Tunai - பேராசை.

சையே துன்பத்திற்கு காரணம் என்றார் புத்தர். ஆனால் அத்தனைக்கும் ஆசைப்படுகிறது மனது. இந்த ஆசை அளவோடு இருந்தால் பரவாயில்லை பேராசையாக மாறும்போதுதான் சிக்கல்கள் தொடங்குகிறது. நாம் நடந்து செல்லும் வழியில் யாரோ தவறவிட்ட ஒரு ஐந்து ரூபாய் நாணயம் கிடப்பதாக வைத்துக் கொள்வோம் ஆஹா!.. அதிஷ்டம் என நினைத்து அதை தம் வசப்படுத்தி கொண்டாலும் திருப்தியடையாமல் இன்னும் சில நாணயங்கள் கிடைக்காதா? என தலை கவிழ்த்தபடியே நடக்கத் தொடங்குவோம். இது எல்லா ஹோமோ செப்பியன்ஸின் இயல்பு. Abstract Reasoning என்ற பண்பியல் பகுப்பாய்வு செய்யும் மிகவும் வளர்ச்சியடைந்த மூளையின் வேலை..... சரி....இந்த குறும்படத்திற்கு வருவோம்.


நடுத்தர வயதுடைய ஒருவன் இரவுநேரத்தில் பணம் எடுப்பதற்காக ஒரு ஏ.டி.எம் மையத்தில் நுழைகிறான். வழக்கமான செயல் முறைக்கு பின் தனக்கு தேவையான பணத்தை அங்கிருக்கும் ஏ.டி.எம் மிஷினிலிருந்து அவன் எடுக்கிறான். அவனுக்கு கிடைக்கும் பணத்தில் Help என்ற வாசகம் எழுதப்பட்டிருக்க ஏதோ வேடிக்கை என நினைத்து அங்கிருந்து நகருகிறான். ஆனாலும் கேட்காத  பண்பியல் பகுப்பாய்வு செய்யும் அவனது மூளை மறுமுறை முயற்சித்து பார்க்கலாம் என்கிறது. மீண்டும் அவன் அதே வழக்கமான செயல்முறைக்கு பின் பணத்தை எடுக்க அதில் Hey! Red Tie, Help me என எழுதப்பட்டிருக்கிறது. அந்த அதிசயத்தோடு மீண்டும் மீண்டும் சிலமுறை அவன் முயற்சிக்க அவனுக்கு கிடைக்கும் அடுத்தடுத்த பணத்தில் சில வழிமுறைகள் குறிப்பிடப் பட்டிருக்கிறது. அந்த வழிமுறைகளை ஒவ்வொன்றாக பின்பற்ற அவனுக்கு முன்னே இருக்கும் ஏ.டி.எம் மிஷின் சட்டென திறக்கிக்கிறது. மேலும் அதிலிருந்து ஒரு ஆச்சரியம் வெளிவருகிறது. அந்த ஆச்சரியமும் அதற்குபின் அவனது ஆசை மற்றும் பேராசையும் என்ன என்பதுதான் சைக்காலஜி திரில்லர் வகையைச் சேர்ந்த இந்த குறும்படத்தின் கதை.



📎

  • Tunai
  • (Withdrawal)
  • Directed by - M. Myrdal Muda
  • Written by - Muhamad Abdillah
  • Music - Denny Novandi Ryan
  • Cinematography - Fajar Botak Zalqarnain
  • Country - Indonesia
  • Language - Bahasa Indonesia
  • Year - 2015.