☰ உள்ளே....

அக்ஷை குமார் (Akshay Kumar).உலக திரைப்படங்கள் என மேய்ந்தாலும் சாதாரண ரசிகனான அடியேன் மனதில் மாஸ் ஹீரோக்களுக்கும் தனி இடம் உண்டு. தமிழில் மாஸ் ஹீரோ என்றால் அது ரஜினிதான் அவர் இடத்தில்  ..... அட வேறு எவரையும் வைத்துப் பார்க்க இயலாது. ரஜினியை தவிர்த்து இந்திய சினிமாவில் ரசிக்கும் மாஸ் ஹீரோ அக்ஷைகுமார் (Akshay Kumar). ஆக்சன், அமைதி என ஹிந்தி சினிமாவில் கான்களுக்கு சவால் விடக்கூடிய மார்க்கெட் வேல்யூ உள்ள அக்ஷையின் சினிமா என்ட்ரி அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. குரூப் டான்சர், ஸ்டன்ட்மேன், கிளாப்பாய் என சினிமாவின் அடிமட்ட வேலையிலிருந்து சுப்பர் ஹீரோவாக உயர பல குட்டிக்கர்ணங்களை அவர் போட வேண்டியிருந்தது. வசதி வாய்புகளுக்கு குறைவில்லாத குடும்பத்தில் 9 September 1967 ஆம் ஆண்டு பஞ்சாபில் உள்ள அம்ரிஸ்தரில் அக்ஷை பிறந்தார். இவரது தந்தை இராணுவத்தில் பணிபுரிந்ததால் சிறுவயது முதல் தற்காப்புகலை, சண்டைபயிற்சியில் ஆர்வம் அதிகம் இருந்தது. முறையாக நடனமும் கற்றுதேர்ந்த இவர் சினிமா மட்டுமே வாழ்க்கை என நம்பி "Rajive Hari Om Buhatia" என்ற இயற்பெயரை மாற்றிக்கொண்டு அக்ஷைகுமாராக மும்பைக்கு விரைந்தார். உதவி புகைப்பட கலைஞராக தனது தனிப்பட்ட சினிமா வாழ்க்கையைத் தொடங்கி அவ்வபோது சில திரைப்படங்களில் ஓரமாக தலை காட்டினார். Pramod Chakravarthy என்பவர் Deedar என்ற படத்தில் இவரை முழு கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்தார். ஆனால் Raakhee மற்றும் Saugandh என்ற திரைப்படங்கள் வெளிவந்து அக்ஷைகுமாரை பெரியதிரையில் காட்டியது. ஆரம்பம் கொஞ்சம் சறுக்க, செகன்ட் ஹீரோ, வில்லன், வெளிநாட்டு மாப்பிள்ளை என அவரது திரையுலகம் நகர்ந்தது. Abbas Mustan இயக்கிய Khilladi சீரியஸ் படம் இவரை மாஸ் ஹீரோவாக்க அக்ஷை ஹிந்தி திரையுலகின் ஹீரோக்கள் லிஸ்டிஸ் இடம்பிடித்தார். மார்ஷியல் ஆர்ட் என்று சொல்லக்கூடிய தற்காப்புக்கலையில் வல்லவரான அக்ஷைகுமார் ஆக்சன் திரைப்படங்களில் கலக்கிக் கொண்டிருந்தார். Yeh Dillagi என்ற திரைப்படம்தான் அவரது நடிப்பைப்பற்றி பேசவைத்தது. அதற்குபின் வெளிவந்த Suhaag மற்றும் Elaan போன்ற திரைப்படங்கள் ஓரவிற்கு போக திரையுலக வாழ்க்கை அவருக்கு பரமபத விளையாட்டாகவே இருந்து. வெற்றி தோல்வி என மாறிக்கொண்டு நகர்ந்த அவருக்கு Welcome, Garam Masala, Singh is King Housefull, OMG, Rowdy Rathore (சிறுத்தை), Special 26 போன்ற திரைப்படங்கள் கைகொடுக்க மார்க்கெட் வேல்யூ நடிகரானார். 48 வயதை தாண்டியும் சண்டைக்காட்சிகளில் துணிந்து நடிக்கும் இவரை இந்தியாவின் ஜாக்கிசான் என ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். 


அதிரடி அக்சன் எல்லாம் திரையில் மட்டும் காட்டும் அக்ஷைகுமார் நிஜவாழ்க்கையில் சமத்துப் பிள்ளை. காதலித்து மணந்த Twinkle Kanna மற்றும் இரண்டு குழந்தைகளோடு இனிமையாக வாழ்ந்துவருகிறார். சமீபத்தில் வெளிவந்த Airlift, Houseful3, Rustom போன்ற திரைப்படங்கள் வசூலில் சக்கைபோடு போட ஹிந்தியில் இரண்டு மூண்று படங்கள், தமிழில் எந்திரன் 2.0 -ல் ரஜினிக்கு வில்லன் என இந்த ஆக்சன் கிங்கின் திரையுலக வாழ்க்கை அதிரடியாகவும் அதே பரமபத விளையாட்டுடனும் நகர்ந்து கொண்டிருக்கிறது. 

ஒரு வில்லனாக, செகன்ட் ஹீரோவாக, அக்சன், அமைதி, கலாட்டா என ரசித்ததால் கான்களை கொஞ்சம் ஓரங்கட்டிவிட்டு அக்ஷைகுமார் ரசனையில் முன் நிற்கிறார். எல்லோரைப் போலவும் வியக்க வைக்கும் துணிச்சலான அவரது சண்டைக்காட்சிகளுக்கு அடியேனும் அடிமை. Special 26, Bhool Buliya, Airlift போன்ற கதையம்சம் கொண்ட படங்கள் அவரது நடிப்பை இன்னும் ஒருபடிக்கு மேலே கொண்டு சென்றது. ஓப்பனிங் சாங், பார்ட்டி சாங், கலக்கல் டூயட் என மாஸ் ஹீரோவின் மாஸ் பாடல்கள் சிலவற்றை தொகுத்திருக்கிறேன். அவ்வபோது நான் ரசிப்பது தங்களின் பார்வைக்காகவும்.