புடவை ...தாவணி...திரிஷா....

மலர்கள் கேட்டேன் வனமே.. தந்தனை................
சித்ரா - வைரமுத்து - A .R .ரஹ்மான் கூட்டணி  ஓ.கே கண்மணி பாடல்...............
காதலாம் கடவுள்-முன் -பத்மலதா-கமல்ஹாசன்-ஜிப்ரான் கூட்டணி
உத்தமவில்லன் பாடல்.............
அட! இரண்டுமே மனதை மயக்குகிறது.

முதலாவது பெரிய கூட்டணி பல ஹிட் பாடல்களை தந்தது, வைரமுத்துவின் வரிகள் மாயாஜாலம்,சித்ராவின் குரலில் இன்னமும் இளமை ததும்புகிறது பாடலின் முடிவில் A .R .ரஹ்மானின் குரல் கோரஸாக ஒலிப்பது அருமை மீண்டும் மீண்டும்  கேட்க தோன்றுகிறது. இரண்டாவது கமலின் வார்த்தை விளையாட்டு பத்மலதாவின் மயக்கும் குரல், ஜிப்ரானின் உயிர் இசை. பாடலின் வரிகள் உன்னதம் (கமல் இல்லை-யா?) தடதடக்கும் பாடலின் நடுவே கமலின் ரீங்கார சப்தம்(மனுஷன் ஸ்க்ரீன்ல என்ன பன்னிருக்காரோ?)ஆவலை தூண்டுகிறது.எனக்கு என்னமோ? இரண்டாவது பாடல் புதுமையாகவும் அழகாகவும் தெரிகிறது.
.............................................................................................................................................
Blogger application இப்பொது android போன்களில் கிடைக்கிறது . என்னைப்போல கிறுக்க நேரம் கிடைக்காதவர்களுக்கு பணுள்ளதாக இருக்கும். தமிழ் font வைத்துக்கொள்ளுவது அவசியம். வீடியோக்கள் பதிவு ஏற்றுவது கடினம் மத்தபடி எல்லாம் இருக்கிறது. offline -ல் எதாவது பதிவு செய்து சேமித்து வைத்துக்கொள்ளலாம் தேவையான போது வெளியிடலாம். Share செய்துகொள்ளும் வசதியும் உண்டு (கவணிக்க- இதற்கு blogger கணக்கு வைத்திருக்க வேண்டும்).
.................................................................................................................................................
சித்தப்பா எனக்கு புடவை வேணும் சுபிக்க்ஷா கேட்டா.
குட்டிஸ்களுக்கு ஸ்பெஷல் குட்டி புடவை வத்திருக்காம் எங்கோ? பாத்திட்டு வந்து சொன்னா,பெரியவளுக்கும் சேர்த்து ஆர்டர் செய்திருந்தேன்.கிடைத்தவுடன் போட்டோ எடுத்து அனுப்பி இருந்தாள் பொண்ணும் புடலங்காயும் ஒன்னு என்று சொல்லுவார்கள் குட்டீஸ் இரண்டும் பெரிய பொண்ணாக வளர்ந்துவிட்டார்கள் .ஏற்கனவே தலையில் உள்ள வெள்ளை முடியை பார்க்கும் போதெல்லாம் வயசாய்டுச்சே!என்ற கவலை உண்டு. இவர்கள் இரண்டுபேரையும் புடவையில் பார்த்தவுடன்  இன்னும் அதிகமானது. இருந்தாலும் அந்த போட்டோ- அம்மாவை , அக்காவை , காதலியை , ஸ்டெல்லா டீச்சரை நினைவுபடுத்த தவறவில்லை......
..................................................................................................................................................
நீண்டநாள் ஆகிவிட்டது கடற்கரையில் கால்நனைத்து மாமா வீட்டில்  இருந்த  போதெலாம் தெருவில் உள்ள. குழந்தைகளுடன் வாராவாரம் பீச்சிற்கு சென்றுவிடுவேன். ஒரே பிரச்சனை அதுகள மேய்க்கிறதுதான். யாருமற்ற மெரீனாவை பார்த்து இருக்கிங்களா?தாவணி அணிந்த கிராமத்து பெண் போல இருக்கும். என்னடா ? இவ்வளவுபேர் தினமும் இந்த பீச்சுக்கு வருகிறார்களே எனத்தோன்றும் ,கடலை போடுபவர்களைத் தவிர்த்தால் கடல் அழகானதுதான். ஒருமுறை பாட்டியின் அஸ்தியைக் கரைக்க அப்பாவுடன் கடற்கரை சென்றிருந்தேன். ஏன் இறந்தபிறகு இங்குவந்து கடலில் அஸ்தியை கரைக்கணும் அப்பவிடம் கேட்டேன். இந்த கடலை பார்த்தா  உனக்கு என்ன தோணுது? தேவ் அப்பா கேட்டார். ..ம்ம்..இதுக்கு முன்னாடி நாமெல்லாம் ஒண்ணும் இல்லை என்று தோணுது என்றேன்.  நிஜம்தான் நாமெல்லாம் ஒண்ணுமே இல்லை -கடல் ஒரு பிரமாண்டம்,அமைதி அதனால்தான் ஆஸ்தியை கடலில் கரைக்கிறோம் என்று அப்பா சொன்னார். கடல் ஒரு அமைதி அதை பார்க்கும் போதெல்லாம் நிச்சயம் மனம்  நிம்மதி அடைகிறது அதனால்தான் எல்லோரும் இங்க வருகிறார்கள் என நினைக்கிறேன். லேசாக  தூரல் விழ ஆரம்பிக்கிறது. காரில் இருந்து இறங்குகிறேன். தாவணி  அணிந்த கிராமத்துப்பெண் மழையில் நனைகிறாள் கூடவே நானும்...........  
....................................................................................................................................................
ஆடை குறைப்பு செய்யலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன் .ம்..ம் பயப்பட வேண்டாம். வைத்திருக்கும் ஆடையின் எண்ணிகையைக்  குறைக்கலாம் என்று இருக்கிறேன் ஞாயிறற்றுக்கிழமை ஒருநாள்- டிரஸ் துவைப்பதிலே ஓடிவிடுகிறது. அதுவும் "தன் ஜீன்ஸ்பேன்ட்டை தானே துவைப்பவன் போன ஜென்மத்தில் பாவாம் செய்தவன்". இப்போதுதான் புரிகிறது ஞானிகளும் பெரியவர்களும் ஆடை விசயத்தில் ஏன்? எளிமையாக இருக்கிறார்கள்.
.........................................................................................................................................................
திரிஷாவும்-வருணும் பிரிந்துவிட்டார்கள் கேள்விப்பட்டேன்.
"திரிஷா போனா திவ்யா" என்றிருந்தேன்..இப்போது

டார்லிங் நமக்குதான்.....

..........................பறக்கும்