இடுகைகள்

July, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
☰ உள்ளே....

முத்த மழை.

படம்

குலாப் ஜாமூன்...

படம்
வாழ்வில் ஒருமுறையாவது சுவைத்துப் பாருங்கள் என்ற உலகின் ருசியான உணவு வகைகளைப் பற்றிய பட்டியலில் இந்திய மக்கள் தங்கள் வீடுகளில் சர்வ சாதாரணமாக தயாரிக்கும் இந்த பதார்த்தமும் இருக்கிறது. பெயரைக் கேட்டதும் நாக்கில் எச்சில் ஊரும் அளவிற்கு சுவை கொண்ட இது, தீபாவளி, ரம்ஜான், கிரிஸ்துமஸ் என மதம் தாண்டி அனைத்து பண்டிகை கொண்டாட்டங்களையும் இனிக்க வைக்கிறது. இந்தியா மட்டுமில்லாமல் பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, நேபாளம், மெய்ரூட், வெனிசுலா, ஃபிஜி தீவுகள், போன்ற நாடுகளின் முக்கிய இனிப்பு பதார்த்தமாக இருக்கும் அந்த உணவு வகையான குலாப் ஜாமூனின் (செல்லமாக GJ) சுவாரசிய தகவல்களை சுவைக்கலாம் வாருங்கள்.

என்னதான் இந்தியாவில் புகழ்பெற்றிருந்தாலும் குலாப் ஜாமூனின் பிறப்பிடம் துருக்கி ஆகும். கி.பி 552-744 காலகட்டத்தில் "Karakhanids" என்ற சாம்ராஜியத்தில் துருக்கி மற்றும் ஈரானின் மத்தியில் வாழ்ந்த மக்கள் பசும்பாலை கெட்டியாக காய்ச்சி உருண்டைகளாக்கி எண்ணெயில் பொறித்து அதனை ரோஸ் வாட்டர் என சொல்லக்கூடிய பண்ணீரில் கலந்து திருவிழாக் காலங்களில் சுவைத்து மகிழ்ந்தனர். துருக்கி மற்றும் மங்கோலிய கலவையான இந்த பதார…

Yellow Collection.

படம்

ஓணான்.

படம்

சாரதா கபூர் .

படம்
புகழ்பெற்ற நகைச்சுவை நடிகரான இவரது அப்பா சக்தி கபூர் ஹிந்தி சினிமாவின் மூன்று தலைமுறை ஹீரோக்களுடன் சுமார் 700 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். பற்றாக்குறைக்கு இவரின் சொந்த பந்தங்களான கபூர் குடும்பமே பாலிவுட்டில் கோலோச்சியிருக்கிறது. இருந்தும், என்பது மற்றும் தொன்னூறுகளின் சினிமா நடிகர் நடிகைகளின் வாரிசுகள் எல்லாம் வரிசையாக திரைப்படங்களில் நடிக்க வர, இவர் மட்டும் நடிப்பதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என தான் உண்டு தன் சைக்காலஜி படிப்பு உண்டு என ஆரம்ப காலகட்டத்தில் ஒதுங்கியிருந்தார். ஆனால் இன்று 'இந்த கதாபாத்திரத்திற்கு இவர்தான் பொருத்தமாக இருப்பார்' என தேடும் அளவிற்கு பாலிவுட்டின் ஆர்ப்பாட்டமில்லாத நடிகையாக விளங்குகிறார். அவர்தான் சாரதா கபூர் (Shraddha Kapoor).
1987-ல் பிறந்த சாரதாவிற்கு டீன் பதி என்ற திரைப்படத்தின் மூலம் முதல் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் அமிர்தாப், பென்கிங்ஸ்லே, மாதவன் என பெரும் தலைகளுடன் கொஞ்சநேரம் இவரும் தலைகாட்டி இருந்தார். அதற்குப்பிறகு வந்த லூவ் கா தி என்ட் திரைப்படம் இவரை தனியே கதாநாயகியாக்கிப் பார்க்க, ஆஷிக் 2- ஆம் பாகம் இவரை சிறந்த நடிகை…

தொலைதல்.

