இடுகைகள்

October, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
☰ உள்ளே....

Hard worker (Mobile Photography) .

படம்

Respect their 'Hands"

படம்

ஏதாவது இருக்கக்கூடும்.

படம்
வேலை-வெட்டி, வெட்டி-வேலை எதுவும் இருக்காது, பெரிதான தேடுதலோ ஐன்ஸ்டீன் ஆராய்ட்சியோ தொடராது, கடந்தகால நினைவுகளோ, எதிர்கால திட்டங்களோ எதுவும் அலையடிக்காது - தெளிந்த நீரோடை போல, நுரைத்துப் பொங்காத பீர் போல, யாருமற்ற தனியறையில் ஓடும் கடிகாரமுள் போல, நெரிசலற்ற இரவுப் பயணத்தைப் போல, மதியம் தூங்கும் மனைவியைப் போல, சீரியல் ஓடாத வீடு போல - சிலசமயம் மனம் அமைதியாக இருக்கும் அந்த தருணங்களில் அடியேன் கேட்கும் பாடல்கள் இவை. கேட்பது மட்டுமில்லாமல் அந்த அழகான அமைதியை சீர்குலைப்பது போல பாடவும் செய்வதுண்டு (நம்ம குரல்வளம் அப்படி). எத்தனையோ பாடல்களை கேட்டாலும் சில பாடல்களை மட்டுமே நாம் உதடுகள் முணுமுணுக்கும் அதற்கு என்ன காரணம் என ஆராய்ந்தால் எதுவுமே இருக்காது என்பதுதான் நிதர்சனமான உண்மை. இந்த பாடல்களும் அந்த வகைதான் ஏன் பிடிக்கும் என்றால்? - ஏதாவது இருக்கக்கூடும்.
Love Yourself - Justin Bieber.
I'm Yours - Jason Marz.
Just The Way You - Bruno Mars.
Let me Love You - Justin Bieber.
Not so Perfect - Johnnie Guilbert.

The Beauty (Mobile Photography) .

படம்

அகம் புறம் அந்தப்புரம்.

படம்
அழகுத் தமிழ், ஆர்ப்பரிக்கும் ஆங்கிலம், அதிரிபுதிரி கணக்கு, அலட்டிக்கொள்ளாத அறிவியல் இவற்றைத்தாண்டி மதிய உணவு முடிந்து எப்படா வீட்டிற்குப் போகலாம் என நினைக்கும் வேலையில்தான்  வரலாறு வகுப்புகள் தொடங்கும், பள்ளிக்கூடத்தில் இருப்பதிலேயே பரமசாது வாத்தியார் வந்து கவணி என பாடத்தை ஆரம்பிப்பார். அவர் தொடங்கிய அடுத்த பத்தாவது நிமிடம் வரலாறு தூங்கிவிடும். வரலாற்று புத்தகங்களை தனியே படிக்கும்போதும் அப்படித்தான் நிகழும் பத்து பக்கங்களைத் தாண்டினால் ...ஆ..ஆ..ஆவ்..வ்.
பள்ளிக்கூடப் பாடம், போட்டித்தேர்வு, ஆராய்ட்சிகள் இவற்றைத் தவிர்த்து சொல்லும் விதத்தில் எளிமையாகச் சொன்னால் வரலாற்றை விட சுவாரசியமான வேறுவிசயம் எதுவும் இருக்காது. அப்படி எழுதப்பட்டு வெளிவந்த வரலாற்று புத்தகங்கள் தமிழில் மிகமிகக் குறைவு அதில் கொஞ்சம் கணத்து (1030 பக்கங்கள்) முன்னிலையில் இருக்கிறது இந்த புத்தகம் முகிலின் "அகம் புறம் அந்தப்புரம்".
இந்த புத்தகம் 1800 முதல் 1950 வரை ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இருந்த 536 இந்திய சமஸ்தானங்கள் சிலவற்றின் வரலாற்றை விவரிக்கிறது. சமஸ்தானம் என்றால் அதற்கு இராஜா இருப்பார், ராணி இருப்பாள…

நிலா.

