THE KITE RUNNER (பட்டவிரட்டி)
காபூலின் வசீர் அக்பர் கான் பகுதியைச் சேர்ந்த பாஷ்டூன் இனச் செல்வக் குடும்பமொன்றில் பிறந்த அமீர் எனும் பையனைப் பற்றிய கதையைச் சொல்கிறது இந்நூல்.
தனது சிறு பருவத் தோழனும் தந்தையின் ஹசரா இன வேலையாளின் மகனுமான ஹசனுக்கு இழைத்த நம்பிக்கைத் துரோகம் அமீருக்குக் குற்றவுணர்வைத் தருகிறது. ஆப்கானிஸ்தானின் முடியரசின் வீழ்ச்சி, சோவியத்  படையெடுப்பு, பாகிஸ்தானுக்கும்  அமெரிக்காவுக்குமான மக்கள் வெளியேற்றம், மற்றும் தலிபான் ஆட்சி எனும் அமளியான காலகட்டங்களில் இக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது

The song of sparrows (சினிமா)."ஓடு அல்லது பற" வாழ்க்கை நமக்கு கட்டளையிடும் சொல் அதை துரத்தி குடும்பம், வேலை, பணம் என வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம். தொட்டிச் செடியில் இன்று புதிதாக பிறந்த மலரையும், கோவில் கோபுரங்களில் பெட்டையுடன் ஒளியும் புறாக்களையும், தென்னை மரங்களுக்கிடையே மறையும் சூரியனையும், அன்றாட அற்ப நிகழ்வுகளாய் கடந்துவிடுகிறோம். சிறுவயதில் ரசித்த ஆறும், மலையும், வயல்களும் அதன் வழியில் அப்படியே இருக்க ஒருநிமிடம் நின்று ரசிக்கத் தவறுகிறோம். அன்புசெலுத்தும் சாதாரண மனிதர்களை கௌரவம் என்ற போர்வையில் ஒளிந்துகொண்டு அலட்சியப்படுத்துகிறோம். ஒருகாலட்டத்தில் சராசரியான இந்த வாழ்க்கையை வெறுத்து அமைதியையும், மகிழ்ச்சியையும் எங்கோ தேடத் தொடங்குகிறோம். அனைத்தும் நம் அருகிலே இருந்தது, இருக்கிறது என அறியாமல் மீண்டும் வேறொரு பாதையில் பயணிக்க ஆரம்பிக்கிறோம்.

சரி..சாதாரண பூக்களும், மழையும், சூரியனும் அற்ப மனிதர்களும் அன்றாட நிகழ்வுகளும் அமைதியான வாழ்க்கைக்கு எப்படி உதவக்கூடும்? இதை அழகாக விளக்கும் ஈரான் நாட்டு திரைப்படம்தான் "The Song of Sprrows".


Cast Away (சினிமா).வாழ்க்கையில் என்றாவது தொலைந்ததுண்டா? (காதலியின் கடைக்கண் பார்வையில் என்று கப்சா விடக்கூடாது) சிறுவயது திருவிழா கூட்டங்கள் மற்றும் மொழிதெரியாத ஊர்களில் சிலசமயம் மாட்டிக்கொண்டு வழி தெரியாமல் விழித்த அனுபவம் அனைவருக்கும் இருக்கும். அதிலிருந்து ஏதோவொரு நம்பிக்கையுடன், யாரோ ஒரு துணையுடன் மீண்டு வந்திருப்போம். இவைகள் இல்லாமல் யாருமற்ற தனி தீவில் நம்மை கொண்டுவிட்டால் நாம் என்ன செய்வோம்? அப்படி, ஒரு விபத்தில் சிக்கிக்கொண்டு தனி தீவில் தஞ்சமடையும் ஒருவனின் வாழ்வியல் போராட்டமே இந்த திரைப்படம் "Cast Away".


லஞ்சமும், ஊழலும்

மிஸ் கிட்ட சொல்லிடாதடா..
இண்டர்வெல்லில் ஐஸ் வாங்கித்தறேன்...........

என்பதில் ஆரம்பிக்கிறது லஞ்சம் ......

அதை வாங்கி

 நக்குவதில் ஆரம்பிக்கிறது ஊழல்.......

நச் ........

குழந்தைகளின் மழலையை கவணியுங்கள்..

harris jayaraj மெட்டிற்கு பாடல் எழுதலாம் ........

எல்லேமா.....