செம்மீன்

ஆசை பிடித்து அதன் காரணமாக சீலம் குறைந்த ஒரு மீனவனின் பெண் கருத்தம்மா, பாரீகுட்டி என்னும் முஸ்லிம் வியாபாரியை காதலிக்கிறாள் . ஆனால் அவர்களது தூய காதல் இனிதே நிறைவேரவில்லை. மீனவ சமுதாய கட்டுப்பாடுகளும், மரபுகளும் கருத்தம்மாவை வாட்டி வதைக்க ஒரு இளம் மீனவனை கணவனாக கைப்பிடிக்கிறாள். கட்டிய கணவனுக்கு உண்மையான மனைவியாக வாழ எவ்வளவோ பக்குவமாக நடந்து கொள்கிறாள். கருத்தம்மாவின் வாழ்வில் ,பாரீகுட்டியின் நிழல் படர்ந்துகொண்டே வருகிறது.
கட்டியகணவன்,காதலன்,கட்டுப்பாடு,செம்படவர் மரபு என கருத்தம்மாவின் மனப் போராட்த்தில் பயணிக்கிறது நாவல். கடைசியில் ஒரு சோக முடிவு நிகழ்கிறது. என்ன? என்பதை நாவலை படித்துப்பாருங்கள்.......

இன்றும் கேரள மக்களிடத்தில் செம்மீன் நீங்காத இடம்பிடித்திருப்பது நாவலின் சிறப்பு.........

செம்மீன் நாவல் படித்தபின் அந்த திரைப்படத்தையும் பார்க்க வேண்டும் எனும் ஆவல் எழுந்தது. தேடிபிடித்து பார்க்கவும் நேர்ந்தது.
கருத்தம்மாவாக ஷீலாவின் நடிப்பும்,பாடல்களும் கதைக்கு மேலும் உயிர் கொடுத்திருக்கிறது,
....................................பறக்கும்