படம்

The Dark Girls .

படம்

@ evening (Mobile Photography) .

படம்

Les Chevaux De Dieu (Horses of God)- கடவுளின் பெயரால் ...

படம்
கோவையை சேர்ந்த அந்த இளைஞனுக்கு 21 வயதிருக்கும் கட்டுடலாலும் கண்பார்வையாலும் கண்ணியர்களை விழவைக்கும் அழகான தோற்றம் அவனுக்கு இருந்தது. பிரபல கல்லூரியில் பொறியியல் படித்துக் கொண்டிருந்த அவன், கிரிக்கெட் சினிமா, பேஸ்புக், வாட்ஸ்அப், சாட்டிங், டேட்டிங் என அனைவரையும்போல வயதிற்கே உரிய துடிப்புடன் பட்டாம்பூச்சிக் கனவுகளோடு பறந்து கொண்டிருந்தான். சித்தார்த்தனுக்கு போதி மரத்தடியில் ஞானம் கிடைக்கப்பெற்று புத்தனாக மாறியது போல் திடீரென அவனது போக்கு மாறியது. அதனை கவணிக்காத அவனது குடும்பத்தினருக்கும், கல்லூரி நிர்வாகத்திற்கும், நண்பர்களுக்கும் அவனைப் பற்றிய அந்த செய்தி பெரும் அதிர்ச்சியாக இருந்து. கோவையில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதி கைது என்ற பரபரப்புச் செய்தி வெளிவந்தபோது அந்த இளைஞனும் விசாரணை வளையத்திற்குள் வந்தான் பிறகுதான் உண்மை விளங்கியது. அவன் உட்பட சட்டம், மருத்துவம், பொறியியல் படிக்கும் மொத்தம் 12 இளைஞர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அனைவரும் ஐ.எஸ். ஐ.எஸ் அமைப்போடு ஆரம்பக்கட்ட தொடர்பிலிருந்தது தெரியவந்தது. அன்மையில் நமக்கு அருகில் நிகழ்ந்த உண்மைச் சம்பவம் இது.
இன்று உலகமெங்கும் நிகழும் எல்ல…

நாளை.

படம்

Toy Story (Mobile Photography)

படம்

பொனொபோ - ஒருலட்சம்விட்ட தாத்தா...

படம்
நாம் யார்? நாமெல்லாம் எங்கிருந்து வந்தோம்?. குரங்கிலிருந்து பரினாம வளர்ச்சிபெற்று மனிதன் வந்தான் என்பது அனைவரும் அறிந்ததே அதிலும் "Apes" என குறிப்பிடப்படும் கொரில்லா, சிம்பன்சி, உராங்குட்டான் இவற்றோடு நாம் நெருங்கிய தொடர்பில் இருக்கின்றோம். அந்தவகையில் மனிதனின் பண்புகளோடு 98-99.4 % ஒத்த அமைப்புடைய மற்றொரு குரங்கின் (சிம்பன்சியின் அப்டேட் வெர்சன்) இனத்தை கண்டுபிடித்துள்ளனர் அதுதான் "பொனொபோ Bonobo". இவைதான் நமது ஒன்றுவிட்ட தாத்தா மன்னிக்கவும் ஒருலட்சம்விட்ட தாத்தா. மாற்றம் அடையாத அந்த தாத்தாவின் மற்ற வாரிசுகளைப்பற்றி (நம் சொந்தங்களை) தெரிந்துகொள்ள நினைத்தால் மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ காடுகளுக்குச் செல்ல வேண்டும். வாருங்கள் பயணிப்போம்.

