வத்தைக்குழம்பு ரசம் ராஜா.



திங்கட்கிழமை மதியம் வெறும் வயிற்றில் தொடங்கும் அந்த குழப்பம். இன்னக்கி எங்க சாப்பிடலாம்? என்ன சாப்பிடலாம்?. மதியம் தொடங்கி இரவு கடந்து அடுத்த நாள் செவ்வாய் புதன் என அந்த குழப்பம் தொடர்ந்து கொண்டே இருக்கும். குழப்பத்தின் நடுவே எதோவொரு ஹோட்டலையோ மெஸ்சையோ கையேந்தி பவனையோ தேடிப்பிடித்து இரைப்பைக்கு இரைபோட்டால் எப்படா வீட்டிற்கு (சொந்த ஊருக்கு) போகலாம் என பசிக்கும். ஞாயிற்றுக்கிழமை அல்லது விடுமுறை தினத்தில், வீட்டில், என்னடா சமைக்க சிக்கனா? மட்டனா? என அம்மா கேட்க, அதெல்லாம் ஒன்னும் வேணாம் வத்தக்கொழம்பும் முட்டை பொடிமாசும் வை, இல்லைன்னா ரசம் வச்சி உருளைக் கிழங்கு வறுத்து வை என சொன்னதும் தயாராகும் பாருங்கள் அந்த சாப்பாடு, அடடா! தேவர்கள் அசுரர்கள் பாற்கடல் மேருமலை வாசுகிபாம்பு இல்லாமல் அவள் கைப் பக்குவத்தில் கிடைக்கும் அமிர்தம். அதுபோலத்தான் ராஜாவின் பாடல்களும். என்னதான் ஹிந்தி ஆங்கிலம் தெலுங்கு மலையாளம் பெங்காலி பாப் ராப் ஜாக் ராக் என பாடல்களைத் தேடித் தேடி அலைந்தாலும் கடைசியில் ராஜாவிடம் தாயன்போடு சரணடைவது பரம ஆனந்தமாய் அமையும்.


ஹெட்போனில் காதலிபோல் காதில் சினுங்காமல் சில நேரங்களில் பாடல்களை கொஞ்சம் எல்லோரும் கேட்கட்டுமே என ஒலிக்கவிடுவதுண்டு மற்ற பாடல்கள் என்றால் ஒருவருக்கு பிடிக்கும் மற்றவர்களுக்கு பிடிக்காது என ரசனை மாறும் ஆனால் ராஜாவிற்கு மட்டும் அது விதிவிலக்கு அவரது பாடல் ஒலிக்கும் இடம் முழுவதும் வியாபித்து கிடக்கும். அதுதான் இளையராஜா ஸ்பெஷல். ராஜாவின் பாடல்கள் சிலவற்றை பலமுறை தொகுத்திருக்கிறேன் அதன் தொடர்ச்சியாக அடியேன் ரசிக்கும் டூயட் பாடல்கள் சிலவற்றை அந்த வத்தைக்குழம்பு ரசம்போல ருசியோடு அமிர்தமாக இங்கு அசைபோடுகிறேன்.

பாடல்களைக் காண