நிலவின் முதுகு (குட்டித் தகவல்).'நிலவின் முதுகும் பெண்ணின் மனதும் என்றும் ரகசியம் தானா' - அற்புதமான பாடல் வரிகள்.

2015 ஆம் வருடம் நாசா அனுப்பிய DSCOVR (Deep Space Climate Obeservatory) என்ற செயற்கைக்கோள் தன்னிடம் உள்ள சக்தி வாய்ந்த EPIC (Earth Poly Chromatic Imaging) கேமரா மூலம் வான்வெளியில் உள்ள ஓசோன் படலம் மற்றும் வளிமண்டல தூசு துரும்பு குப்பை கூழங்களை மிகத் துள்ளியமாக புகைப்படம் எடுத்து அடிக்கடி அப்டேட் செய்து வருகிறது (பல லட்ச லைக்குகளையும் வாங்கியிருக்கிறது). அது சமீபத்தில் சூரிய ஒளி வீசும் பூமியின் பக்கமாக நிலவு நகரும் சமயம் பார்த்து பத்துலட்சம் கி.மீ தூரத்திலிருந்து அழகாக பல புகைப்படங்களை கிளிக்கி அனுப்பியது. அதில் இதுவரை தெரியாத மற்றும் சந்தேகத்துடன் இருந்த நிலவின் மறுபக்கத்தின் இருள் சூழ்ந்த புகைப்படமும் இருந்தது (கருப்பு நிலா). நிலவிற்கு மறுபக்கம் உள்ளதா? அது கருப்பாக இருக்குமா? கற்பனையா? நிஜமா? என்றால்! நிஜம்தான். 


மேடம் பவாரி (புத்தகம்).பிரெஞ்சு இலக்கியம் உலக இலக்கியத்திற்கு கொடுத்த கொடைகள் ஏராளம். இதுவரை 15 முறை இலக்கியத்திற்கான நோபல் பரிசினை பிரெஞ்சு இலக்கியங்கள் அதிகபட்சமாக பெற்றதே அதற்கான சாட்சியாகும். 18 ஆம் நூற்றாண்டில் Voltaire, Jean, Jacques Rousseau, Danies Diderot மற்றும்; 19 ஆம் நூற்றாண்டில் Honore de Balzac, Gustare Flaubert, Emile Zola மற்றும்; 20 ஆம் நூற்றாண்டில் Macel Proust, Jean Ganet, Louie Ferdinaud Celine போன்ற எழுத்தாளர்களும், கவிதைக்கு Victor Hugo, Arthuer Rimbaud, Lafontaine நாடகத்திற்கு Moliere, Samual Beckett, சரித்திரத்திற்கு Blaise Pascal சிந்தனைக்கு Lespenseas போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களும் இதற்காக அரிய பணியாற்றி பிரெஞ்சு இலக்கியத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தினர். (இவற்களைத் தவிர்த்து இன்னும் பலர் இருக்கிறார்கள்). அவர்களின் வரிசையில் 1856 ஆம் ஆண்டு "குஸ்தாவ் பிளாபெர்ட்" (Gustave Flaubert) என்பவர் எழுதிய இலக்கிய படைப்புதான் இந்த புத்தகம் "மேடம் பவாரி" (Madame Bavary).

Dogani - The Crucible (சினிமா).எதார்த்தங்கள், உண்மைச் சம்பவங்கள், புத்தகங்கள் இவற்றை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படங்களே தரமான திரைப்படங்களாக மக்கள் மனதில் நிற்கும். அவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தி மனித சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் புரட்சிக்கும் ஒரு திரைப்படம் வித்திட்டால் அதைவிடச் சிறந்த படைப்பு வேறெதுவும் இருக்காது. அத்தகைய தரமான படைப்புதான் இந்த கொரியன் திரைப்படம் "The Crucible". தென் கொரியாவில் உள்ள Gwangju மாகாணத்தில் 2005 -ஆம் ஆண்டு நடந்த உண்மைச் சம்பவத்தை "Gong-Ji-Yong" என்பவர் புத்தகமாக எழுதினார் அதனை "Hawang Dong -Hyuk" என்பவர் திரைப்படமாக எடுத்திருந்தார். இந்த இருவர்களின் உழைப்பு வெளிவந்த பிறகு பார்வையாளர்களிடம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. மேலும் அரசாங்கத்தையும் சட்டத்தையும் அது போட்டிருக்கும் அழுக்குச் சட்டையையும் பிடித்து உலுக்கிப் பார்த்தது. அப்படி என்ன நடந்தது? அந்த சம்பவத்தையும் அந்த திரைப்படம் வெளிவந்த பிறகு அது ஏற்படுத்திய தாக்கத்தையும் பார்க்கலாம் வாருங்கள்.

பாணர்கள் (என் தமிழ்)."வாழ்க்கை கர்மவினையின் சுழற்சியாக கருதப்பட்டாலும் கொண்டாட்டங்களால் நிறைந்தது". ஆடல், பாடல், இசை, நாடகம் போன்ற கலைகளால் சங்ககாலம் முதல் இன்றுவரை அந்த கொண்டாட்டங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தற்போது இருக்கும் தொழில்நுட்பத்தில் அந்த கலைகளும் கொண்டாட்டங்களும் வேறொரு பரிணாமத்தில் நம் வீடுதேடி வரவேற்பறைக்கே வருகிறது. அவற்றிற்கெல்லாம் சங்க காலத்தில் வாழ்ந்தவர்களே அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். அவ்வாறு சங்க காலத்தில் பாடல்களைப் பாடி இசைக்கருவிகளை வாசித்து அதற்கு தகுந்தார்போல் நடனமாடி மக்களை மகிழ்வித்து கலைகளை வளர்த்தவர்கள் பாணர்கள் என அழைக்கப்பட்டனர், அவர்களின் பெண்பால் பாடினிகள். ஐம்பெரும் காப்பியமான சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் இவர்களைப் பற்றி அழகாக குறிப்பிட்டுள்ளார்.