1928 ஆம் ஆண்டு ஜெர்மனியை சேர்ந்த உடற்கூறு அறிவியலர் "Ernst Schwarz" என்பவர் பெல்ஜியத்தில் உள்ள Tervuren அருங்காட்சியகத்தில் இருந்த சிம்பன்சியின் மண்டையோட்டை ஆராய்ந்தார், சிறிய சிம்பன்சியின் மண்டையோடு என நினைத்திருந்த அது மற்றதை விட வேறுபட்டு காணப்பட்டது. அதனை நன்கு ஆராய்ந்த அவர் சின்பன்சியைப் போன்று வேறொரு குரங்கின…

Deep Walk.

படம்

கண்ணன் என் காதலன் (பாடல்).

படம்
பாம்பே ஜெயஸ்ரீயின் கண்ணம்மா இசைத்தொகுப்பிலிருந்த பெரும்பான்மையான பாடல்களை இங்கு காட்சிப்படுத்திவிட்டேன். கண்ணன் பாடல் ஒன்றுமட்டும் மீதமிருந்தது. குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா என்பதற்கேற்ப அதையும் முடித்துவிடலாம் எனத் தோன்றியது. பாரதியாரின் வரிகளில் கண்ணன் மீது கொண்ட காதலை சிருங்காரம், ரௌத்ரம் ரஸங்களில் தங்கமே தங்கம் என்ற ஆனந்தத்தில் தலைவி பாங்கியிடம் (உயிர்த்தோழி) உரைப்பது போன்று அமைந்தது இந்த பாடல்.


வளைவு

படம்

My Srilankan Girlfriend (Mobile Photography)

படம்

மொழி...

படம்
முதலில் செய்கை அதற்குப்பின் சப்தம், கொஞ்சும் மழலை என தட்டுத்தடுமாறி ஒரு மொழியை நாம் பேசத் தொடங்குகிறோம். பிறகு விரல்ஜாலத்தில் எழுத ஆரம்பித்து, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்து, மொழிவாரியாக தனித்தனியே அடையாளப்படுத்திக்கொண்டு, பச்சை தமிழன், மஞ்சள் மலையாளி, சிவப்பு தெலுங்கர், கருப்பு கர்நாடகன் என எல்லாவற்றிர்க்கும் சண்டையிட்டுக் கொள்கிறோம். உலகில் மொழிகள் தோன்றிய வரலாறும் இத்தகையதே. ஆதிவாசியாக குகைகளில் வாழ்ந்த மனிதன் தன் உணர்வுகளை வெளிக்காட்ட முதலில் சைகைகளை பயன்படுத்தினான், உணர்ச்சிமிகு நேரத்தில் சப்தங்களை எழுப்பினான், பிறகு அந்த சப்தங்களை மொழியாக மாற்றினான், மொழிக்கு வடிவம் கொடுத்து புதிய இலக்கணங்களைப் படைத்து மொழியை தமக்குத் தக்கவாறு மாற்றியமைத்துக் கொண்டான். இன்று உலகமெங்கும் சுமார் 7000 மொழிகள் வழக்கத்தில் இருக்கின்றன அந்த மொழிகள் தோன்றியதையும் அதன் சுவாரசியங்களையும் பார்க்கலாம்.

உணர்வுகளே மொழியின் மொத்த வடிவம். ஆஹா, ஓஹோ, அய்யோ அம்மா, ஹாய், ஹலோ, நீ ரொம்ப அழகா இருக்க, ஐ லவ் யூ, ஐ ஹேட் யூ போன்ற வார்த்தைகளே மொழி தோன்றும்போது உருவான வார்த்தைகளாக இருக்கக்கூடும் என்கின்றனர் வரலாற்று அறிஞ…

முதல் சந்திப்பு.

படம்

Colour of Life (Mobile Photography) .

படம்

இரயில் பயணங்களில்.