படம்

Sweet Couple.

படம்

The Bang Bang Club - மூன்றாவது கண் ..

படம்
இயற்கை காட்சிகள், அதிசயங்கள், அபூர்வங்கள், திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள், திருவிழாக்கள், வரலாற்று நிகழ்வுகள், சமூகம் சார்ந்த பிரச்சனைகள், பேரிடர்கள், சோக நிகழ்வுகள் போன்ற வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் புகைப்படமாக எடுப்பது என்பது தேர்ந்த ஒரு கலை.  எந்தத்துறைக்கு பயன்படுகிறதோ இல்லையோ செய்தித்துறையில் இந்த புகைப்படக்கலையின் பங்கு இன்றியமையாத ஒன்றாகும். பக்கம் பக்கமாக எழுதி புரியவைக்க முடியாத ஒரு செய்தியை சிறந்த புகைப்படம் ஒன்று அப்பட்டமாக விளங்க வைத்துவிடும். ஆப்கானிஸ்தானின் பச்சைநிற கண்ணழகி, உகாண்டா நாட்டு குழந்தையின் சூம்பிப்போன கை, ரொட்டித்துண்டிற்காக கையேந்தும் சோமாலியா குழந்தைகள், போருக்குச் செல்லும் தந்தையை பிரியும் சிறுவன், பூகம்பத்தில் புதைந்த தம்பதிகள், தன் தலைவனின் இருதி ஊர்வலத்தில் வாசிக்கும் இராணுவ வீரன். இறந்து கரை ஒதுங்கிய சிரியாநாட்டு குழந்தை, போபால் விசவாயு தாக்கப்பட்ட குழந்தை,  அல்பேனியாவின் அகதிகள் முகாம்,  ஹிட்லரின் வதை முகாம், என புகழ்பெற்ற சில புகைப்படங்களே இதற்கு சாட்சியாகும். குறிப்பாக வியட்நாம் போரின்போது எடுக்கப்பட்ட எரியும் புத்தபிட்சுவின் படமும் நிர்வாண சிறும…

மயானம் .

படம்
மயானம் அல்லது சுடுகாடு என்றால் அனைவருக்கும் ஒரு பயம், ஒரு சிறிய தயக்கம் இருக்கும். அட ஏன்? மயானம் இருக்கும் பக்கம் கூட நாம் கால் வைக்க மாட்டோம். அதையும் மீறி அவ்வழி செல்வதாக இருந்தால் அடிவயிற்றில் ஆரஞ்சு நிறத்திலிருக்கும் அட்ரினல் சுரக்க ஒரு வித கிலியுடன் கடந்து செல்வோம். பேய் பிசாசு ஆவி மோகினி ராகினி கவுதமி என அதற்கு காரணமாக இருந்தாலும், இதுதான் நிரந்தரம் ஒருநாள் இங்குதான் வருவோம் என்ற எண்ணமும் பயமும் நம்மில் யாருக்குமே கிடையாது. அதனால்தான் பிக்பாஸ் என அத்தனை ஆட்டத்தையும் ஆடுகிறோம்.
மயானம் என்ற சொல் ''ஷ்மஷான்" என்பதிலிருந்து மறுவியது. 'ஷ்ம' என்றால் சவம் என்று பொருள், 'ஷான்' என்றால் படுக்கை என்று பொருள். எகிப்தின் பிரமிடு முதல் நம் ஆதிச்சநல்லூர் வரை சில அகழ்வாராய்ச்சி இடங்கள்கூட நம் முன்னோர்களின் மயானங்களே. இன்னும் ஒரு சில தலைகள் வீழ்ந்தால் உலகின் அழகிய கடற்கரையான மெரினாவும் மயானமாக மாற அரசியல் வாய்ப்பிருக்கிறது. சொல்லப்போனால் இந்த உலகமே ஒரு மயானம்தான்.
"எல்லோர் வீடுகளிலிருந்தும் கண்ணுக்குத் தெரியாத ஒரு பாதை மயானத்தை நோக்கிச் செல்கிறது"
-என்று…

Mask.

