Baghdad Messi - கால்பந்து காதலன்.

லக கோப்பை கால்பந்து போட்டிகள் கோலாகலமாக தொடங்கிவிட்டது. உலகமெங்கும் இனி கால்பந்து ஜுரம் பரவி விடும். மற்ற விளையாட்டுகளை காட்டிலும் ஆதி காலத்தில் தோன்றியதாக கருதப்படும் கால்பந்திற்கு மட்டும் இனம் மதம் மொழி வயது பேதம் கடந்து உலகமெங்கும் எல்லையற்ற ரசிகர்கள் இருக்கிறார்கள். அசாத்தியமற்ற வாழ்க்கை சூழல் நிகழும் நாடுகளில் வசிக்கும் மக்களும் இதில் அடக்கம். இந்த குறும்படத்தில் வரும் ஈராக் நாட்டைச் சேர்ந்த ஊனமுற்ற சிறுவனான ஹஃமூத் என்பவனும் கால்பந்து ரசிகன்தான். கால்பந்து வீரர் மெஸ்ஸியின் ரசிகனாக இருக்கும் அவன் தினமும் உடுத்தும் உடை கூட மெஸ்ஸி அணியும் எண் 10 கொண்ட ஜெர்சியாகவே இருக்கிறது. கால்பந்து விளையாட்டும் மெஸ்ஸியும் மட்டுமே அவனது வாழ்வின் மகிழ்சியாக இருக்க அதன் மூலம் நிகழும் ஒரு சம்பவம் அவனை புறட்டிப் போடுகிறது.


பார்சிலோனா - மான்செஸ்டர் சாம்பியன் லீக் கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடக்கும் தருணம் தனது வீட்டில் அதனை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கும் ஹஃமூத்திற்கு தடங்கள் நேருகிறது. தொலைக்காட்சி பெட்டி பழுதான நிலையில் தனது சக வயது தோழர்களுடன் அவன் கால்பந்து விளையாடச் செல்கிறான். ஆனால் அங்கு அவனது குறைபாடினால் நிராகரிக்கப் படுகிறான். மேலும் அன்று மாலை பணம் கொடுத்து வேறிடத்தில் கால்பந்து போட்டியை பார்க்கிறான். அங்கிருந்தும் அவன் துரதிஷ்ட வசமாக வெளியேற்றப் படுகிறான். இறுதியில் ஒரு வழியாக தன் தந்தையிடம் மன்றாடி தனது வீட்டிலிருக்கும் தொலைக்காட்சி பெட்டியை சரிசெய்ய சம்மதம் பெறுகிறான். அடுத்தநாள் தன் தந்தையுடன் தானும் சேர்ந்து பழுதான தொலைக்காட்சி பெட்டியை எடுத்துக் கொண்டு நகரத்திற்கு செல்கிறான். நகரத்தில் அது சரிசெய்யப்பட்டு வீட்டிற்கு திரும்பும் வேளையில் அசம்பாவிதம் ஒன்று அங்கு நிகழ்கிறது. ஹஃமூத் அதிலிருந்து மீண்டு தனது வீட்டை அடைந்தானா? வழக்கமான உற்சாகத்துடன் கால்பந்து போட்டிகளை கண்டு ரசித்தானா? என்பதுதான் இந்த உருக்கமான இந்த குறும்படத்தின் மீதிக்கதை.

இந்த குறும்படத்தில் ஊனமுற்ற சிறுவன் ஹஃமூத்தாக நடித்த அலி அல் - ஜெய்தாவி (Ali al - Zaidawi) ஈராக் குர்திஸ்தான் கலவரத்தில் நிஜமாகவே தன் கால்களை இழந்தவன். இந்த குறும்படம் உலக அளவில் புகழ்பெற கால்பந்து வீரர் மெஸ்ஸியின் பார்வையும் அவன் மீது பட்டது. மெஸ்ஸி தனது அரக்கட்டளை வாயிலாக அந்த சிறுவனுக்கு உதவி செய்ய தனது பள்ளிப் படிப்பு கால்பந்து விளையாட்டு இரண்டையும் அவன் தற்போது இனிதே தொடர்ந்து வருகிறான்.

📎

  • Baghdad Messi
  • Written & Direct by - Sahim Omar Kalifa
  • Music - Hannes De Maeyer
  • Screenplay - Sahim Omar Kalifa, Kobe Van Steenberghe
  • Cinematography - Robrecht Heyvaert, Kobe Van Steenberghe
  • Country - UAE & Belgium
  • Language - Arabic
  • Year - 2012.