படம்
தொலைதூர இரயில் பயணம் கொடுமை, அதிலும் சோமபானம் சீட்டுக்கட்டு அரட்டை கச்சேரி இவைகள் பழகாத பயணம் மிகக் கொடுமையானது. இரண்டு மூன்று நாட்கள் அரைக்கால் டவுசரோடு, நனைந்தும் நனையாமலும் குளித்து, வழியில் கிடைப்பதை வாரிப்போட்டு நிறம்பாத வயிற்றோடு, குட்டிப்போட்ட பூனை போல் டிடியாரைவிட அதிகமாக கம்பார்ட்மெண்ட் முழுவதும் அலைந்து, மூத்திரவாடை கக்கூஸில் திருட்டுத்தனமாக சிகரெட் பிடித்து, எண்ணங்களையும் நினைவுகளையும் தண்டவாளங்களில் ஓடவிட்டு, பகலில் மரமும், இரவில் நட்சத்திரமும் நகருவதை பார்த்துக்கொண்டே பயணிப்பதை நினைத்தால் பயணத்திற்கு தயாராகும் முன்பே மனதில் மெல்லிய சலிப்பு தோன்றிவிடும். தொலைதூர இரயில் பயணங்களில் பொழுதுபோக்க உதவும் மொபைல், லேப்டாப் போன்ற சாதனங்கள் உயிர் இருக்கும் (சார்ஜ்) வரை சிறிது நேரம் மட்டுமே உடனிருக்கும். புத்தகங்களை பொருத்தவரை அடியேனுக்கு ஆயிரம் பக்கம் கொண்ட இரண்டு மூன்று புத்தகம் தேவைப்படும் அதனையும் தூக்கிச் சுமக்கவேண்டும். இதனை தவிர்த்து ஒவ்வொரு பயணங்களின்போதும் மறக்காமல் கைவசம் எடுத்துச் செல்லும் பொருள் FM ரேடியோ.
இந்தபக்கம் ஆந்திராவையும் அந்தபக்கம் மகாராஷ்டிராவையும் தாண்டினால்…

Feel.

படம்

அன்னா கரினினா.

படம்
இலக்கிய உலகின் இமயம் என போற்றப்படுபவரின் படைப்பு, நூற்றாண்டுகாலம் கடந்த பொக்கிஷம், உலக மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்க்கப்பட்ட நாவல். கலாச்சாரம் ரஷ்யா, உலக புகழ்பெற்ற காதல் கதை என்ற சிறப்புகளோடு இந்த புத்தகத்தை கையில் எடுத்தேன். காதல் என்றால் அழகும் அற்புதமும் உணர்சிகளுக்கான போராட்டமும் முடிவில் சோகமும் (அதுதானே காதலின் குணம்) நிறைந்திருக்கும் என்ற ஐயம் இருந்தது. மொழிபெயர்ப்பின் சிலந்திவலை சிக்கலில் நுழைந்து கவணமுடன் வார்த்தைகளை உள்வாங்கிக் கொண்டு இந்த அற்புத நாவலை ஓர் இரவில் வாசித்து முடித்தேன்.
"முதலில் இழக்கத் தயாராகு பிறகு காதலிக்க தொடங்கு" என்ற உலக பழமொழி உண்டு அதற்கேற்ப கதையின் நாயகி காதலை தொடங்குகிறாள் தன்னையே இழக்கிறாள்.
ஆப்ளான்ஸ்கி (Stepan Stiva Arkadievich Oblonskiy) என்னும் செல்வச்சீமான் குழந்தைகள் பெற்று அழகு குறைந்துவிட்ட தன் மனைவிக்கு துரோகம் செய்துவிட்டு வேறொரு பெண்ணுடன் வாழ்க்கை வாழ்கிறான். அவனது செயலை அறிந்த மனைவி டாலி (Princess Daria Dolly Alexandrovna) குழந்தைகளுடன் கணவனை பிரிய முடிவு செய்கிறாள். இந்த குழப்பத்தில் இவர்கள் இருவரையும் இணைத்துவைத்து சமாதானப்…

எச்சம்.

படம்

Sweet Couples -3 (Mobile Photography) .

படம்

இராஜ வாரிசு (பாடல்கள்) .

