கடைசி நிமிடங்கள்.




ஹிட்லரைப் பற்றி இதுவரை மூன்று பதிவுகளை இங்கே எழுதியிருக்கிறேன் உலகமகா வில்லன் என்பதால் என்னவோ அவரைப் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் ஒவ்வொன்றும் சுவாரசியமூட்டுகின்றன. அவற்றை புத்தகமாகவோ, டாக்குமெண்டரியாகவோ, சினிமாவாகவோ புரட்டிப் பார்க்கையில் அவர் ஒரு கொடுங்கோலன் என்ற பிம்பத்தையும் தவிர்த்து ஆச்சரியங்களும் பிரம்மிப்பும் கலந்த இரக்கம் ஏற்படுவதை உணரமுடிகிறது. முதல் உலகப்போரில் சின்னாபின்னமான ஜெர்மனியை குறுகிய வருடத்தில் உலகமே திரும்பிப் பார்க்கச் செய்தவர் ஹிட்லர். சிறந்த அரசியல்வாதி, பேச்சாளர், ஓவியன், எழுத்தாளர் என பன்முகம் கொண்ட ஹிட்லர் புகைப்பது கிடையாது (நாடுமுழுவதும் புகையிலைக்கு தடைவிதித்த முதல் தலைவர்), விலங்குகளை நேசித்தவர், இயற்கையை ரசிப்பவர், சுத்த சைவம், கடைசி நேரத்திலும் காதலியை கைவிடாதவர் என உத்தமனாகவே வாழ்ந்திருக்கிறார். உலகையாளும் ஆசையும், எமனே யோசிக்காத வகையில் யூதர்களை கொண்றுகுவித்த விதமும் ஹிட்லரை வரலாறு வில்லனாக்கியது. சர்வாதிகாரத்தின் முடிவை ஒரே மாதிரியாக வைத்திருக்கும் இந்த உலக வாழ்க்கை ஹிட்லருக்கும் விதிவிலக்கல்ல தோற்றுப்போகும் தருணத்தில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தன் உடல்கூட எதிரிகளுக்கு கிடைக்காதவாறு சாம்பலாகிப் போனார் இந்த உத்தமவில்லன். சிறந்த தலைமை பண்பும், போர்த்திறனும் உலகை வெல்லும் மனஉறுதியும் கொண்ட அவரது கடைசிநாட்கள் எப்படி இருந்திருக்கும்? அந்த வரலாற்றுப் பக்கங்களின் கடைசி பத்து நாட்களை கவிதையாக காட்டும் ஜெர்மன் நாட்டுத் திரைப்படம்தான் Down Fall (Der undergang) .

ஹிட்லரின் செகரட்டரியாக வேலைசெய்தவர் Traudl Junge அவரின் அனுபவங்களைக் கொண்டு 2002 ஆம்ஆண்டு வெளிவந்த Blind Spot (I am Total Winkel) என்ற டாக்குமெண்டரியைத் தழுவி எடுக்கப்பட்டது இந்த திரைப்படம். 1920 March 20 Traudl Junge ஹிட்லரின் செகரட்டரி நேர்காணலுக்காக காத்திருப்பதில் தொடங்குகிறது கதை பிறகு இரண்டாம் உலகப்போர் தீவிரமடையந்து முடியும் தருணம் 1945 April 20 ஆம் நாளுக்கு பயணிக்கிறது. நேசநாட்டுப் படைகள் ஒருபுறம் முன்னேர மறுபுறம் ஸ்டாலினின் செம்படை ஜெர்மனியின் தலைநகரான பெர்லீனை நெருங்கி தாக்குகிறது. குண்டுமழை பொழியும் வீதிகளுக்கிடையே ஹிட்லர் "Reichchan Cellery" எனும் இடத்திலிருக்கும் "Fuhrer bunker" எனும் பகுங்கு குழியில் தஞ்சமடைகிறார். விடேசமாக வடிவமைக்கப்பட்ட அந்த கட்டிடத்தை சில வீரர்கள் பாதுகாக்க தன் காதலி Eva Braun மற்றும் நெருங்கிய முக்கிய தளபதிகளின் குடும்பத்துடன் தங்குகிறார்.

தொலைபேசும் கருவி மற்றும் ரேடியோ செய்தியைக்கொண்டு ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் படைகளுக்கு உத்தரவு செய்துகொண்டு முக்கிய தளபதிகள் சிலருடன் விவாதிக்கிறார். ஜெர்மனியின் சிறிய வரைபடத்தைக் கொண்டு தாக்குதல் மற்றும் தற்காத்துக்கொள்ளும் திட்டம் தீட்டுகிறார். நாட்கள் தொலைகிறது ரஷ்யாவின் செம்படை 12 கி.மீ தூரத்தில் நெருங்குகின்றனர். சில தளபதிகள் சரணடைய யோசனை கூறுகிறார்கள், "Folke Bernedorre" என்ற நல்லெண்ணத்தூதர் அனுப்பும் வாய்ப்பையும் ஹிட்லர் நிராகரிக்கிறார். பெர்லீன் வீழ்ந்துவிட்டது என அவருக்குத் தெரியும் வெறும் 700 மீட்டர் தூரத்தில் செம்படைகள் நெருங்க 1945 April 29 ஆம் நாள் ஹிட்லர் தன் தளபதிகளை தப்பித்துப் போகச் சொல்கிறார். முன்பைவிட மனதும் உடலும் சோர்ந்த அவர் கடைசியில் அந்த முடிவை எடுக்கிறார். ஆபத்து காலத்தில் தன்னுடன் இருந்த டாக்டர் Schenck மற்றும் Werner Hasee நர்ஸ் Erne Flegel என்பவர்களுக்கு தன் நன்றியை தெரிவிக்கிறார். கோபமும் உக்கிரமும் நிறைந்த அவர்முகம் சற்று சாதுவாகிறது. தன் வலதுகரமாக விளங்கிய Joseph Goobbels -ஐ வேறு நாட்டிற்கு தப்பித்து சென்றுவிடுமாறு அறிவுறுத்துகிறார் ஆனால் Goobbels அதற்கு மறுத்துவிடுகிறார். அவரது மனைவி  Magda -விற்கு ஹிட்லர் தன்னுடைய மதிப்புமிக்க Golden Party Badge No:1 என்ற பதக்கத்தை பரிசாக அளிக்கிறார் பிறகு தான் ஆசையோடு வளர்த்த "Blondi" என்ற நாயை சுட்டுக் கொள்கிறார்.



