பெண்ணின் மனதை தொட்டு.


மிழ் சினிமாவின் கதாநாயகனுக்கு உரிய காதல் சோகப் பாடல்கள் பெரும்பாலும் டாஸ்மாக் களத்தை கொண்டிருக்கும். அடிடா அவள, வெட்ரா அவள, குத்துரா அவளா, இந்த பொண்ணுங்களே இப்படித்தான், வாழ்க்கையை பாழாக்க பொறந்தவளே, அடியே இவளே, அவளே போன்ற கவித்துவமான பாடல் வரிகள் அதில் நிரம்பியிருக்கும். விசிலடிச்சான் குஞ்சுகளை நம்பியே பிழைப்பு ஓடுவதால் வெளிவரும் படத்தில் ஒன்று என அத்தகைய பாடல்களுக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. ஆனால் இதற்கு சற்று நேர்மாறாக கதாநாயகிக்கு உரிய, ஒரு பெண்ணின் மனதை தொட்டு வெளிவந்த காதல் சோகப் பாடல்கள் சற்று குறைவே. இதற்கு இங்கு 33 சதவீதம் கூட ஒதுக்கப் படுவதில்லை. காதலைப் பொருத்தவரை இரண்டு பக்கமும் 100 சதவீதம் நிரம்பியிருக்க வேண்டும்.  அதிலும் பெண்ணுக்கு உரிய பக்கங்களை நிரப்புவது சற்று சவாலானது. ஏனென்றால் 'ஒரு பெண் சர்வ ஜாக்கிரதையாக தன் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கிறாள்'. இதனை புரிந்து கொள்வது சற்று சிக்கலானதே. இதைப்பற்றி பிறகு எழுதுகிறேன். அதற்குமுன் அடியேன் ரசிக்கும் தமிழ் சினிமாவின் கதாநாயகிக்கு உரிய, ஒரு பெண்ணின் மனதை தொட்டு வெளிவந்த காதல் சோகப் பாடல்கள் சிலவற்றை மட்டும் தங்களின் பார்வைக்கு வைக்கிறேன்.