நாட்டு நடப்பு .

"பார்த்து மெல்ல போப்பா" 
என தோளை அழுத்தும் அப்பாவுடனான பயணம்,
"இன்னும் வேகமா மிதிப்பா" 
எனும் பால்யகால நினைவை நோக்கி விரைகிறது..


காலமும்
பயணமும் மாறினாலும்
முந்தானையில் ஷு துடைக்கும் 
அம்மாவின் அன்பு 
மாறுவதேயில்லை....

இன்னமும்
பாட்டி வடை சுடுகிறாள்
காகம் அதை திருடுகிறது
நரி தந்திரம் செய்கிறது.
இரண்டு மூன்று தலைமுறைகள் தாண்டி..


சில நேரங்களில்..
புயலுக்குத் தப்பித்த
மரம்போல்
ஆடி களைத்து
இலை தழைகளை
உதிர்த்து
மீண்டும் துளிர்விடுகிறது
மனசு....


ஓடுநீர் வற்ற
ஊறுநீர் ஊற
வாடியிருக்குமாம்
கொக்கு.

பசி
வலி
இரண்டின் ரிங்டோன்
அம்மா!..

நூடுல்ஸ்க்கு எந்த சிக்கலும் இல்லை,
இடியாப்பத்திற்குதான் ஏகப்பட்ட சிக்கல்கள்..
(நூடுல்ஸ் தடை விரைவில் நீங்கும் # செய்தி).


வேறொன்றுமில்லை
ஏரி, ஏறி வந்திருக்கிறது.

(# சென்னை வெள்ளம்)


ர்நாடக- தமிழ்நாடு எல்லைப் பகுதியில் காடுகள் அழித்து வருகிறது .
(# நாளிதழ் செய்தி..)

காட்டைப் பத்தி  ஒரு கதை சொல்கிறேன்....
காட்டில் ஒரு பெரிய மீசை வைத்த சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது.

அட! மீதி கதை உங்களுக்கே  தெரியும்..