☰ உள்ளே....

லைஃப்பாய், லக்ஸ், விம் (Lifebuoy, Lux, Vim).அருவிலிருந்து நீர் கொட்ட  "ஆரோக்கிய வாழ்வினையே காப்பாற்றும் லைஃப்பாய். லை.....பாய்" என ஒரு குடும்பம் தூரத்தில் குளிக்க சிவப்பு நிற உறையில் பவள நிறத்தில் இருக்கும் சோப் மிக அருகில் கண்ணுக்குத் தெரிவது போன்ற விளம்பரத்தை எளிதில் யாராலும் மறக்க முடியாது. சினிமா தியோட்டர்களிலும் தூர்தர்ஷன் சேனலிலும் குறைந்தது 10 முறையாவது காண்பிப்பார்கள். அதேபோல் பிரபல நடிகை சிக்கென டவலில் வந்து கொஞ்சம் மங்கலான குளியலறையில் குளித்து முடித்துவிட்டு நம்மை நோக்கி ஒரு கையில் டவலையும் மறு கையில் சோப்பையும் விழாமல் பிடித்துக் கொண்டு ஒரு மார்கமாக "என் மேனி அழகிற்கு லக்ஸ்" -பத்தில் ஒன்பது ஸ்டார்கள் பயன்படுத்துவது என சொல்ல பார்த்திருப்போம். விம் இல்லைன்னா முனியம்மா பாத்திரம் வெளக்க வரமாட்டாளாம்" என ஒரு இல்லத்தரசி தன் கணவனிடம் புலம்ப, நறுக்கிய எலுமிச்சை பழங்கள் உருண்டோட 'பாத்திரங்களும் கைகளும் பளபளக்க விம்" என்ற விளம்பரமும் நமக்கு நன்கு பரிச்சியமானதே. இந்த மூன்று விளம்பரங்களில் வரும் பொருட்களுக்கு ஒற்றுமை இருக்கிறது. மூன்றும் அனைவரும் நன்கறித்த பொருள், மூன்றும் நூற்றாண்டைத் தாண்டிய தயாரிப்பு, மூன்றும் ஒரே தயாரிப்பு நிறுவனத்தைச் சார்ந்தது. வாருங்கள் அந்த மூன்றின் சுவாரசியங்களை பார்த்துவிடலாம்.

Leaver Brothers.

பிரிட்டனைச் சேர்ந்த "Willam Heskerh Lever" மற்றும் அவரது சகோதரரான "Darcy Leaver" இருவரும் இணைந்து 1885 ஆம் ஆண்டு "Lever Brother's" என்ற நிறுவனத்தைத் தொடங்கினர். தத்தையின் தொழிலை கைவிட்டுவிட்டு சோப்புகளை வாங்கி விற்றுக்கொண்டிருந்த அவர்களுடன் வேதியியல் படித்த "William Hough Watson" என்பவரும் இணைய தாமே சோப்புகளை சொந்தமாகத் தயாரிக்க முடிவு செய்தனர். கிளிசரின், பனை எண்ணெய், தாவர எண்ணெய் மற்றும் ஆடு, மாடு, பன்றியிலிருந்து பெறப்படும் கொழுப்பு எண்ணெய் (Tallow) இவற்றைக்கொண்டு "சன் லைட்" (Sun light soap) என்ற பெயரில் துணிகளை வெளுக்கும் சோப்பை முதன்முதலாகத் தயாரித்து வெளியிட்டனர். சன் லைட் உலகமெங்கும் பிரபலமாக அடுத்தகட்டமாக குளியல் சோப்பு, சேவிங் கிரீம், ஷாம்பு, என ஒரு டஜனுக்கு அதிகமான அழகுசாதனப் பொருட்களை தயாரித்தனர். 1930 ஆம் ஆண்டு இவர்களின் நிறுவனமும் டச்சுநாட்டை சேர்ந்த "Margarine Unie" என்ற நிறுவனமும் கூட்டுசேர்ந்து "Unilever" எனும் மாபெரும் நிறுவனத்தை தொடங்கினர். நெதர்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் இதனின் தற்போதைய தயாரிப்புகளும், சந்தை நிலவரமும் வாயை பிளக்கச் செய்பவை.

