இது என் நிலம்.




அதிகாலைப் பொழுது Bosnia-வின் எல்லைப்பகுதியில் ஒரு போராளிக்குழு துப்பாக்கியுடன் நுழைகிறது. விழித்துக்கொண்ட இராணுவம் அவர்களை தாக்குகிறது. எல்லோரும் இறத்துவிட Ciki (Branko Djuric) என்பவன் மட்டும் No Man's Land என வரையறுக்கப்பட்ட பதுங்கு குழியில் தங்குகிறான். சிறிதுநேர அமைதிக்குப்பின் எவரேனும் உயிருடன் இருக்கிறர்களா பார்பதற்கு  ஒருசில வீரர்களுடன் அனுபவம் இல்லாத  Nino (Rene Bitorajac) அனுப்பப்படுகிறான். பதுங்கு குழியில் நோட்டமிடுகின்றனர் யாரும் இல்லை என உறுதிபடுத்தியபின் அங்கு கிடக்கும் போராளி ஒருவனின் உடலுக்கு அடியில் கண்ணிவெடி ஒன்றை பதித்து வைக்கின்றனர். எதுவும் புரியாத Nino ஏன் இவ்வாரு செய்கிறீர்கள் என கேட்கிறான். இந்த உடலை மீட்கவரும் போராளிக்குழு வெடித்துசிதறட்டும் என அப்படி செய்வதாக சக வீரன் ஒருவன் கூறுகிறான்.

சிறிதுநேரத்தில் பதுங்கு குழியில் இருந்த Ciki  வெளிவந்து அவர்களை நோக்கி சுடுகிறான்  Nino-வை மட்டும் துப்பாக்கி முனையில் பிடிக்கிறான். என்ன நடக்கிறது என்று தூரத்தில் இருந்து இராணுவமுகாம் பார்த்துக் கொண்டிருக்கிறது.சிறிது நேரத்தில் இறந்ததாக நினைத்த போராளி விழிக்கிறான் Ciki ஓடிச்சென்று அவனைத் தூக்க முயல்கிறான். அவனை விடு அவனுக்கு கீழே கண்ணிவெடி உள்ளது என Nino எச்சரிக்கிறான். சரி அதை செயலிழக்கச்செய் என்கிறான். sorry எனக்கு அது எப்படின்னு தெரியாது என்கிறான். இருவரும் வாக்குவாதம் செய்கின்றனர்.Nino வைத்து எப்படியாவது தப்பிவிட வேண்டுமென Ciki நினைக்கிறான். அவனை கைதியாக்கி  இராணுவத்தை வரவழைக்க நினைக்கிறான். நேரம் கடந்துகொண்டே போகிறது குழிக்குள் என்ன நடக்கிறது என தெரியாமல் இராணுவ குழு குழம்புகிறது.

கண்ணிவெடிக்கு கீழ் உள்ளவனுக்கு தாகம் எடுக்கிறது  Ciki உதவிசெய்கிறான் ஒரு சிகரெட் பற்றவைத்து கொடுத்து தானும் புகைக்கிறான். Nino துப்பாக்கியை பறிக்க நினைக்க இருவருக்கும் சண்டை வருகிறது Nino-வை காலில் சுடுகிறான். சிறிதுநேரத்தில் United Nations Protection Force (UNPROFOR) அங்கு வருகிறது. நடந்ததை அறிந்துகொண்டு கண்ணிவெடியை செயலிழக்கச்செய்ய முயற்சி செய்கிறது. சக்திவாய்ந்த கண்ணிவெடி U.S.A -வில் தயாரித்தது என கைவிடுகின்றனர். இந்ததகவல் பிரஸ்-மீடியா வரை செல்கிறது. எல்லோரும் சம்பவ இடத்திருக்கு வருகின்றனர் live ஓடிக் கொண்டிருக்கிறது. Ciki- யும் Nino-வும் UNPROFOR கட்டுப்பாட்டில் பிடிக்கபடுகின்றனர். எல்லோர் 
பார்வையும் கண்ணிவெடிக்கு கீழ் உள்ளவனிடம் இருக்க இராணுவ உயர் அதிகாரியும் அங்கு வருகிறார். Ciki எல்லாவற்றிகும் காரணம் Nino காரணம் என நினைத்து மறைத்து வைத்த கைத்துப்பாக்கியில் அவனை சுடுகிறான் அவன் கீழே விழுகிறான்.  UNPROFOR வீரன் ஒருவன்  Ciki -ஐ சுட அவனும் இறக்கிறான். சிறிது குழப்பம் boom-squad கண்ணிவெடியை அகற்ற செய்த முயற்சியெல்லாம் தோற்றுப் போகிறது. எல்லோரும் No Man's Land-ஐ விட்டு நகருகின்றனர். Ciki -Nino உடல் அப்புறப்படுத்தப்படுகிறது கூட்டம் கலைகிறது கண்ணிவெடிக்கு கீழ் உள்ளவன் மட்டும் அப்படியே படுத்திருக்கிறான் மாலைப்பொழுது நெருங்குகிறது மஞ்சள் வெயில் முகத்தில் விழுகிறது திரை மெல்ல இருள்கிறது.

ஒருநாட்டின் போர் என்பது வியாபாரம்,ஒருசிலருக்கு தொழில், ஒருசிலருக்கு அது பொழுதுபோக்கு. நமக்கு பக்கத்தில் இலங்கையில் நடந்ததை நாமும் இப்படி பார்த்துகொண்டுதான் இருந்தோம் கடைசியில் என்ன ஆனது கண்ணிவெடி சிக்கிய போராளியை விட்டுட்டு வந்தமாதிரிதான் இருக்கோம். நமக்கு இலங்கை போர் ஒரு பொழுதுபோக்கு பலருக்கு தொழில் இல்லையா? .
போரின் முகத்திரையை கிழிக்கும் Bosnia நாட்டு திரைப்படம் 2001-ன்  சிறந்த வெளிநாட்டுப்படமாக  ஆஸ்கார் விருது வாங்கியது. மேலும் பல விருதுகளை அள்ளிய படம் தவறாமல் பாருங்கள்

Directed By -Danis Tanovic
Written By - Danis Tanovic
Music - Danis Tanovic
Cinematography- Walther Vanden Ende.