☰ உள்ளே....

நிலவின் முதுகு.



'நிலவின் முதுகும் பெண்ணின் மனதும் என்றும் ரகசியம் தானா' - அற்புதமான பாடல் வரிகள்.

2015 ஆம் வருடம் நாசா அனுப்பிய DSCOVR (Deep Space Climate Obeservatory) என்ற செயற்கைக்கோள் தன்னிடம் உள்ள சக்தி வாய்ந்த EPIC (Earth Poly Chromatic Imaging) கேமரா மூலம் வான்வெளியில் உள்ள ஓசோன் படலம் மற்றும் வளிமண்டல தூசு துரும்பு குப்பை கூழங்களை மிகத் துள்ளியமாக புகைப்படம் எடுத்து அடிக்கடி அப்டேட் செய்து வருகிறது (பல லட்ச லைக்குகளையும் வாங்கியிருக்கிறது). அது சமீபத்தில் சூரிய ஒளி வீசும் பூமியின் பக்கமாக நிலவு நகரும் சமயம் பார்த்து பத்துலட்சம் கி.மீ தூரத்திலிருந்து அழகாக பல புகைப்படங்களை கிளிக்கி அனுப்பியது. அதில் இதுவரை தெரியாத மற்றும் சந்தேகத்துடன் இருந்த நிலவின் மறுபக்கத்தின் இருள் சூழ்ந்த புகைப்படமும் இருந்தது (கருப்பு நிலா). நிலவிற்கு மறுபக்கம் உள்ளதா? அது கருப்பாக இருக்குமா? கற்பனையா? நிஜமா? என்றால்! நிஜம்தான். 

பூமியின் துணைக்கோளான நிலா, மலைகள், பாறைகள், வின்கற்கள் விழுந்த பெரும் பள்ளங்கள், எரிமலை சம நிலங்கள் இவற்றைக் கொண்டு மிஸ்டர் சூரிய பகவானின் தயவால் சுமார் 384403 கி.மீ தூரத்திலிருந்து ஒளிரும் தனது ஒரு பக்கத்தை மட்டுமே நமக்கு காட்டி வருகிறது. தேன்மொழி, கனிமொழி, மாலா, கலா, ரோஸி, x, y, z, a2, b2 என யாரையாவது நினைத்து கற்பனை செய்து கவிதை எழுதி, சிறிய கீற்றாகவோ முழு வட்டமாகவோ   ஒளிரும் அந்த நிலவின் முகத்தை மட்டுமே நாமும் பார்த்து வருகிறோம். ஆனால் மேலே குறிப்பிட்ட அந்த பாடல் வரிகளுக்கு ஏற்ப நிலவிற்கு பின்னால் நாம் கண்டிராத இருண்ட முதுகு புறமும் இருக்கிறது. அதாவது நம் பூமியைப் போல நிலவும் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியையும் சுற்றி வருகிறது. இந்த இரண்டும் ஈப்புவிசை போதையில் சுற்றும் போது நேரம் காலம் ஒன்றாக இருப்பதால் பூமியிலிருந்து பார்க்க நிலவின் மறுபக்கம் நமக்குத் தெரிவதில்லை. 1959 ஆம் ஆண்டு சோவியத் அனுப்பிய லூனா-3 வின்கலம் முதன்தலாக நிலவின் மறுபக்கத்தையும் நிலவுக்கு பின் பரந்த பிரபஞ்சம் இருப்பதையும் கண்டுபிடித்தது.  Dark side of the moon அல்லது Fair side of the moon என்று அழைக்கப்படும் அந்த பக்கத்தினைதான் நாசாவின் செயற்கைக்கோள் தெளிவாக படம்பிடித்து அனுப்பியது. DSCOVR அனுப்பிய அந்த புகைப்படங்கள் நிலவின் மறுபக்கம் என்ற சந்தேக தெளிதலுக்கும் மேற்பட்ட நிலவின் ஆராய்ச்சிக்கும் பெரிதும் உதவியது. மரியா என்று அழைக்கப்படும் கரும் பள்ளங்களை கொண்ட அந்தப் பகுதியின் புகைப்படங்களை நாசா பல லட்சம் டெராபைட் படங்களாக சேர்த்து வீடியோவாக வெளியிட்டு உள்ளனர். 

எது எப்படியோ அந்த பாடலில் வரும் ரகசியங்களில் ஒன்றான நிலவின் முதுகை கண்டுபிடித்து விட்டார்கள். மற்ற ஒன்றையும் அப்படியே கண்டுபிடித்தால் புண்ணியமாகப் போகும்.

அந்த வீடியோ