☰ உள்ளே....

Paper man - காதலாகி.ஆண்பாலோ, பெண்பாலோ எதிர்பாலை ஈர்க்க சிறுவயதில் காகிதத்தில் ராக்கெட் செய்து காற்றில் பறக்கவிட்ட அனுபவம் அனைவருக்கும் இருக்கும். விளையாட்டாகவோ, விபரீதமாகவோ அது பறந்து சென்று திருப்பிக் கொண்டு வந்த நினைவுகள் அனைத்தும் பசுமையாக இருக்கும். இந்த குட்டி அனிமேஷன் சினிமாவின் கதாநாயகனும் அதுபோலத்தான் காகித ராக்கெட்களை செய்து விடுகிறான். அவை அனைத்தும் அவனை அழகிய காதலிடம் கொண்டு சேர்க்கிறது .

ஜார்ஜ் தான் தினசரி அலுவலகம் செல்லும் ரயில்நிலையத்தில் காத்திருக்கும்போது தவறுதலாக தன் கையிலிருக்கும் காகிதங்களை பறக்க விடுகிறான். அவற்றில் ஒன்று அங்கு வரும் மெக் என்பவளின் முகத்தில் விழுகிறது. அவளது உதட்டுச் சாயத்துடன் அந்த காகிதம் ஜார்ஜின் கைக்கு திரும்பக் கிடைக்கிறது. இந்த வேடிக்கையில் இணைந்த இருவரும் பிரியும் நேரத்தில் கண்களால் உணர்வுகளை பரிமாறிக் கொள்கின்றனர். ஜார்ஜ் அலுவலகம் வந்தபின்பும் ரயில் நிலையத்தில் பார்த்த மெக்கின் நினைவாகவே இருக்கிறான். அவள் உதட்டுச் சாயம்பட்ட காகிதத்தை கையிலே வைத்திருக்கிறான். எதேச்சையாக ஜார்ஜ் வேலை பார்க்கும் அலுவலக கட்டிடத்தின் அருகே மெக் தென்படுகிறாள். ஜார்ஜ் அவளைப் பார்த்த மகிழ்ச்சியில் கூச்சலிட, அலுவலகத்தில் இருக்கும் மற்றவர்கள் அவனை கவணிக்கின்றனர். ஜார்ஜ் தனது அலுவலக கட்டிடத்திலிருந்து அடுத்த கட்டிடத்திலிருக்கும் மெக்கை தன்பால் ஈர்க்க தன் மேசையிலிருக்கும் காகிதங்களால் ராக்கெட்களை செய்து அவளை நோக்கி விடுகிறான். அனைத்தும் தோல்வியில் முடிய தன்னிடம் இருக்கும் மெக்கின் உதட்டுச் சாயம்பட்ட அந்த கடைசி காகிதத்தையும் ராக்கெட்டாக செய்து விடுகிறான். இதற்கிடையில் மெக் தான் வந்த வேலை முடிந்து அடுத்த கட்டிடத்திலிருந்து வெளியேற, ஜார்ஜ் பறக்கவிட்ட காகித ராக்கெட் மெக்கை அடைந்ததா? ஜார்ஜ் அவளை கவணிக்க வைத்தானா? இருவரும் மறுபடியும் சந்தித்தார்களா? என்பதை கொஞ்சம் நகைச்சுவையும், கொஞ்சம் காதலும், பால்யகால நினைவுகளையும் கலந்து அழகாக காட்டுகிறது ஆஸ்கார் வரை வென்ற இந்த குட்டி சினிமா.


Directed by - John Kahrs.
Story by - Clio Chiang, Kendelle Hoyer.
Music - Christophe Beck.
Studio - WaltDisney.
Country - USA
Language - English.
Year - 2012.