படம்

Angel.

படம்

யாழ் - சிவயநம.

படம்
ங்ககாலத்தில் தமிழால் இசையால் பாடல்களால் மக்களை மகிழ்வித்த "பாணர்கள்" என்பவர்களைப் பற்றி என்தமிழ் என்ற பகுதியில் எழுதியிருந்தேன் அதற்கான தகவல்களை திரட்டும்போதுதான் இந்தப் பாடல் எதேச்சையாக கிடைத்தது. பாணர்கள் பல இசைக் கருவிகளை வாசிக்க கற்றிருந்தனர் அதில் குறிப்பிடும்படியாக "யாழ்" எனும் நரம்பு இசைக் கருவியின் வாத்தியத்தில் அவர்கள் கைதேர்ந்தவர்களாக விளங்கினர். இந்த யாழ் எனும் இசைக் கருவியே இன்று புழக்கத்திலிருக்கும் வீணை, சித்தார், மேண்டலின் போன்ற நரம்பு இசைக் கருவிகளுக்கு முன்னோடியாகும். மேலும் தமிழர்கள் வாசித்த முதல் இசைக் கருவி இதுதான் என்று நம்பப்படுகிறது. யாழ் கருவியை வாசிக்கும் பாணர்களின் ஒரு பிரிவினர் யாழ் பாணர்கள் என அழைக்கப்பட்டனர். இலங்கை நாட்டின் முக்கிய பகுதியான யாழ்பாணம் என்ற இடத்தில் பண்டைய காலத்தில் இந்த பாணர்களின் பிரிவினர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வந்தனர். அதனால்தான் அந்த பகுதிக்கு யாழ்ப்பாணம் என்ற பெயர் வந்ததாக வரலாறும் இருக்கிறது. அத்தகைய பாணர்களின் வரலாற்றையும் சிறப்பு வாய்ந்த யாழ் எனும் இசைக் கருவியின் பெருமையையும் அழகான ஓவியத்துடன் நமக்கு காட்…

ஈரேழு உலகங்கள்...

படம்
'ஈரேழு உலகமும் கண்டிராத அழகி அவள்' என்ற சொல்லாடலை கேள்விப்பட்டிருப்போம். அதன்படி ஈரேழு பதினான்கு உலகத்தில் காணக் கிடைக்காத ஒரு பேரழகி இருக்கிறாளா என்ன? என்பது சந்தேகமாக இருந்தாலும் ஈரேலு உலகம் என்பது இருக்கிறது. அப்படி என்றால் நாம் வாழும் இந்த உலகத்தைப் போல அச்சு அசலாக இன்னும் பதின்மூன்று உலகங்கள் இருக்கின்றன. இதனை அறிவியல் பூர்வமாக நிறுபிக்க "இணை பிரபஞ்சம்" என ஏற்கனவே எழுதிவிட்டேன் அதனால் இந்தமுறை பழமை வாய்ந்த இந்து மதத்தின் புராணக் கதை பக்கம் தாவுகிறேன்.
படைத்தல் காத்தல் அழித்தல் கடமையை ஏற்றிருக்கும் சிவபெருமானே இந்து மதத்தின் முக்கிய கதாநாயகன் ஆவார். எல்லா ஜீவராசிகளுக்கும் தன் இனத்தை பெருக்க ஆண்பால் பெண்பால் என இருபாலினங்கள் தேவைப்படும் என்ற கருத்தை விளக்க அவர் அர்த்தநாரீஸ்வரர் என்ற டூ யின் ஒன் கதாபாத்திரத்தில் இருக்கிறார். ஒரு காலகட்டத்தில் நாம் வசிக்கும் இந்த பிரபஞ்சம் சூரியன், நட்சத்திரங்கள், கோல்கள், மலைகள், கடல்கள், மீன்கள் பறவைகள், விலங்குகள், மரங்கள் என ஏதுமற்ற வெறுமையாக அண்டவெளியில் இருளாக இருந்தது. அண்டம் என்ற சொல்லுக்கு தமிழில் முட்டை அல்லது கரு என்று …

Yellow Blossom.