லைஃப்பாய் (Lifebuoy).


துணிகளை வெளுக்கும் சோப்பு தயாரிப்பின் வெற்றியை ருசித்த Lever Brother's நிறுவனம் 1895 ஆம் ஆண்டு குளியலுக்கு பயன்படுத்தும் சோப்பை தயாரிக்க நினைத்தனர். அந்த காலகட்டத்தில் மிகவும் பிரபலமான பியர்ஸ் (Pears) சோப்பின் வேதியியலை தெரிந்துகொண்டு அவற்றில் சில மாற்றங்களை புகுத்தி லைஃப்பாய் (Lifebuoy) தயாரித்தனர். பவளநிறத்தில் செவ்வகமாக வடிவமைக்கப்பட்டு பீனால் (Phenol) என்ற வேதிப்பொருள் நிறைந்த கார்பாலிக் (Carbolic) சோப்பாக லைஃப்பாய் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்ப காலகட்டத்தில் உள்ளூர்களில் ஓரளவிற்கு விற்பனை இருந்தபோதிலும் உடல் துர்நாற்றத்தை போக்கவும் கிருமிநாசினியாகவும் பயன்படும் என 1920-ல் விளம்பரப்படுத்தப்பட்டு பணக்கார நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பின் அதன் விற்பனை எழுச்சிகண்டது. இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் கூட அதன் வளர்ச்சி அபரிவிதமாக இருந்தது. 1923 முதல் 1950 வரை அமேரிக்கா முழுவதும் லைஃப்பாய் கொடிகட்டி பறந்தது. சலிப்புடன் யாராவது ஒரு அமேரிக்கர் கைகளை மேலே தூக்கினால் கூட லைஃப்பாயின் வாசமே வீசியது. அதனைத் தொடர்ந்து சிவப்பு மற்றும் மஞ்சள் நிற அட்டைப் பெட்டியில் அதே நிறம், அதே மனம், அதே வடிவம், அதே கனத்துடன் 50 வருடங்கள் சோப்புலகின் ராஜாவாக திகழ்ந்தது. 1952- க்கு பிறகு லைஃப்பாயில் மேலும் சில நறுமணங்களைச் சேர்த்தனர் 1970 -களில் வெள்ளைநிற லைஃப்பாயும் அறிமுகப்படுத்தப்பட்டது. பிறகு வந்த காலகட்டங்களில் உலகின் மூலைமுடுக்கெல்லாம் சென்று அப்பாடா ஆறு மாதத்திற்கு குளிக்க சோப் வாங்க வேண்டாம் என்ற நிம்மதியை மனதிற்கும், குளித்த சுகத்தையும் உடலுக்கும் தந்தது. இன்றுவரை உலகில் அதிகம் விற்பனையான குளியல் சோப்பு என்ற சாதனையை லைஃப்பாயே தக்கவைத்துள்ளது.

லக்ஸ் (Lux).


