☰ உள்ளே....

You're getting old!Blood Group, ஜோதிடம், பஞ்சாங்கம், பல்லிவிழும் பலன், அழகு குறிப்புகள், ஜாக்கெட் டிசைன், மருதாணி டிசைன், சாம்பார் வைப்பது எப்படி, சாம்பிராணி போடுவது எப்படி என அனைத்தையும் விளக்கும் ஆண்ராய்டு மென்பொருட்கள் கிடைக்கும் தளத்தில் சில தேடல்களின்போது சுவாரசியமானவைகளும் சிக்கிக்கொள்ளும். அப்படி கிடைத்த ஒரு ஆண்ராய்டு மென்பொருள்தான் "You're getting old". இந்த மென்பொருளில் உங்கள் பிறந்த தேதி, மாதம் மற்றும் வருடத்தை  குறிப்பிட்டால் உங்களைப்பற்றிய, நீங்கள் கடந்துவந்த நாட்களைப் பற்றிய, சுவாரசிய தகவல்களை எந்திரன் ரோபோ ரஜினியைப்போல் துள்ளியமாக ஒப்பிக்கிறது. அடடா! என வியந்து அப்படியே எனது பிறந்த தேதியை இதில் குறிப்பிட்டேன், அது தந்த தகவல்களை கொஞ்சம் பார்க்கலாம் வாருங்கள்.
 • உங்கள் வயது 30 வருடம் 1 மாதம் 24 நாட்கள்.
 • இதுவரை நீங்கள் 11013 நாட்களை வாழ்ந்து தொலைத்திருக்கிறீர்கள்.
 • உங்கள் ராசி ரிஷபம்.
 • உங்கள் கிரகாச்சாரம் பூமி.
 • உங்கள் ராசிக்கல் வைரம்.
 • முதல் வருடம் ஒன்று அடுத்து இரண்டு என இதுவரை நீங்கள் 465 மெழுகுவத்திகளை பிறந்தநாளுக்காக ஊதித் தள்ளியிருக்கிறீர்கள்.
 • இந்த நிமிடம்வரை 1110110400 முறை உங்கள் இதயம் துடித்திருக்கிறது.
 • 269598240 முறை மூச்சுவிட்டு காற்றை கெடுத்திருக்கிறீர்கள்.
 • நீங்கள் பிறந்ததிலிருந்து 403 முறை நிலவு பூமியை சுற்றிவந்திருக்கிறது.
 • 27 September 1987 அன்று நீங்கள்  500 -வது நாளை கடந்தீர்கள்.
 • 8 February 1987 அன்று உங்களுக்கு 1000- வது நாள்.
 • 22 January 2000 அன்று 5000 -வது நாள்.
 • 30 September 2012 அன்று 10000 -வது நாள்.
 • 15 February 2041 அன்று நீங்கள் 20000 நாளை தொடுவீர்கள். (ஆனால்..?).
கொஞ்சம் சுவையாக நீங்கள் வாழ்ந்த நாட்களை இதில் திரும்ப பார்த்துக் கொள்ளலாம். மேலும் உங்கள் பிரியமானவர்களின் பிறந்தநாளுக்கு அவர்களின் தகவல்களை இதுபோல் பெற்று புதுமையான வாழ்த்தாக அனுப்பலாம். வெறும் 1.41 MB அளவு இடத்தை அடைத்துக்கொள்கிறது ஒருமுறை நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்.

மறந்தேவிட்டேன் இந்த மென்பொருள் எனக்கு தந்த கடைசி இரண்டு தகவல்கள் இதோ!
 • You have 37 years left to reach world life expectancy.
 • Life is short Enjoy it.