பஞ்ச தந்திரம்.

பஞ்ச தந்திரம் என்றதும் நமக்கெல்லாம் இரண்டு விஷயங்கள் சட்டென நினைவுக்கு வரும். காட்டில் சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது என விலங்குகளை மையமாக வைத்து சிறுவயதில் கேட்டு ரசித்த வாழ்க்கைக்கு பயனுள்ள பஞ்ச தந்திரகதைகள் மற்றும் கமலின் பஞ்ச தந்திரம் என்ற நகைக்சுவை திரைப்படம். இந்த இரண்டும் குதுகலமானவையே.


முன்பொரு காலத்தில் தென்னிந்தியாவில் மகிலாரோப்பொயம் என்ற ஊரில் அமரசக்தி என்ற மன்னன் வாழ்ந்து வந்தான். அவனது பிள்ளைகளான பகுசக்தி, உக்கிரசக்தி, அனந்தசக்தி என்ற மூவரும் தந்தையின் செழிப்பில் உல்லாசமாக வாழ்ந்தனர். மழைக்குக் கூட பள்ளிக்கூடத்திற்கு ஒதுங்காத படிக்காத முட்டாளாகவும் வளர்ந்தனர். தன் பிள்ளைகளின் நடத்தையைக் கண்டு மன்னன் பலநாட்கள் மனம் கலங்கினான். அவர்களை நல்வழிப்படுத்த சிறந்த ஆசான் ஒருவரை தேடினான். விஷ்ணு சர்மா என்ற பண்டிதரைப்பற்றி கேள்விப்பட்டு தன்மகன்களை அவரிடம் ஒப்படைத்தான். முட்டாள்களான அவரது மூவரையும் நல்வழிப்படுத்த விஷ்ணு சர்மா தினமும் எளிய கதைகளை அவர்களுக்கு புரியும்படி சொல்ல ஆரம்பித்தார் அதனூடே வாழ்க்கை நெறிகளையும் அரசியல் தந்திரங்களையும் புகுத்தினார். ஆர்வமுடன் கதைகளை கேட்ட மூவரும் தெளிவு பெற்றனர். கதையின் கருத்துக்களின் வழியே தம் வாழ்க்கையை மாற்றிக்கொண்டு நாட்டையும் நல்வழியில் ஆட்சி செய்தனர். அந்த மூவருக்காக விஷ்ணு சர்மாவால் சமஸ்கிருதத்தில் கி.மு 200 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதுதான் பஞ்ச தந்திரகதைகள்.

திரைப்படத்தை எடுத்துக் கொண்டால் கமல் + கூட்டணி, பிரஞ்சு தாடி, பிரிந்த மனைவி, பெங்களூர் டிரிப், பர்த்டே பார்ட்டி, ஜெயராமின் இங்கி பிங்கி பாங்கி , மேகி, டெட்பாடி, வைரம், ராம் ஒரு கதை சொல்லேன் தேவயானி, சின்ன கல்லு பெரிய லாபம், ஓட்டைவாய் யூகி சேது என அனைத்தும் நம்மை மகிழ்வித்தவைகளே.

அது போகட்டும்... பஞ்ச தந்திரம் என்றால் என்ன?

அரசன் எப்படி இருக்க வேண்டும்? அமைச்சர் எப்படி நடக்க வேண்டும்? மக்கள் இப்படித்தான் வாழ்க்கையை வாழவேண்டும் என்பதற்கு நமது முன்னோர்கள் அந்த காலத்தில் பல நெறிமுறைகளை வகுத்து வைத்திருக்கின்றனர். ஆனால் தற்போது நிலவும் சூழ்நிலையில் அந்த நெறிமுறையான வாழ்க்கையை ஒருவன் கடைசிவரை கடைபிடித்து வாழ முடியுமா? என்பது சந்தேகம்தான். அதனால் என்ன? முடிந்தால் பார் இல்லையென்றால் இந்த ஐந்து அம்சங்களை வைத்து எப்படியாவது பிழைத்துக்கொள் என ஐந்து தந்திரங்களையும் நமக்காக அவர்கள் அளித்திருக்கின்றனர். அவைகளே பஞ்ச தந்திரங்கள் என அழைக்கப்பட்டன. அதாவது எப்படியோ வாழ்ந்தாக வேண்டும் என்பதற்கான ஐந்து தந்திரங்கள். அவைகள்

1. நட்பை கெடுப்பது (நண்பனை இழந்து பகைவனை பெறுவது).
2. நட்பை பெறுவது (பகை ஏற்படாமல் இருக்க தன்மோடு இணக்கமானவர்களோடு மட்டும் கூடி வாழ்வது).
3. அடுத்துக் கெடுப்பது (பகை உண்டானால் பகைவனோடு உறவாடி அவனை கெடுப்பது).
4. அடைத்தல் அழிப்பது (கையில் கிடைத்ததை எல்லாம் அழிப்பது).
5. ஆராயமல் செய்வது (எந்தவொரு காரியத்தையும் ஆராயாமல் வந்தால்  மலை போனால் முடி எனத் தொடங்குவது).

சஸ்கிருத மொழியில்

1. மித்ர பேதம் - Mitra-bheda.
2. சுகிர்லாபம் - Mitra-Samprapthi.
3. சந்திர விக்ரஹம் - Kakolukiyam.
4. லப்தகானி - Labdhapranasam.
5. அசம்ரேசிய காரித்வலம் - Apariksitakarakam.

நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ எதோ ஒருவகையில் இந்த பஞ்ச தந்திரத்தை பிடித்துக் கொண்டுதான் நம் பிழைப்பு ஓடிக் கொண்டிருக்கிறது. அதனைத் தெரிந்துதான் நம் முன்னோர்கள் அழகாக தொகுத்தும் வைத்திருக்கிறார்கள் போலும். பிழைத்துக் கொள்வோம் தந்திரமாக.