Soft and Touch..


அதிரடி, கட்ட குரல், கெட்ட வார்த்தை, விளங்காத ராப், டெக்னாலஜியின் இரைச்சல் இவற்றைத் தாண்டி அடியேன் ரசிக்கும் சில ஆங்கில Soft and Touch பாடல்கள்.





Hold My Hand- Akon:
(Album - Michel) 

Michel Jackson மறைவிற்கு பிறகு வெளிவந்த ஆல்பம் Michel  . MJ- ன் பாடல்கள் சிலவற்றையும், அவர் கடைசியாக உருவாக்கிய பாடலையும் ஆல்பத்தில் இணைத்திருந்தனர். Hold My Hand என்ற இந்த பாடலை Akon மற்றும் MJ டூயட்டாக பாடியிருந்தார்கள். பாப் உலகின் முடிசூடா மன்னன் MJ - வின் மறைவிற்கு அவரை மரியாதை செய்யும் விதமாக டாப் பாடகர் முதல் உலகத்தின் கடைசி மூளையில் இருக்கும் சாதாரண பாடகர்கள் வரை ஆளுக்கொரு இறங்கல் பாடலை பாடித் தள்ளினார்கள். அப்படி வெளிவந்த பாடல்களை ஓவர்டேக் செய்து Hold my Hand டாப் ஹிட் அடித்தது. அதற்குபின் இதே பாடலை Titanic Verson என வெளியிட்டனர் அதுவும் ஹிட். Michel ஆல்பத்தில் Hollywood Tonight என்ற பாடலும் பிரபலம்.



Fa...  la...  la- Justin Biber: 
(Album -Under The Mistletoe)

Boy II Men குருப்பில் உள்ள Nathan Morries, Wanna Morries, Shawn Stockman இவர்களுடன் இனைந்து Justin Biber பாடிய கிருஸ்த்துமஸ் பாடல் இது. Baby பாடல் ஹிட்டடித்த பிறகு Justin Biber -க்கு Selena, Taylor Shift என பலர் போட்டிக்கு வர பெரிய ஹிட் தேவைப்பட்டது. அப்போது வெளிவந்த கிரிஸ்த்துமஸ் ஸ்பெஷல் ஆல்பம்தான் Under The Mistletoe. சின்ன பையனுக்கு நல்ல பெயர் வாங்கித்தந்த ஆல்பம். அதற்குப்பின் Selena உடன் காதல் கசமுசா என கோர்ட்டு வரை சென்றது வேறு விசயம். ஆல்பம் முழுவதும் கிருஸ்துமஸ் ஸ்பெஷல் பாடல்கள்தான். Fa...la...வெளிவந்த போது பாப் ரசிகர்களின் வாயில் அதிகம் மெல்லப்பட்டது. 



Show Me The Meaning- Back Street Boys: 
(Album - Millinium)

லவ் ஃபீ...லிங்னா இன்றுவரை இந்த பாடல்தான் டாப் டவுன்லோடு. 1999 Millenium ஆல்பம் வெளிவந்த புதிதில் 11 மில்லியன் விற்றுத் தீர்ந்து சாதனை படைத்தது. ஐந்து பையன்களின் பாப் வாழ்க்கையின் மைல்கல் இந்த ஆல்பம் குறிப்பாக இந்த பாடல் இளசுகளின் ஹார்ட் பீட். Back Street Boys -க்கு இது இரண்டாவது ஆல்பம். சுவீடனை சேர்ந்த DJ, மியூசிக் டைரக்டர்,  பாடலாசிரியர் Danniz pop - என்பவருக்கு சமர்ப்பணமாக இந்த பாடலை வெளியிட்டிருந்தனர். கலக்கல் பசங்களின் ஆல்பத்தில் எப்போதும் மெலடி தூக்கலாக இருக்கும். இந்த ஆல்பத்தில் உள்ள ஐந்து பாடல்களும் கிராமிய விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இன்றுவரை அதிகம் விற்பனையான ஆல்பங்கள் வரிசையில் தனக்கான இடத்தை தக்கவைத்துள்ளது. 




My Heart Will Go On- Celine Dion: 
(Titanic Theme)

James Horner இசையில் Will Jenis பாடலின் வரிகள் எழுத 1997-ல் வெளிவந்த ஆல்பம் Let's Talk About Love இதில் Celine Dion பாடிய பாடல் My Heart will go on. டைட்டானிக் படத்திற்கு பெருமை சேர்க்க இந்த பாடலை படத்தின் தீம் பாடலாக வைத்துக் கொண்டனர். டைட்டானிக் என்றால் இந்த தீம் காற்றில் வரும். இன்றளவும் இந்த பாடல் உலக காதலின் தேசியகீதம். அதிகம் ரசிக்கப்பட்ட பாடல்,  சிறந்த குரல் என அந்த வருடத்தின் இசைக்கான உயரிய விருதான கிராமி விருதை தட்டிச்சென்றது. James Horner - ன் மயக்கும் இசையும், Celine Dion -ன் குரலும் பாடலை பட்டித்தொட்டி எங்கும் கொண்டு சென்றது. பாடகி Celine Doin  - ஐ உலகத்திற்கு அறிமுகம் செய்துவைத்த இந்த பாடல் அவருக்கு இரண்டாவது கிராமி விருதையும் பெற்றுத்தந்தது. அக்கா இதுவரைக்கும் ஐந்து கிராமி விருது வாங்கியிருக்காங்க.