முட்டை கண் ஆஸ்கார்.


டப்பது ஓடுவது தாவுவது தவழ்வது பறப்பது என புஜபல பராக்கிரம வேலைகளைக் காட்டும் நாயகர்களை விட கார்டூன் கதாபாத்திரங்களை தேடித்தேடி ரசிப்பது அடியேனுக்கு மிகவும் பிடிக்கும். ஒருவேளை வயதாகிவிட்டதா? அல்லது இன்னும் வளரவே இல்லையா? எனத் தெரியவில்லை. அந்த வகையில் சமீபத்தில் அடியேன் தேடிப் பிடித்த கார்டூன் கதாபாத்திரம்தான் "ஆஸ்கார் (Oscar)".


சஹாரா, கலகாரிப் பாலைவனம் மற்றும் வட அமேரிக்காவில் உள்ள பாலைவனங்களில் வாழும் ஒருவகை பல்லிதான் இந்த ஆஸ்கார். பல்லிகள் உயிரிணங்களின் பரிணாம வளர்சியோடும் உலகின் சூழ்நிலையோடும் ஒன்றிப்போனவைகள். இதனை கருத்தில் கொண்டு பிரான்ஸ் மற்றும் தென் கொரியாவின் கூட்டுத் தயாரிப்பில் Team TO / Tuba Entertainment நிறுவனத்தார் ஆஸ்கார் ஒயாசிஸ் (Oscar's Oasis) என்ற தொடருக்காக இந்த ஆஸ்கார் கார்டூன் கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ளனர். மொத்தம் 78 எபிசோடுகளைக் கொண்ட அந்த தொடரில் ஆஸ்காரைத் தவிர்த்து பப்பி என்ற குள்ள நரியும், பக் என்ற பிணந்தின்னிக் கழுகும், ஹர்ச்சி என்ற கழுதைப்புலியும் மேலும் சில கதாபாத்திரங்களும் (லூரா என்ற பெண் பல்லி ஜோடியும் உண்டு) இருக்கின்றன. அவைகளோடு பாலைவனத்தில் வசிக்கும் ஆஸ்கார் உணவு மற்றும் தண்ணீருக்காக அலைந்து திரிவதும், மற்றவைகளோடு சண்டை போடுவதும், அந்த சூல்நிலையில் வாழ போராடுவதும் என ஒவ்வொரு எபிசோட்டையும் ரணகளம் செய்கிறது. Channel +, TFI, NETFLIX, S4/C, QTV, mbc போன்ற உலகில் இருக்கும் பல சேனல்களில் இந்த தொடரையும் ஆஸ்காரின் சேட்டைகளையும் காணலாம்.  இந்தியாவைப் பொருத்தவரை Cartoon Network மற்றும் Disney XD சேனல்களில் இந்த ஆஸ்கார் எப்போதாவது தலை காட்டும். 2010 ஆம் ஆண்டு 3D தொழிநுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த தொடரின் அமைப்பும் ஆஸ்கார் என்ற கதாபாத்திரமும் பழைய கார்டூன்களை சற்று நினைவு படுத்தினாலும் மனதில் புதிதாக ஒட்டிக்கொள்கிறது. லாப்ஸ்டிக் என சொல்லக்கூடிய மௌன மொழி நகைச்சுவையில் அசத்தும் கார்டூன் கதாபாத்திரங்களின் வரிசையில் நிச்சையம் இந்த முட்டை கண் ஆஸ்காரும் இடம்பெறும்.

ஆஸ்கார் ஒயாசிஸ் தொடரிலிருந்து ஆஸ்காரின் சாகசங்களில் சில தங்களின் பார்வைக்கு -