படம்
நேரம், காலம், இராசி, சென்டிமெண்ட் இந்த நான்கும் எதையும் விட்டுவைப்பதில்லை, கலையுலகத்திற்கும் கலைஞர்களுக்கும் கூட இது ஏகப் பொருந்தும். ரஹ்மான் இருந்த இடத்தில் விழுந்த சிறிய விரிசலை இசையால் நிரப்பியவர் இந்த இராஜவாரிசு. சிறுவயது முதல் இசைஞானம் நிறைந்திருந்த இவர் முறைப்படி டி.வி. கோபாலகிருஷ்ணன் என்பவரிடம் கர்நாடக சங்கீதமும், மலையாள இசையமைப்பாளர் வி. தெட்சிணாமூர்த்தி என்பவரிடம் இசை நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டார். வீடு முழுவதும் இசை வியாபித்திருக்கும் அணுக்கிரகம் கிடைத்த அவருக்கு இசைஞானியே தந்தையாக வாய்க்கப்பட்ட கடவுளின் கிருபையும் இருந்தது. பியானோ மற்றும் கீபோர்டு வாசிப்பதில் தனித்து விளங்கிய இவர் 14 வயதில் தம் தந்தையின் சில திரைப்படங்களில் தான் பயின்றதை வாசித்துக் கொண்டிருந்தார். அலெக்சாண்டர் என்ற தமிழ் திரைப்படத்திற்கு முதன்முதலில் தனித்து இசையமைக்க, அதற்குப் பிறகு வெளிவந்த மாணிக்கம் திரைப்படம் இவரை கவணிக்க வைத்தது. மனதை கவரும் மென்மையான பாடல்களாலும் பின்னணி இசையாலும் நம்மை கட்டிப்போட்ட இவரது திரையுலக இசை வாழ்க்கையில் மேலே குறிப்பிட்ட நான்கும் குறுக்கிட புதிய வாய்ப்புகள் குறைந்தது. இன…

உன் பெயர்.

படம்

ஊ..லலல்லா. (A Magical Song - Bombay Dreams).

படம்
எப்பொழுதும் விவாதத்திலும் குழப்பத்திலும் இருக்கும் ஐ.நா சபையை இசையால் மயக்கும் வாய்ப்பு ரஹ்மானிற்கு கிடைத்திருக்கிறது. அவரது இசை வாழ்க்கையில் மற்றுமொரு மைல்கல்.(இந்த வாய்ப்பை பெறும் இரண்டாவது இந்தியர்). இந்த வளர்ச்சிக்கு 2002 ஆம் ஆண்டு ரஹ்மான் லண்டனில் நடத்திய "Bombay Dreams" நிகழ்ச்சியும் ஒரு காரணமாக இருக்கக்கூடும். "Meera Syal" மற்றும் "Thomas Meehan" என்பவர்களின் எழுத்தை அழகிய இசை நாடகமாக அப்போது அங்கு அரங்கேற்றியிருந்தனர். "Don Black" என்பவர் ரஹ்மானின் மெட்டிற்கு மயக்கும் வரிகளை எழுதியிருந்தார். சாதாரண சேரியில் வாழ்க்கை நடத்தும் ஆகாஷ் என்பவனின் பாலிவுட் திரையுலகில் பெரிய கதாநாயகனாகும் கனவும், அதனை தொடரும் சிக்கலான காதலும் நாடகத்தின் கதை. ஏற்கனவே இந்திய திரைப்படங்கள் சிலவற்றில் தாம் இசையமைத்த பாடல்களையும் இசைக்கோர்வைகளையும் ரஹ்மான் இதில் பயன்படுத்தியிருந்தார். Bombay awakes, Bombay Dreams, Like an Eagle, Love's never easy, Dont Release me, Shakalaka baby, Ooh la la la என ஒரு டஜனுக்கும் மேலான பாடல்களாலும் பின்னணி இசையாளும் லண்டன்வாசிகளை அ…

வீரம் (a Royal Solute of Indian Army)

படம்