உலகின் மொழி.

மும்பையைச் சேர்ந்த கார்த்திக் ஷா மற்றும் நிராலி கார்த்திக் தம்பதியின் இசை தொகுப்புதான் இந்த மாட்டி பானி (Maati Baani). இதற்கு உலகின் மொழி என்று பொருள். பல பா.....டகர்களும் பா.....டல்களும் நிறைந்திருக்கும் யுடியூப் சேனல்களில் மாட்டி பானி இசைத் தொகுப்பில் உள்ள பாடல்களை காணலாம். மற்றவர்களைப் போல் அல்லாமல் இவர்களது பாடல்களில் சாதாரண புல்லாங்குழல் விற்பவர்கள் முதல் தெருக்கூத்து கலைஞர்கள், நடைபாதை இசைஞர்கள், கிராமத்து பாடகர்கள், வழிப்போக்கர்கள் , சூஃபிக்கள் என இந்தியாவையும் தாண்டி பல மொழிகளில் பலரது சங்கீதங்களையும், இதுவரை நாம் அறிந்திராத புதுப்புது இசைக்கருவிகளின் ஸ்வரங்களையும், சுவாரசியமான சில சப்தங்களையும் கேட்டு மகிழலாம்.


வெவ்வேறு நாடுகளிகள் இருக்கும் இசைக்கலைஞர்களை நேரடியாக சந்தித்தோ அல்லது இணைய வழியாக தொடர்புகொண்டோ அவர்களின் தனித்தன்மையான படைப்பை இந்த தம்பதிகள் சேகரித்து தங்களது பாடல்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். அதனை அவர்கள் கிளாசிக் ஹிந்துஸ்தானி பாடல்கள் மற்றும் Folk என சொல்லக்கூடிய நாட்டுப்புற தெம்மாங்கு பாடல்களுடன் கலந்து இன்றைய மேற்க்கத்திய இசையில் சுவையான இசை விருந்தாக கொடுத்திருக்கிறார்கள். குஜராத்தை சேர்ந்த சூஃபி பாடகரான மொராலாலா என்பவருடன் இணைந்து உருவாக்கிய 'பஞ்ஜாரா' என்ற பாடலும், விக்ரம் நடித்த டேவிட் திரைப்படத்தில் கியூபாவைச் சேர்ந்த பாடகி ஜாய் சாந்தி குரலில் தொடங்கும் 'தீராது போகப் போக வானம்' என்ற தமிழ் பாடலும், மைக்கேல் ஜாக்சனின் நினைவாக குழந்தை கலைஞர்களை மட்டும் வைத்து உருவாக்கிய 'ஹீல் த வேல்டு' பாடலும் இவர்களின் படைப்பில் குறிப்பிடத் தகுந்தது. அரைத்தமாவு அதே தோசை சலிப்பூட்டும் பாடல்களை சுவைத்து வெறுத்திருத்தால் மாட்டி பானியின் இசை விருந்தை புதிதாக தொட்டுப் பார்க்கலாம். முன்குறிப்பாக ஹெட்போன்களில் ரகசியமாக கேட்பது இன்னும் சுவையாக இருக்கும். 

மாட்டி பானி இசைத் தொகுப்பிலிருந்து சில பாடல்கள் தங்களின் அறிமுகத்திற்காக.

பாடல்களைக் காண