☰ உள்ளே....

My Current Status.


நாளைக்காவது
சம்பளம் வருமா?

1000
500 ரூபாய் நோட்டு
எப்பொழுது கிடைக்கும்?

எந்த ஏடிஎம்
திறந்திருக்கும்?

தாடிக்காரர்
நல்லவரா?
கெட்டவரா?

கொலையா
இயற்கை மரணமா?


அம்மாவா?
சின்னம்மாவா?

இலை
துளிருமா?
கருகுமா?

சூரியன்
எங்கே?

தல 57
எப்பொழுது வெளிவரும்?

2017 எப்படி
கொண்டாடலாம்?

டெஸ்ட் மேட்ச்
ஸ்கோர் எத்தனை?

"வர்தா"
இருக்கா?
தொலைந்ததா?

ரமணன்
என்ன செய்கிறார்?

கரண்ட்
எப்ப வரும்?

டேட்டா எப்ப
சரியாகும்?

யார் அந்த
மிஸ்டுகால்?

நேற்று கேட்ட முத்தம்
(வாட்ஸ்அப்பில்)
கிடைக்குமா?
கிடைக்காதா?

நாளைக்கு
என்ன ஸ்டேடஸ்
(பேஸ்புக்கில்)
போடலாம்?

மைதா ரொட்டி
இரண்டு வாழைப்பழம்
வேர்கடலை
அரைபாக்கெட் கிங்ஸ் சிகரெட்
கொஞ்சம் குடிக்க தண்ணீர்
சில புத்தகம்
காற்று
மழை
குளிர்
பசி
தனிமை
மற்றும்
நான்.

- சென்னையில்
பத்திரமாக இருக்கிறேன்.