☰ உள்ளே....

Mashup with Vidya Vox.சை பிரியர்களுக்கு மிகவும் பரிச்சியமான வார்த்தை Mashup. இந்த Mashup Song என்றால் என்ன?.

ஒரு கப் நறுக்கிய வெங்காயம், இரண்டு தக்காளி, கவுச்சி பிரியரென்றால் இரண்டு முட்டை, நான்கைந்து பச்சை மிளகாய், மதியம் வைத்த குருமா, கொஞ்சம் கருவேப்பிலை, அதனுடன் கொத்தமல்லி, சிறிதளவு மிளகுத்தூள் இவற்றோடு ஏற்கனவே சுட்டு வைத்த புரோட்டாவை பிய்த்துப்போட்டு தாளத்தோடு தோசைக் கல்லில் கொத்தினால் சுவையான கொத்து பரோட்டா ரெடி என்பதற்கேற்ப பிரபலமான பல மொழிப் பாடல்கள், அல்லது பிரபலமானவர்களின் பாடல் தொகுப்புகள், கொஞ்சம் ராகம், கொஞ்சம் தாளம், கொஞ்சம் பல்லவி இவற்றோடு ஸ்ருதிஹாசன் சேர்ந்து தமக்கு தெரிந்த வாத்தியங்களின் கலவையில் பாடல்களை கொத்துவதே Mashup Song எனப்படும். யூ-டியூபில் தேடினால் இவ்வாறான பாடல்கள் எக்கச்சக்கம் கிடைக்கும். சில நேரங்களில் இசைக்கான தனி சேனல்களிலும் அவற்றை தரிசிக்கலாம்.

வேடிக்கையாகச் சொன்னாலும் அவ்வாறான பாடல்களில் சில ரசிக்கத் தக்கவையாகவும் சுவையானதாகவும் இருக்கிறது என்பதே உண்மை. அந்த வகையில் அவ்வாறான பாடல்களை உருவாக்குபவர்களில் கொஞ்சம் கவணிக்க வைப்பவர் "வித்யா ஐயர்" (Vidya Iyer). அமேரிக்காவில் வசிக்கும் வித்யா தன் சகோதரி வந்தனா மற்றும் நண்பர்களுடன் இணைந்து 2015-ல் விண்ணைத்தாண்டி வருவாயா ஹோசானா பாடலை Ellie Gouldling -ன் Love me Like You Do பாடலுடன் இணைத்து அழகான Mashup பாடலாக யூ-டியூபில் வெளியிட்டார். முதல் பாடலே 90 மில்லியன் பார்வைகளை அள்ள, தற்போது தமிழ் ஆங்கிலம் தெலுங்கு மலையாளம் கண்ணடம் மற்றும் பிரெஞ்சு என பல மொழிகளில் பல பாடல்களை இவ்வாறு Mashup ஆல்பமாக "Vidya Vox" என்ற பெயரில் வெளியிட்டு வருகிறார். மற்றவர்களோடு ஒப்பிடும்போது வித்யா முறைப்படி D.K. பட்டம்மாள் அவர்களின் சகோதர் D.K நடராஜன் என்பவரிடம் கர்நாடக சங்கீதம் பயின்றவர் என்பதால் பாரதியார் பாரதிதாசன் மற்றும் இலக்கியம் ததும்பும் தமிழ் பாடல் வரிகளை அவரது ஆல்பங்களில் கொஞ்சம் கலவையாக கேட்கும் வாய்ப்பு கிடைக்கிறது. பாடல்களை வரைமுறை இல்லாமல் தேடும் ரகம் நீங்கள் என்றால் ஒருமுறை அவரது பாடல்களை கேட்டுப் பாருங்கள்.

அடியேன் ரசிக்கும் Vidya Vox பாடல்களில் சிலவற்றை தங்களின் தேடுதலுக்காக அறிமுகப் படுத்துகிறேன்.

Hosanna - Love me Like yo Do.

Kuttanadan Punjayile - Kerala Boat Song.

Ashai Mugam.

Jack Where are you Now.

Pallivaalu Bhadravattakam - Be Free.

Nee Nenaindal.

Blace space - Mental Manadhil.