வங்கமொழி பாடல்கள்.


ஹாய், ஹலோ, ஹவ் ஆர் யூ, குட் மார்னிங், குட் ஈவ்னிங், குட் நைட், சிறப்பான நாட்களின் வாழ்த்துக்கள், அக்கரையான சில குறிப்புகள், நாட்டு நடப்பு செய்திகள், திருக்குறள், பழமொழிகள், பொண்மொழிகள், பொய்மொழிகள் என தினம் தினம் நம்மைத் தேடிவரும் வாட்ஸ் அப் குறுஞ்செய்திகளின் எண்ணிக்கை அரை சதத்தை தொட்டாலும் சிலரது குறுஞ்செய்திகள் மட்டுமே ரசிக்கத் தக்கதாகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். அவ்வாறு அடியேனுக்கு வரும் குறுஞ்செய்திகளில் மோஹித் என்பவரிடமிருந்து வருபவை அதிக எதிர்பார்ப்பை கொண்டதாக இருக்கும் காரணம் வங்கமொழி பாடல்கள்.


மோஹித் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர். ஒன்னரை வருடங்களுக்கு முன்பு அலுவலக நிமிர்த்தமாக அங்கு சென்றபோது முதன்முதலாக அவர் அறிமுகமானார். அவருடன் பழகியது சில நாட்களே என்றாலும் நவீனம் இன்னும் அவரை இணைப்பிலே வைத்திருக்கிறது. ஒரு வினாயகர் சதுர்த்தி நன்னாளில் அவசரகதியில் கொல்கத்தாவிலிருந்து புறப்பட... சென்னை வரை பறக்க சிறிதுநேரம் ஆகும் அதுவரை ரசிக்க உங்கள் ஊரில் பிரபலமாக இருக்கும் பாடல்கள் இருந்தால் சொல்லுங்களேன்.... என அவரிடம் கேட்டதன் பிரதிபலனாக அன்றிலிருந்து இன்றுவரை அவரிடமிருந்து வரும் குறுஞ்செய்திகளின் பின்னால் ஒரு சில வங்கமொழி பாடல்களை அனுப்புவதை அவர் தவறுவதே இல்லை. வங்கமொழி பாடல்களை அறிமுகப்படுத்திய பெருமையும், மொழி தெரியாவிட்டாலும் இன்றுவரை அதனை ரசிக்க காரணமான பெருமையும் அவரையே சாரும். பாடல்கள் மட்டுமல்லாமல் தாகூரின் கவிதைகள், வங்கமொழி திரைப்படங்கள், புத்தகங்கள் என அவரிடமிருந்து அறிந்து கொண்டவை ஏராளம் இருக்க நட்பிற்கு என்ன தேவை என புறிந்துகொண்டு பழகும் இதுபோல் நண்பர்கள் கிடைத்தது பாக்கியமே என கருதுகிறேன்.

வங்கமொழி பாடல்கள் சிலவற்றைப் பற்றி முன்பே எழுதியிருக்கிறேன் அதன் தொடர்சியாக சில பாடல்களைப் பற்றி என்ன எழுதலாம் என யோசிக்க மோஹித்தே முன்நின்றார். அவரைப் பற்றிய சிறிய அசைபோடலுடன் அடியேனுக்கு அவர் அறிமுகப்படுத்திய வங்கமொழி பாடல்களில் சிலவற்றை தங்களின் ரசனைக்காகவும் பகிர்கிறேன்.

பாடல்களைக் காண