கல்லுக்குள் ஈரம் என்பதுபோல் ஹிட்லரின் எண்ணங்களை உணர்ந்தும் அவரை காதலித்தவர் Eva Braun. சிங்கம் போல் வாழ்ந்தாலும் ஹிட்லர் நரிபோல கடைசிவரை ஒரே பெண் துணையுடன் வாழ்ந்தார். தன் கடைசி நாட்களில் Eva Braun -ஐ முறைப்படி திருமணம் செய்துகொள்ளும் ஆசையை ஹிட்லர் தெரிவிக்கிறார், இருவரும் எளிமையாக மோதிரம் மாற்றிக் கொள்கின்றனர் அற்றிரவு திருமண விருந்து நடக்கிறது. 1945 April 30 ஆம் நாள் Eva Braun அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை விழுங்கியிருக்கிறார், சில தளபதிகள் அவர்களின் முடிவை எடுக்கின்றனர். செம்படைகளின் தாக்குதலும் தீவிரமடைகின்றன, ஹிட்லர் விழுந்துகிடக்கும் Eva Braun-ஐ ஒரு கையால் அணைத்துக் கொள்கிறார் மறு கையில் துப்பாக்கியை எடுத்து தன் தலைப்பகுதியில் வைக்கிறார்.

1945 May -1 ஆம் நாள் Goebbels - ன் மனைவி Magda தன் ஆறுவயது குழந்தைக்கு சயனைடு கலந்த நீரை கொடுக்கிறாள்.Goebbels தன் மனைவியை கூட்டிக்கொண்டு தோட்டத்திற்கு சென்று அவளை சுட்டுத் தள்ளுகிறார் பிறகு தானும் சுட்டுக் கொள்கிறார். செம்படைகள் கட்டிடத்திற்குள் நுழைகின்றனர். சில வீரர்களும் தளபதிகளும் அவர்களிடம் சரணடைகின்றனர். ஹிட்லரின் ஆவணங்களும் அவரது உடலும் வெறும் சாம்பலாக அவர்களுக்கு கிடைக்கிறதது. சிறு சிறு வெடிச்சத்தத்தை தவிர வேறெதுவும் கேட்காது பெர்லின் நகரம் அமைதியாகிறது இந்த உலகமும் சற்று அமைதியாகிறது.



2012 ஆம் ஆண்டு நிஜ Traudl Junge திரையில் தோன்றுகிறார் "ஒரு கொடுங்கோலனிடம் வேலை செய்யப்போகிறோம் என எனக்குத் தெரியாது. ஹீட்லர் செய்ததையும் நான் நியாயப்படுத்தவில்லை ஆனால் அவர் எங்களை மிகவும் கண்ணியமுடனும் மரியாதையுடனும் நடத்தினார்" என்ற டாக்குமெண்டரியின் பேட்டியுடன் திரைப்படம் முடிகிறது.

Traudl Junge அவர்களின் பேட்டி..


இரண்டாம் உலகப்போர், ஹிட்லர் துப்பாக்கி, பீரங்கிகள், விமானங்கள் போர்க்காட்சிகள் நிறைந்திருக்கும் என நினைத்தால் , பதுங்கு குழியில் ஹிட்லரின் கடைசி பதட்டமான நாட்களை மட்டுமே மஞ்சள் கவிதையாக காட்டுகிறது இந்த திரைப்படம். போர்க்களத்தை விமானங்கள் பறக்கும் பீரங்கி வெடிக்கும் சப்தத்தை மட்டும் வைத்தே ஒலியாக கொண்டுவந்திருக்கும் பின்னணி சிறப்பு சப்தம் திரைப்படத்திற்கு பெரும்பலம். 

ஹிட்லராக நடித்த "Bruno Ganz" உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்கிறார் பதட்டமான நிமிடத்தையும் உலகையாள நினைத்த ஒருவனின் தோல்வியையும் முகத்தில் கொண்டுவந்து படத்திற்கு உயிரூட்டுகிறார். சிறந்த ஒளிப்பதிவு, இசை, துள்ளியமான கோர்வை இவைகள் படத்தை டாக்குமெண்டரி அளவிற்கில்லாமல் வேரொரு தளத்திற்கு எடுத்துச் செல்கிறது. அதுவே உலகமெங்கும் பல விருதுகளைய அள்ளிக் கொண்டுவரவும் செய்தது. வரலாற்று ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை தவறாமல் பாருங்கள்.

படத்தின் டிரைலர்.



DER UNTERGANG
Down Fall (2004)
Directed by - Oliver Hirschbiegel.
Screen Play - Bernd Eichinger.
Music - Stephan Zacharias.
Cinematography - Rainer Klausmann.
Language - German & Russian.