கஷ்ட பட்டு .



2007 ஆம் ஆண்டு சென்னை சில்க்ஸ் நிறுவனத்தார் தங்களுடைய காஞ்சிபுரம் பட்டு நெசவாலையில் 30 பணியாளர்களைக் கொண்டு, 4780 மணிநேரம் வேலை செய்து, 7 மாதத்தில், 8 கிலோ எடையுள்ள பட்டுப்புடவையை தயாரித்தனர். எதற்கு என்கிரீர்களா? கணவன்மார்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்ளத்தான். அதில் அப்படி என்ன விசேஷம்.

தங்கம் - 59.கிராம் 700 மி. கிராம்.
வைரம் - 3 காரட் 913 சென்ட்.
பிளாட்டினம் - 120 மி. கிராம்.
வெள்ளி - 5 கிராம்.
மாணிக்கம் - 2காரட் 985 சென்ட்.
மரகதம் - 55 சென்ட்.
கனக புஷ்பராகம் - 3 சென்ட்.
நீலக்கல் - 5 காரட்.
வைடூரியம் - 14 சென்ட்.
புஷ்பராகம் - 10 சென்ட்.
பவளம் - 400 மி. கிராம்.
முத்து - 2 கிராம்.

என நவரத்தினங்களோடு தங்கம், வெள்ளி, பிளாட்டினம் சேர்த்து கஷ்ட"பட்டு" தயாரித்திருந்தனர். சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த புடவையின் முத்தணையில் ரவிவர்மாவின் புகழ்பெற்ற "Galaxy of Musician" ஓவியம் வரையப்பட்டிருந்தது. 2008 ஆண்டு இந்த புடவையை கின்னஸ் வேல்டு ரெக்கார்டில் உலகின் விலை உயர்ந்த புடைவை என பதிவு செய்தனர். இதுவே உலகின் விலையுயர்ந்த புடவையாகும். அப்படி என்ன? பெரிய புடலங்காய் விலை என்றால், வெறும் 3931627 மட்டுமே. என்ன? மூச்சு வாங்குகிறதா.

(தயவுசெய்து இந்த பதிவை வீட்டுக்கார அம்மணியிடம் காட்டிவிடாதீர்கள். பிறகு நிகழும் அசம்பாவிதங்களுக்கு நிர்வாகம் பொருப்பாகாது.)