Day and Night - வாழ்க்கையின் நிலையற்ற தன்மை

பிறப்பு-இறப்பு இவற்றில் தொடங்கி ஆண்-பெண், நட்பு-பகை, இன்பம்- துன்பம், சிரிப்பு-அழுகை, வெற்றி - தோல்வி, மேல்-கீழ் , இடம்-வலம், முன்-பின், என வாழ்க்கை  இருவேறு பரிணாமங்களை கொண்டது. இரண்டும் வெவ்வேறாயின் மாறி மாறி சூரியன்-நிலவு போல தினமும் தோன்றி மறைந்து நிலையில்லாமல் பகல்-இரவாக அது நம் நாட்களை கடத்துகின்றது. அதாவது இதுவும் கடந்து போகும் எதுவும் நிரந்தரமில்லை என்பதற்கு இந்த பரிணாமங்களே உதாரணமாக திகழ்கிறது. இந்த குறும்படம் அந்த பரிணாமத்தை, வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை, மிகப்பெரிய தத்துவத்தை நமக்கு வேடிக்கையாக காட்டுகிறது.


2010 ஆம் ஆண்டு வால்ட் டிஸ்னி தயாரித்த இந்த குறும்படத்தின் தொடக்கத்தில் பகல் இரவு என்ற இரண்டு அனிமேஷன் கதாபாத்திரங்கள் திரையில் தோன்றுகின்றன. பகல் தன் அழகை இரவிடம் காட்டுகிறது. இரவு பகலின் வனப்பில் மயங்குகிறது. பிறகு இரவு தனது மாயாஜாலத்தை பகலிடம் காட்டுகிறது. இரண்டும் தங்களைப்பற்றி பெருமையாக ஒவ்வொருவராக மாற்றி மாற்றி காட்டிக்கொள்ள கடைசியில் பகல் இரவாகவும் இரவு பகலாகவும் மாறி முன்பே குறிப்பிட்டது போல் வாழ்க்கையின் நிலையற்ற மாறும் அந்த இரண்டு பரிணாமங்களை  நமக்கு அழகாக உணர்த்துகிறது.



📎
  • Day & Night. 
  • Written & Directed by - Teddy Newton.
  • Editing - Greg Snyder.
  • Music - Michael Giacchino.
  • Studio - Pixar.
  • Country - United States.
  • Language - English.
  • Year - 2010.