உலகின் வயது.



நாம் வாழும் உலகின் வயது எத்தனை இருக்கும்?

4.54 X 109 பில்லியன் வருடங்கள் என கதிரியக்க காலமதிப்பீடு (Radiometric dating) மூலம் அறிவியல் பூர்வமாக கணக்கிட்டு வைத்திருக்கிறார்கள். இதனைத் தவிர்த்து வேறு யாராவது உலகின் வயதை குறித்து வைத்திருக்கிறார்களா? என ஆராய்ந்துப் பார்க்க தேடினால் நமது பஞ்சாங்கத்தில் அதற்கான விடை இருக்கிறது. எந்தவொரு வசதிகளற்ற காலகட்டத்தில் அண்டம் முதல் அணு வரை அசால்ட்டாக அளந்து, போகிற போக்கில் ரைம்ஸாக பாடிவிட்டு (பாடலாக எழுதிவிட்டு) போனவர்கள் நம் முன்னோர்கள். அவர்களை நம்பி இந்த உலகின் தற்போதைய வயதை தெரிந்துகொள்ள அந்த பாம்பு படம் போட்ட பஞ்சாங்கத்தை புரட்டலாம் வாருங்கள்.

இந்த உலகம் தோன்றிய நாளிலிருந்து அதன் வயதை யுகங்கள் என நான்காகப் பிரித்து "சதுர்யுகம்" என பெயரிட்டு கணித்து வந்திருக்கின்றனர் நம் முன்னோர்கள். அதன்படி ஒரு சதுர்யுகம்,

1. கிருதயுகம் - 3360000 ஆண்டுகள்.
2. திரேதாயுகம் - 2520000 ஆண்டுகள்.
3. துவாபரயுகம் - 1620000 ஆண்டுகள்.
4. கலியுகம் - 840000 ஆண்டுகள்.

- என்ற நான்கு யுகங்களையும் மொத்தம் "8340000" ஆண்டுகளையும் கொண்டது . 
இதுவரை உலகம் 27 சதுர்யுகங்களை (27 X 8340000 = 225180000 ஆண்டுகள்) ஷேமமாக கடந்து வந்துள்ளது. தற்போது நாம் 28- வது சதுர்யுகத்தில் கலியுகம் பிரிவில் "5118" வருடத்தில் இருக்கிறோம். அதாவது 28 வது சதுர்யுகத்தில் "7505118" ஆண்டுகளை கடந்து வந்துள்ளோம். இந்த கணக்கின்படி கூட்டி கழித்துப் பார்த்தால் தற்போதைய பூமியின் வயது "232685118" ஆண்டுகள் (225180000 + 7505118).

ஜாதகம், ஜோசியம், பஞ்சாங்கம் இவைகள் அனைத்தும் கட்டுக்கதை என நம்பினாலும் நாம் சிந்திக்க அப்பாற்பட்ட விஷயங்களையும் சில சூத்திரங்களையும் அதில் நம் முன்னோர்கள் குறிப்பிட்டு வைத்துள்ளனர் என்பது வியக்க வைக்கும் உண்மையாகத்தான் இருக்கின்றது.