படம்

Bus 44 - அலட்சியமே ஆபத்து .

படம்
டுப்பகல் நேரம், மக்கள் நடமாட்டம் நிறைந்த இடம், கேமரா கண்கள் உட்பட பலரது நிஜப் பார்வைகளும் படும்படி ஒரு கொலை நடக்கிறது. சுற்றியிருந்தவர்கள் தடுக்க நினைத்திராத அந்த சம்பவம் பிறகு ஊடகங்களின் வெறும் வாயில் மெல்லப்பட்டு பலரது ஆறுதல்களையும் விமர்சனங்களையும் பெறுகிறது. இது ஒரு சிறிய எடுத்துக்காட்டாக இருந்தாலும் சிறுசிறு திருட்டுகள் தொடங்கி கடத்தல் கொலை கற்பழிப்பு என இன்று துணிச்சலோடு நடக்கும் குற்ற சம்பவங்கள் அனைத்தும் சிலரின் பார்வை படும்படி அப்பட்டமாகவே நிகழ்கிறது. யாரோ? எவரோ? என்னதான் பிரச்சனையோ? உனக்கேன் அக்கறை? நமக்கேன் வம்பு என தடுக்க நினைக்காது ஒதுங்கிச் செல்லும் மனிதத் தன்மையின் அலட்சியப் போக்கே இத்தகைய துணிச்சலான குற்ற சம்பவங்களுக்கு தொடக்கப் புள்ளியாக அமைந்துவிடுகின்றன. மனித மனதின் அத்தகைய அலட்சியப் போக்கிற்கு சாட்டையடி கொடுக்கிறது இந்த குட்டி சினிமா "Bus 44".
இந்த குறும்படத்தின் கதைப்படி ஒரு பேருந்து பயணமும் தொடரும் வழிப்பறியும் அதனுடன் நிகழும் ஒரு சம்பவமும் மனித மனதின் இருண்ட மற்றும் வெளிச்சம் மிகுந்த பக்கங்களில் அத்துமீறி நுழைந்து அதனை சீர்தூக்கிப் பார்க்கிறது. சீனாவ…

The Ant Family.

படம்

Larvae (கொஞ்சம் புதுசு).

படம்
மிக்கி மவுஸ், டாம் அண்ட் ஜெர்ரி, ரோடு ரன்னர் போன்ற பிளாக் காமெடி மற்றும் ஸ்லாப்டிக் வகை காமெடி கலந்த கார்டுன் தொடர்களை தற்போது காண்பது என்பது அரிதாகிப்போனது. அட்வெஞ்சர் வகையரா தொடர்களாலும் தொழில்நுட்பம் கலந்த மாயாஜால கதைகளாலும் இன்றைய கார்டுன் உலகம் நிறைந்திருக்கிறது. அழுதுவடியும் மெகா சீரியல்கள் சேனல்களைப் போல அல்லது எதாவது ஒரு செய்தி சேனல்களைப் போல வெறும் சப்தங்களால் கார்டுன் சேனல்கள் இருபத்து நான்கு மணிநேரமும் ஓடிக்கொண்டே இருக்கின்றன. அதாவது குழந்தைகளை மட்டும் இலக்காக குறிவைத்து வியாபார தந்திரத்தோடு அவைகள் அழகாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதே உண்மை. அதற்குச் சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக எப்போதாவது சில தொடர்கள் அனைவரையும் கவரும் விதத்தில்  அரிதாக ஒளிபரப்பப்படுகின்றன. அந்த வகையைச் சார்ந்த தொடர்தான் லார்வா (Larvae).
தென்கொரியாவின் சியோலில் உள்ள TUBA என்ற நிறுவனத்தார் டிஸ்னியின் ஆசிய ஒளிபரப்பிற்காக இந்த லார்வா தொடரை உருவாக்கினர். "Joo - Gong Maeng " என்பவர் இயக்கி, Great Park என்பவர் இதற்கு இசையமைத்திருந்தார். நாமெல்லாம் முகம் சுழித்து வெறுத்து ஒதுக்கும் புளுக்கள் மற…

Dust bin.

படம்