உயிர்.....


உலகப் பரப்பில் விசாலமான பலவற்றை ஜீவராசிகளுக்கு இயற்கை கற்றுத் தருகிறது. தேடல்வெளியில் அலைகழியும் மனிதன், வேட்கைக்கு இளைப்பாறுதலாய் சந்தோஷத்தை நாடுகிறான்.

அழுகை, கோபம், காமம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்திவிட்டால் மன இறுக்கம் குறைந்து அவன் தேடும் பரவசம்,சந்தோஷம் கிடைக்குமென அனுபவசாலிகளும் அறிவியலாளர்களும் உணர்ந்து சொல்கின்றனர்.



உடலின் கூடலில் இன்ப உணர்ச்சியை அடையலாம். இந்தப் பாலுணர்வுதான் தலைமுறை விருத்திக்கான வழியும்கூட..! எனவேதான் செக்ஸை மனித இனம் உயர்நிலையில்வைத்து மதிப்பிடுகிறது.
பருவ மாற்றத்தினால் உடலில் உருவாகும் கிளர்ச்சியைக் கண்டு, குழப்பத்தில் மன உளைச்சல் அடைபவர்கள் பலர். உடலைப் பற்றி பேசினால்கூட, 'என்ன அசிங்கமா, செக்ஸா பேசுற' என தவறான எண்ணம் கொண்டவர்களும் பலர். வெளியே சொல்லி விவாதிக்க தயங்கும் விதமாக செக்ஸ் பலருக்கு புதிராகவே உள்ளது. உடலின் இயக்கத்துக்கு அடிப்படை விஷயங்களான பசி, தாகம் போன்றுதான் செக்ஸும் என்பதை ஏற்க மறுக்கிறது அவர்களது மனம்.
இந்தியா உட்பட பல நாடுகளில் பண்பாடு எனும் போர்வையில் மறைபொருளாக வைக்கப்பட்ட செக்ஸை, பார்க்க&ரசிக்க&அனுபவிக்க முறையற்ற வழிகளில் தேடுவதாலேயே குற்றங்கள் பெருமளவில் நிகழ்கின்றன. இதற்குக் காரணம் சமூகத்திடம் செக்ஸ் பற்றிய புரிதலும் கற்றலும் இல்லாமைதான்.
'சொல்லித் தெரிவதல்ல மன்மதக் கலை' என்பது முற்றிலும் சரியான வாசகம் என்று சொல்வதற்கில்லை. கற்றலின் வழியேதான் சரியான புரிதலை பெற முடியும். கற்றல் எப்போதுமே அறிவை விருத்தி செய்யும்.
டாக்டர் டி.நாராயண ரெட்டி மருத்துவரீதியாக ஆராய்ந்த செக்ஸ் கல்வியை, தேர்ந்த புலமையோடு புரியும்படி விளக்கிச் சொல்லியிருக்கிறார். ஜூனியர் விகடனில் தொடராக எழுதிய 'உயிர்' இப்போது உங்களிடம் வண்ணப்படங்களுடன் புத்தகமாக உயிர் பெற்றிருக்கிறது. உடல் இயக்கத்துக்கு செக்ஸின் பங்கு, உடல் உறுப்புக்களின் செயல்பாடுகள் போன்ற விஷயங்களை சொல்லும் இந்தப் புத்தகம் தமிழில் செக்ஸ் கல்விக்கான முழுமையானதொரு ஆவணம் இல்லாத குறையைப் போக்கும் சிறந்த கையேடாக விளங்கும்.
டி.நாராயண ரெட்டி
இந்த நூலைப் படிக்கும் அனைவரும் 'உணவு, தூக்கம் போலவே பாலுணர்வும்கூட உயிர்களின் தவிர்க்க முடியாத அடிப்படைத் தேவை' என்பதையும், அதுபற்றி முழுமையாகத் தெரிந்துகொள்வது எத்தனை அவசியம் என்பதையும் தெளிவாக உணர்வார்கள்.


உங்கள் மனதுக்குள் சுற்றிச் சுழலும் புதிர்களைக் களைய நீங்களும் பயணமாகுங்கள்.

உயிர்
டாக்டர் டி.நாராயண ரெட்டி
விகடன்
RS-190.00