பதமா ஒரு ஆ...ம்லெட்..

னியன் கொஞ்சம் அதிகமா...பச்சைமிளகாய் போட்டு...பெப்பர் நல்லா தூவி... பதமா ஒரு ஆ...ம்லெட்.


ஃபுல்கட்டு கட்டினாலும், ஃபுல்லோடு கட்டுகட்டினாலும் ஆம்லெட்டோ ஆப்பாயிலோ முட்டையுடன் முடியாத இரவு உணவை பேச்சுலர்ஸ் சுவைப்பதில்லை அதிலும் குறிப்பாக ஆம்லெட். புரோட்டாவிற்கு அடுத்தபடியாக அதிகம் உண்ணப்படும் உணவுவகை இந்த ஆம்லேட். 4G வேகமான இந்த காலச்சூழலில் ஏதோ சாப்பிட்ட திருப்தியை மனதிற்கும், கவுச்சி ருசியை வாய்க்கும் இந்த ஆம்லெட்டே தருகிறது. சீரகம், கருமிளகு, உப்பு மூன்றையும் அம்மியில் வைத்து நசுங்கி, சிறிய வெங்காயம், பச்சைமிளகாயின் விதை தனியாக தோள் தனியாகப்போட்டு நாட்டுக்கோழி, அல்லது வாத்து முட்டையில் எங்கள் கிராமத்தில் செய்யப்படும் இதனை முட்டை அடை என்பார்கள். வெங்காய ரசம், வடகம் துவையல், முட்டை அடை சேர்ந்த பட்ஜெட் விருந்தின் அந்த ருசியோடு இந்த ஆம்லெட்டின் சுவாரசியத் தகவல்களை சுவைக்கலாம் வாருங்கள்.


வேகவைத்து தின்றால் ருசி என கண்டுபிடித்த நமது ஆதிவாசிகள்தான் ஆம்லெட்டையும் கண்டுபிடித்தார்கள். பறவைகளின் முட்டையை வேகவைத்து உண்ட அவர்களில் யாராவது ஒருவர் தங்களின் மனம்விரும்பியவரைக் கவர, காட்டில் கிடைத்த இலை தழைகளை அதனோடு சேர்த்து ஆம்லெட்டை தயாரித்திருக்கலாம் என்கின்றனர் உணவியல் ஆய்வாளர்கள். 14 -ஆம்  நூற்றாண்டின் உணவு வரலாற்றின் பக்கங்களில் ஆம்லெட் இடம்பெறுகிறது. பெண்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை விளக்கும் மேனஜிர் டி பாரிஸ் (Menagier de paris-1393) என்ற புகழ்பெற்ற புத்தகத்தில் ஆம்லெட் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. மேலும் பிரான்கோய்ஸ் ராஃபேலிஸ் (Francois Rabelais) என்பவர் எழுதிய கார்கண்டுவா அன்ட் பாண்டகருவேல் (Gargantua and pantagruel) என்ற புத்தகத்திலும் அம்லெட் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. 1651 ஆம் ஆண்டு பிரான்கோய்ஸ் பியர்ரே டி லவாரேன்னே (Francois Pierre de lavarenne) எழுதிய  ரஷ்யாவின் சமையலுக்கான வேத புத்தமான லீ குயூசினீர் பிரான்கோய்ஸ் (Le cuisinier Francois) புத்தகத்தில் விதவிதமான ஆம்லெட் ரெசிபிகள் செய்முறை இடம்பெற்றுள்ளது. 17 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகுதான் உலகமெங்கும் ஆம்லெட் பிரபலமானது. ஆம்லெட்டின் தாயகம் ரஷ்யா Alumella மற்றும் Alumete என்ற வார்த்தையிலிருந்து வந்ததுதான் Omelette.


