Rooted - ஒரு காதல் கதை.

காதலும், காதலிக்கப்படுவதும், காதலித்துக் கொண்டே இருப்பதுவும், காதல் கதைகளும் சலிப்புத் தட்டுவதேயில்லை. அந்த உற்சாகத்தோடு மீண்டும் ஒரு வித்தியாசமான காதல் கதையை உங்களுக்கு அறிமுகப்படுத்தலாம் என நினைக்கிறேன். இதில் என்ன வித்தியாசம் இருக்கிறது என்றால்? இந்த கதை இரண்டு மரங்களுக்கு இடையேயான காதலை அழகாக விவரிக்கிறது.



மரம் காதலிக்குமா!.... ஆச்சரியப்பட வேண்டாம் மரங்களுக்கு உயிர் இருக்கிறது என்றும், ஆபத்து காலத்தில் அவைகள் ஏதேனும் ஒரு வகையில் ஒன்றோடு ஒன்று தகவல்களை பரிமாறிக் கொள்கிறது என்றும் அறிவியல் பூர்வமாக ஆராய்ச்சிகள் எல்லாம் செய்து கண்டுபிடித்திருக்கிறார்கள். அப்படி இருக்க அவைகள் காதலிக்காதா என்ன?. சரி!....அறிவியலை தூக்கி கொஞ்சம் ஓரமாக வைத்துவிட்டு ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்கி ஆழமாக வேர்விட்ட இந்த இரண்டு மரங்களின் காதல் கதையை தெரிந்து கொள்ளுங்களேன்.

📎

  • Rooted 
  • Directed, Written, Animation & Edit - Edwin Schaap
  • Programming - Jeroen Hoolmans
  • Effect - Pim Reinders
  • Music - Vidjay Beerepoot
  • Country - Netherlands
  • Year - 2011