π = 3.1415....


சென்ற பதிவில் φ (PHI) பற்றி பார்த்தோம் அதே பெயரில் நமக்கு நன்கு தெரிந்த மற்றொன்றைப் பற்றியும் பார்த்துவிடலாம். φ போல இதற்கு தெய்வீக சமதன்மை எல்லாம் கிடையாது. ஆனால் வட்டத்தின் சுற்றளவை அளக்க இந்த குறியீட்டை கணிதத்தில் அடிக்கடி பயன்படுத்தி வாத்தியாரிடம் அடி-கடி வாங்கியிருப்போம் அவ்வளவுதான். வழக்கம்போல நல்லநாள் நல்ல நேரம் இராகுகாலம் எமகண்டம் எல்லாம் பார்த்து கிரேக்கர்களே இதற்கும் பெயர் வைத்தனர். வட்டத்தினை அளக்க உதவும் பெரிமீட்டர் என்ற அளவின் கிரேக்க வார்த்தையான περίμετρον  (Periphery) என்பதின் முதல் எழுத்தை π (Pi) என இதற்கு செல்லமாக பெயர் சூட்டினர்.


முதன்முதலாக சீனர்கள் இந்த பையின் மதிப்பிற்கு சற்று குத்துமதிப்பான ஒரு அளவைக் கொண்டு வட்டத்தினை அளந்து வந்தனர். பிறகு பாபிலோனியர்கள் ஓரளவுக்கு நெருக்கமாக பயன்படுத்தினர். கிரேக்கர்களின் கட்டிடக்கலைக்கு தேவைபட்டபோது இந்த பை பாப்புலரானது. எகிப்து பிரமிடுகள் அனைத்தும்  இந்த அளவில் இருப்பதை காணலாம். ஆர்கிமிடிஸ், ஐசக் நீயூட்டன் போன்ற பல அறிஞர்கள் இந்த பையை கொத்து பரோட்டா போட்டு அதன் மதிப்பை ஆராய்ந்தனர். ஆனால் கி.பி 499- ல் வாழ்ந்த இந்தியரான ஆரியபட்டாதான் மிகத் துள்ளியமாக கணித்தார். அவர் கணித்த மதிப்பான 3.14159 (22/7) என்பதைத்தான் நாம் தற்போது பயன்படுத்தி வருகிறோம். கணிதம் மட்டுமல்லாமல் இயற்பியல், காந்தவியல், எந்திரவியல், புள்ளியல் என வெகுவாக பயன்படுத்தபடும் இந்த பை சிறப்புக் குறியீடகக் கருதப்படுகிறது. இதற்கு பெருமை சேர்க்க மார்ச் 14 ஆம் தேதியை Pi Day (π தினம்) என மேற்கத்திய நாடுகள் கொண்டாடி அதற்கு மரியாதை செலுத்துகின்றனர். 3 -வது மாசம் 14 தேதி 3.14 இதை வைத்தே அதனை கொண்டாடுகிறார்கள். மேலும் 3.14 எண்ணிற்கு அடுத்து வரும் 159 என்ற என்னை வைத்து சரியாக 1.59 PM மணிக்கு அந்த நாளின் கொண்டாட்டத்தை தொடங்குகின்றனர். இந்த தேதியில் ஐன்ஸ்டின் பிறந்ததும் குறிப்பிடத்தக்கது. 

முடிவிலா மதிப்பு கொண்டது என எல்லோரும் சொல்கிறார்கள். அதனால் இந்த பையின் மதிப்பை இலக்கமாக கண்டுபிடிக்க முடிந்தவரை பலரும் முயற்சி செய்திருக்கின்றனர். அதில் வில்லியம் ஷான்க்ஸ் (1812-1882) என்பவர் 707 இலக்கங்களை பலவருடம் கணக்குபோட்டு குறித்து வைத்திருக்கிறார். அதில் அவர் 527 வது இடத்தில தவறும் செய்திருக்கிறார். அதற்கு பிறகு நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு பையின் மதிப்பை பலரும் முடிந்தவரை துள்ளியமாக கணக்கிட முயற்சி செய்துள்ளனர் அவர்களில் ஜான் வான் நியூமன் (1903-1957) என்பவர் 2037 இலக்கங்களைக் கொண்டு பையின் மதிப்பை கணித்து வருங்கால கணித மேதைகளுக்கு மீதியை கண்டுபிடிக்க பிள்ளையார் சுழி போட்டுள்ளார். அவர் கணித்த மதிப்பு

3.141592653589793238462643383279502884197169399375105820974944592307816406286208998628034825342117067982148086513282306647093844609550582231725359408128481117450284102701938521105559644622948954930381964428810975665933446128475648233786783165271201909145648566923460348610454326648213393607260249141273724587006606315588174881520920962829254091715364367892590360011330530548820466521384146951941511609433057270365759591953092186117381932611793105118548074462379962749567351885752724891227938183011949129833673362

(ஒரு நிமிடம் இருங்கள் மூச்சுவிட்டுக் கொள்கிறேன்)....

4406566430860213949463952247371907021798609437027705392171762931767523846748184676694051320005681271452635608277857713427577896091736371787214684409012249534301465495853710507922796892589235420199561121290219608640344181598136297747713099605187072113499999983729780499510597317328160963185950244594553469083026425223082533446850352619311881710100031378387528865875332083814206171776691473035982534904287554687311595628638823537875937519577818577805321712268066130019278766111959092164201989.............. முடியல...

ஜான் வான் நியூமன் போட்ட இந்த பிள்ளையார் சுழியையும் தன்னிடம் இருந்த ஹிட்டாச்சி SR 8000 என்ற கணினியையும் வைத்துக்கொண்டு 2002 ஆம் ஆண்டு ஜப்பானை சேர்த்த அகிரா ஹராகுச்சி என்பவர் பையின் 124000 இலக்கங்களை ஒரு வீடியோவாக காட்டி இருக்கிறார். இந்த இலக்கங்களில் 70000 -த்தை மனப்பாடம் செய்து ஒப்பித்து இந்தியாவின் அதுவும் தமிழ் நாட்டை சேர்த்த ராஜவீர் மீனா என்பவர் கின்னஸ்சாதனையும் படைத்திருக்கிறார் .