மொஸாட்...

உலகையே கிடுகிடுக்கவைக்கும் இஸ்ரேலிய உளவுத்துறை பற்றி விரிவான அறிமுகம் இந்த புத்தகம். யூதர்கள் உலகிலேயே எல்லாவற்றிலும் சிறப்புமிக்கவர்கள் தங்களுடைய உளவுத்துறையிலும்.போட்டுத்தாக்கு குறிவைத்தது யாராக இருந்தாலும், கவலைப்படாதே. செய் அல்லது செத்து மடி. இதுதான், மொஸாட்டின் தாரக மந்திரம். இன்று உலகில் உள்ள அனைத்து உளவு அமைப்புகளைவிடவும்,  செயல் திட்டத்திலும், அதை வெற்றிகரமாக முடித்து காட்டுவதிலும், இதற்கு நிகர் வேறில்லை.


மற்றநாடுகளுக்கெல்லாம் ஒன்றிரண்டு எதிரிகள் என்றால் இஸ்ரேலுக்கு நாலாபக்கமும் எதிரிகள். இஸ்ரேல் என்கிற நாடு உருவாக்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை அச்சுருத்தலின் நடுவேதான் வாழ்ந்துகொண்டிருக்கிறது. இதனால் அவர்களுக்கு உளவுத்துரை ஓர் அவசிய தேவையாகிவிட்டது. உலகின் முக்கிய நகரங்களில், எல்லா அரசாங்க அமைப்புகள்,  ராணுவங்களில் கூட மொஸாட் உளவாளிகள் இருக்கிறார்கள். அமெரிக்காவிற்கே தெரியாத சில விசயங்கள் மொஸாடுக்கு கிடைத்துவிடும். தகவல் மட்டுமல்ல அதிரடியிலும் பேர் போனது. 

எப்படி திட்டமிடுவது அதை எப்படி செயல் படுத்துவது, சாதபாதகங்கள் என்னென்ன?  என ஒரு விசயத்தை மொஸாட் எப்படியெல்லாம் நுணுக்கமாக அணுகுகிறது என்பதை அலசி ஆராய்கிறது இந்த புத்தகம். எளிய நடையில் கதைசொல்லும் பாணியில் எழுதியிருக்கும் ஆசிரியரை பாராட்டலாம். ஹாலிவுட் படம் பார்பதுபோல் அழகிய விறுவிறுப்பான எழுத்து. தவறாமல் வாசியுங்கள்.

மொஸாட்..
மதிநிலையம்..
விலை - ₹130
ஆசிரியர் - என். சொக்கன்.

 
நாக சுப்ரமணியன் சொக்கநாதன் இவரது இயற்பெயர். மென்பொருள் ஆலோசகராக பெங்களூரில் பணிபுரிகிறார். பகுதிநேர ஆசிரியரும்கூட. என் சொக்கன் என்ற பெயரில் வாழ்க்கை வரலாறு, பிசினஸ் தந்திரம், அறிவியல் என ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். எளிய நடையில் கதை சொல்லுவதுபோல் எழுதுவது இவரது சிறப்பு.