1925 சன்லைட் சோப் சக்கைபோடு போட Lever Brother's நிறுவனத்தார் கைகளை சுத்தம் செய்யவும் தலை குளிப்பதற்கான கிரீம்களையும் தாயாரிக்க தொடங்கினர். "Sun light flakes" என பெயரிடப்பட்ட அந்த கிரீம்களின் வாசணை பெண்களை கவர அவற்றில் சிறிது மாற்றம் செய்து "Lux flakes" என பெயரிட்டு விற்பனை செய்தனர். Lux என்றால் Luxury அழகு என்று பொருள். அதுவும் வெற்றியடைய பெண்களுக்கென்று தனியாக சோப் தாயாரிக்கும் யோசைனை அவர்களுக்கு தோன்றியது. பெண்களின் மேனி அல்லவா மென்மையாக உரசவேண்டும் என்பதற்காக பால், தேன், ரேஜா இதழ், பன்னீர் மேலும் சிலவற்றை சாதாரண சோப்புடன் கலந்து லக்ஸை தயாரித்னர். லண்டனில் வெளியாகும் "Ladies home Journal" என்ற பத்திரிகையில் "Made as Fine as French Soap" என முதன்முதலில் விளம்பரம் செய்து லக்ஸை வெளியிட அது மேல்தட்டு மக்களை வெகுவாக சென்றடைந்தது. 1940 ஆம் ஆண்டு "Deanna Durbin" என்ற நடிகை "எனது வயது 31 பார்த்தா அப்படியா தெரியுது ஏன்னா? நான் லக்ஸ் யூஸ் பண்ணுரேன்" என முதன் முதலாக புத்தகங்களிலும் சுவர் விளம்பரங்களிலும் புல் மேக்கப்போடு பல் இளிக்க, சாதாரண பெண்களின் குளியளரையிலும் லக்ஸ் நுழைந்தது. (இவரே லக்ஸ் சோப்பின் அட்டப்பெட்டியை அலங்கரித்த முதல் நடிகை). அதுவரை வீட்டுக் குளியரையில் இருந்த ஒரு சோப்பு டப்பா இரண்டானது, இது உன்னுடையது அது என்னுடையது என சோப்புபோடும் கணவர்களுக்கு தொடாதே! என கட்டளையிடப்பட்டது. 1950 -ஆம் ஆண்டு "Derborah Kerr" மற்றும் "Samantha Eggar" என்ற நடிகைகள் லக்ஸைப் பற்றி மனம் "திறந்து" பேச (ஓப்பன் ஸ்டேட்மென்ட்) அதற்கு நட்சத்திர அந்தஸ்த்து கூடியது. அன்றுமுதல் லக்ஸ் விளம்பரங்களுக்கு நடிகைகளை பன்படுத்தும் பழக்கமும் தொடங்கியது. லக்ஸ் பெண்களின் மேனி அழகை மெருகேற்றியது என்பதைவிட அகில உலக நடிகைகள் பலரை டவலோடு ஈரம் சொட்ட சொட்ட (விளம்பரங்களில்) தரிசிக்கும் புண்ணியத்தை கொடுத்தது.

விம் (Vim).


அழகு சாதனப்பொருட்கள் தயாரிப்பில் முதல் இடத்திற்கு முன்னேறிய Lever Brother's -ன் தாயாரிப்பே விம் (Vim). கார்களையும் கண்ணாடிகளையும் சுத்தம் செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட விம் பாத்திரங்களை கழுவுவதற்காக பின்னர் மாறிப்போனது. சமையலுக்கு பயன்படுத்தப்படும் சலவைசோடாவே விம்மின் முக்கிய மூலப்பொருள். Vim என்றால் லத்தின் மொழியில் "அழுத்தம்" (Force) என்று பொருள். விம்மிற்கு பெரிதான விளம்பர யுக்திகள் தேவைப்படவில்லை என்றாலும் அந்த காலகட்டத்தில் மிகவும் பிரபமாக இருந்த Monkey brand என்ற பொருளை ஓரங்கட்டிவிட்டு பல இல்லத்தரசிகள் மற்றும் முனியம்மாக்களின் மனதில் விம் எளிதில் இடம்பிடித்தது. 1993 ஆண்டுவரை விம்மை தயாரித்த Lever Brothers (Unileaver) நிறுவனம் ஐரோப்பாவை சேர்ந்த "Spotless Group" என்ற நிறுவனத்திடம் தொழில்சாலையை விற்றுவிட விம்மில் சில மாற்றங்களும் சோப்புக்கட்டி வடிவிலும் விற்பனைக்கு வந்தது. தற்போது விம் தயாரிப்பை Unilever கைவிட்டாலும் அதன் விற்பனை உரிமத்தை அந்த நிறுவனமே கைவசம் வைத்துள்ளது.