☰ உள்ளே....

அனிமேசன் பாடல்கள் ..திரைப்படங்களின் ரசனை மற்றும் தேடல் இவற்றுள் அடியேனின் முதல் சாய்ஸ் அனிமேசன் திரைப்படங்கள். Mickey Mouse, Donald Duck, Popeye, Road Runner, Tom & Jerry கதாபாத்திரங்களுடன் சிறுவயதில் தொடங்கிய இந்த அனிமேசன் மோகம் சமீபத்திய வெளியீடான Ice Age 5 வரை இன்றும் தொடர்கிறது. புத்தகம், காமிக்ஸ் என பழக்கப்பட்ட கதை, நேர்த்தியான கிராபிக்ஸ் காட்சியமைப்புகள், இசை, பாடல்கள், பின்னணி குரல்கள் என அந்த வண்ணமயமான மாய உலகத்தில் தொலைந்து போவது தனிசுகமே. அனிமேசன் படங்களில் "Sound track" என சொல்லக்கூடிய இசைக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார்கள். புகழ்பெற்ற எழுத்தாளர்கள், குழந்தைகள் பாடல்கள், பழங்கால கவிதைகள் என தேர்ந்தெடுத்த வரிகளோடு கதையோடு உறவாடும் சில பாடல்கள் நம்மை மகிழ்விக்க அதில் நிறைந்திருக்கும். அப்படி நிறைந்த பாடல்களில் அடியேன் ரசிக்கும் சிலவற்றை தொகுத்திருக்கிறேன் அந்த சிறுபிள்ளை கனவுகளோடு.

I see the light.
(Tangled)

அடிக்கடி ரசிக்கும் அழகியல் பாடல் இது. Alan Menken இசையில் Glenn Slater வரிகளில் Mandy Moore மற்றும் Zachary Livi குரலில் ஒலிக்கும் இந்த பாடலை கேட்கும்போது காட்சிகளில் பறக்கும் காற்றாடி பட்டம் போல் மனதும்  இலேசாகிறது.


Beautiful Creature.
(Rio- 2)

பார்த்து வியந்து பிரம்மித்த பாடல் இது. Rio- 2 படத்தில் மொத்தம் 39.07 நிமிடங்கள் இசை மற்றும் பாடல்களாக நிறைந்திருக்கும். John Powell இசையில் Andy Gregia,  Rita Moreno குழுவோடு பாடிய இந்த பாடல் பார்ப்பதற்கு மெய்சிலிர்க்க வைக்கிறது.


Can you Feel the Love Tonight.
(Lion of King)

மனதை வருடும் பாடலுக்கு Elton John இசையமைத்து 1994 ஆம் ஆண்டு இசைக்கான உயரிய விருதான கிராமி விருதை தட்டிச்சென்றார்.


You will be in my Heart.
(Tarzan)

காட்டுவாசியின் அழகிய காதல் மொழி. Phill collins என்பவரின் The Colour என்ற ஆல்பத்தின் பாடலை Tarzan திரைப்படத்திற்காக பயன்படுத்தியிருக்கிறார்கள்.


I won't say.. I am in love.
(Hercules).

Allen Menken -க்கு அனிமேசன் படங்களுக்கு இசையமைப்பது கைவந்த கலை. Suzen Egan மற்றும் Cheryl Freeman குரலில் David Zipel வரிகளில் அழகிய காதலாக ஒலிக்கிறது இந்த பாடல்.