இரண்டு நிமிடம் ...பிளீஸ்...



தலைக்கு ஒன்னு காலுக்கு இரண்டு என காற்றாடி சுற்றினாலும், அடச்சே வீட்டுக்குள்ள மனுசன் இருப்பானா? என நொந்து, சுட்டெரிக்கும் இந்த வெயிலில் வேர்த்துக் கொட்டி, உள்ளே வெளியே போட்டிருப்பது எல்லாம் ஒருவழியாக நனைந்து, என்னா வெயில்? என புலம்பிக்கொண்டு மொட்டைமாடிக்கோ, வாசல் பக்கத்திற்கோ ஓடிப்போய் உட்கார்ந்து, தூரத்தில் தெரியும் மரத்தைப் பார்த்து இது மரமா இல்லை சிலையா? அசையவே மறுக்கிறது என திட்டி தீர்த்து, டெல்லியில் 38.5°C பீகாரில் 39.5 °C இப்படியே போனா உலகம் ஒருநாள் ஆப்பாயில் ஆகிவிடும் என்ற சமூக அக்கரையெல்லாம் வியர்வையோடு சேர்ந்து வழிய, சின்ன வயசு கிராமத்து வெயில் காலத்து நினைவுகளை ரீவைன்ட் பண்ணும்போது, லேசா கொஞ்சம் இரண்டு நிமிடம் காற்றடிக்கும் பாருங்கள் அடடா!. அதுபோலத்தான் இந்த பாடல்கள். 


படத்தின் கதையோட்டத்தோடு வரும் இந்த பாடல்களை அந்த இரண்டு நிமிட காற்றைப்போல மிக அபூர்வமாக ரசிக்கமுடியும். ஏற்கனவே சிறிய தென்றல் என இரண்டு நிமிட பாடல்களைப்பற்றி எழுதியிருக்கிறேன் அவற்றின் தொடர்ச்சியாக நான் ரசிக்கும் சில பாடல்கள் இவை. அந்த காற்றைப்போல தங்களுக்கு ஆசுவாசமளிக்கலாம்.