மாவீரன் நெப்போலியன் தெற்கு ரஷ்யாவில் உள்ள Bessieres Haute Garonnw என்ற கிராமத்திற்கு தன் படையோடு சென்று தங்கியபோது இரவு விருந்தில் அவருக்கு ஆம்லெட் பரிமாறப்பட்டது. அதன் ருசியில் மயங்கிய நெப்போலியன் அடுத்தநாள் தன் வீரர்களுக்கும் பரிமாற 5000 ஆம்லெட்டுகளை தயாரிக்க உத்தரவிட்டதாக வரலாற்று நிகழ்வும் இந்த ஆம்லெட்டிற்கு உண்டு. இன்றும் அந்த கிராமத்தில் அந்த நிகழ்வைப் போற்றும் வகையில் ஈஸ்டர் தின கொண்டாட்டமாக மாபெரும் ஆம்லெட் திருவிழாவை நடத்துகின்றனர் (28 March 2016-ல் முடிந்தது).

March 19 1994 -ஆம் ஆண்டு ஜப்பானில் உள்ள யாகோஹமா மாநிலத்தில் 160000 முட்டைகளைக்கொண்டு 128.5 M2 (1383 Ft2) அளவுள்ள மாபெரும் ஆம்லெட்டை தயாரித்தனர். அதற்குப்பிறகு Canadian Lung Association சார்பாக கனடாவில் மே  11 2002-ல் 2950 கிலோ எடையுள்ள ராட்சத ஆம்லெட்டை தயாரித்தனர். ஆகஸ்ட்  11 2012 போர்சுக்கலில் உள்ள Ferreira De Zezere நகரத்தில் 145000 முட்டைகளைக்கொண்டு 6466 கிலோ எடையில் 10.3 மீட்டர் சட்டியில் தயாரித்த ஆம்லெட் இன்றுவரை உலக சாதனையாக உள்ளது.

செய்வதற்கு மிக சுலபமான இந்த ஆம்லெட்டில் எக்கச்சக்க சத்துக்கள் உள்ளன. ஒரு 100 கிராம் ஆம்லெட்டில்,
  • Energy - 657 KJ (157 kcal)
  • Fat - 1.2 g
  • Protein - 10.6 g
  • Water - 75.9 g
  • Cholesterol - 356 mg
  • Carbohydrates - 700 mg
  • Vitamin A - 572 IU
  • Thiamine (B1) - 0.1mg
  • Riboflavin (B2) - 0.4 mg
  • Niacin (B3) - 0.1 mg
  • Pantothenic acid (B5) - 1.2 mg
  • Vitamin B6 - 0.1 mg
  • Folate (B9) - 0.039 mg
  • Vitamin B12 - 0.11 mg
  • Choline - 212 mg
  • Vitamin D - 29 IV
  • Vitamin F - 1.2 mg
  • Vitamin K - 0.45 mg
  • Calcium - 47 mg
  • Iron - 1.5 mg
  • Magnesium - 10 mg
  • Phosphorus - 162 mg
  • Potassium - 114 mg
  • Sodium - 161 mg
  • Zinc - 0.9 mg
72 வயதான ஹோவர்ட் ஹெல்மர் (Howard Helmer) என்பவருக்கு பொழுதுபோக்கு ஆம்லெட் போடுவது. "ஒரு ஆம்லெட் போட இவ்வளவு நேரமா? " வீட்டுக்காரியின் அதட்டலுக்கு பயந்து வேகமாக ஆம்லெட் போட கற்றுக்கொண்ட இவர் 39 நொடிகளில் அதிவேகமாக ஆம்லெட் போட்டு கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார். மேலும் 30 நிமிடங்களில் 437 ஆம்லெட் போட்ட சாதனையும் இவரிடம் உள்ளது. American Egg Board சங்கத்தில் தூதுவராக இருக்கும் இவர் முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளையும் விதவிதமான ஆம்லெட் ரெசிபிகளையும் உலகம் முழுவதும் கற்பித்துவருகிறார்.


ஒவ்வொரு நாட்டின் பழக்கங்களுக்கு தகுந்தவாறு தயாரிக்கப்படும் ஆம்லெட் உலகமெங்கும் பரவலாக உண்ணப்படும் உணவுவகை மற்றும் ஆரோக்கியமானது என்பதில் சந்தேகமில்லை. இந்த சுவையான தகவலுடன் ஒரு ஆம்லெட்டை ஆர்டர் செய்யுங்களேன்.

ஆனியன் கொஞ்சம் அதிகமா... பச்சைமிளகாய் போட்டு... பெப்பர் நல்லா தூவி... பதமா ஒரு ஆ...ம்லெட்.