☰ உள்ளே....

ருசியான வாழ்க்கை.


திங்கள்
முத்து மெஸ்,
வள்ளி அக்கா
தள்ளுவண்டிக் கடை.

செவ்வாய்
காரக்குழம்பிற்காக
காரைக்குடி உணவகம்,
நாசர்பாய்
முட்டை தோசை.புதன்
சரவணபவன்
பருப்பு பொடியும்,
பெங்காலி சப்ஜி
சப்பாத்தியும்

வியாழன்
மாங்காய் தொக்கு
வெரைட்டி மீல்ஸ்,
பஞ்சாபி தாபா
பன் பரோட்டா.

வெள்ளி
கீரை மசியலுக்கு
அய்யங்கார் ஹோட்டல்,
இரவு மல்லிகை
இட்லி கடை.

சனி
சந்தேகமே இல்லாத
தலப்பாகட்டு பிரியாணி,
செட் தோசை
வடகறி.

ஞாயிறு
வாய்ப்பிருந்தால்
அம்மா
கைப் பக்குவம்..

-ருசியான வாழ்க்கை..