங்களுக்குள் வேறுபாடுகள் உண்டு அவற்றை மாற்றியமைப்பதன் மூலம் 72 ஸ்வரங்களை பெறமுடியும். இந்த 72 ஸ்வரங்களில் இருந்து பிறப்பதுதான் ராகம். ராகத்திலிருந்து தாளம், பல்லவி, சரணம்.... பிறகு நல்ல சங்கீதம்.
தியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் என்ற மூவர்தான் கர்நாடக சங்கீதத்தை ஒழுங்கமைத்தனர். ஆனால் 2000 வருடங்களுக்கு முன்பே நமது தமிழ் செம்மொழியில் இந்த ஸ்வரங்களை "ஏழிசை" என குறிப்பிட்டுள்ளனர். குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, மற்றும் தாரம் என்ற இந்த ஏழிசை "கோவை" எனவும் அழைக்கப்பட்டது.
சங்கம் வைத்து தமிழ் வளர்ததுபோல் நம் முன்னோர்கள் தொட்டில் கட்டி சங்கீதத்தையும் தாலாட்டி வளர்த்தார்கள். பிறகு வடக்கு வளர தெற்கு தேய, அரிசி சப்பாத்தியாகி, சப்பாத்தி புரோட்டாவாகி, புரோட்டா நூடுல்சாக ஆனது. தமிழ்மொழியின் ஏழிசை வடமொழி கலப்பினால் ஸ்வரமாக மாறிப்போனது.
அதைவிடுங்கள் சங்கீதத்தின் அடிப்படையான ஸ்வரங்களைப்
பற்றி தெரிந்து கொண்டீர்களா?.
பற்றி தெரிந்து கொண்டீர்களா?.
சரி!... ஆரம்பிக்கலாமா?
..ச..ரி..க....