இசையுடன் பண்ணப்படுவது பண்.
பண்ணிசையுடன் பாடுபவர் பாணர்.
பண்ணிசை பொருந்த ஆடுபவர் பொருநர்.
பாடற்பொருளை மெய்படுத்திக் காட்டி ஆடுபவர் விறலியர்.
கதைப்பாட்டுடன் ஆடுபவர் கூத்தர்.

சுருக்கமாகச் சொன்னால் இவர்கள், அன்றைய கால சூப்பர் சிங்கர் மானாட மயிலாட அசத்தப்போவது யாரு சூப்பர் ஜோடி கோஸ்டிகள்.

Autumn Leaves (குட்டிக்குட்டி சினிமா).உன்னதமான உலக சினிமாக்களை வரிசைகட்டினால் ஈரானிய திரைப்படங்களே முதல் இடத்தில் நிற்கும். பிரம்மாண்ட படைப்புகளோ, ஆச்சரிமூட்டும் கதையோ, வியக்க வைக்கும் தொழில்நுட்பங்களோ ஈரானிய படைப்பாளிகளுக்கு தேவைப்படாது. தெருவில் வித்தைகாட்டும் சாதாரண பாம்பாட்டியை ஒரு கையடக்க கேமராவில் படம்பிடித்து சத்தமில்லாமல் மயக்கி சகல விருதுகளையும் அவர்கள் தட்டிச் சென்றுவிடுவார்கள். "Children of Heaven, The White Ballon, The Cow, Bashu, Where is my Friend's Home இன்னும் பல திரைப்படங்களை இதற்கு எடுத்துக்காட்டுகளாக கூறலாம். குறும்படங்களை எடுத்துக்கொண்டால் அதிலும் அவர்களுக்கு முதலிடம்தான். தரமான ஒரு படைப்பைத் தர அவர்களுக்கு ஒரு சிறிய பொறி போதும் சிலசமயம் அது கூட தேவையிருக்காது. அந்த வகையைச் சார்ந்ததுதான் இந்த குறும்படம் "Autumn Leaves".

A Long Way Gone (புத்தகம்).குழந்தைத் தொழிலாளர்கள் என்பதே சட்டத்திற்கு புறம்பான செயல் அதிலும் குழந்தை வீரர்கள் என்பது மனிதத்தையும் மீறக்கூடிய செயல். உலகம் கண்ட இரண்டு பெரும் போர்களிலும் குழந்தை வீரர்கள் (சிறுவர் - சிறுமியர்) ஈடுபடுத்தப் பட்டிருக்கிறார்கள். வளர்ந்த நாடுகள் என இன்று மார்தட்டிக் கொள்ளும் நாடுகள் கூட போர்களில் சிறுவர்களை கணிசமான அளவு பயன்படுத்தி இருந்தனர். ஆனால் இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு விழித்துக் கொண்ட உலகம் சிறுவர்களை இராணுவத்தில் அனுமதிப்பதை தடை செய்தது மேலும் இராணுவத்தில் சேர்வதற்கான கட்டாய வயது வரம்பைக் கொண்டுவந்தது. இன்று இராணுவத்தில் சிறுவர்களை எந்த நாடும் அனுமதிப்பதில்லை. அதற்கு மாற்றாக புரட்சி, விடுதலை, சுதந்திரம், மதம் என தீவிரமாக செயல்படும் சில இயக்கங்களின் மூலம் அவர்களின் கையில் விளையாட்டு பொருட்களுக்கு பதிலாக விபரீதமாக ஆயுதங்கள் திணிக்கப்படுவது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஈராக் யுத்தம் தொடங்கி வியட்நாம், ஆப்கானிஸ்தான் போர், ஆப்பிரிக்க நாடுகளின் உள்நாட்டு கலவரங்கள், ஏன்! நமக்கு நன்கு பரிச்சியமான இலங்கை யுத்தத்திலும் கணிசமான அளவு சிறுவர்கள் ஒற்றர்களாகவும் மனித வெடிகுண்டாகவும் கேடையமாகவும் பற்றாக்குறை வீரர்கள்களாகவும் முன்நிறுத்திய வரலாறு நமக்கு தெரிந்ததே. அவ்வாறு தன் நாட்டின் கலவரத்திற்காக, ஒரு இயங்கத்தின் செயல்பாட்டிற்காக பதப்படுத்தப்பட்ட - பயன்படுத்தப்பட்ட சிறுவன் ஒருவனின் சுயசரிதைதான் இந்த புத்தகம் "A Long Way Gone".

தொடர்வண்டி வாழ்க்கை (கிறுக்கல்கள்) .

நாசிக்குள் நுழையும்
சேற்று வாசனையில்
மெல்ல கண் விழிக்க,
சூரியன் மறைத்திருந்த
கருப்பு மஞ்சள்
திரை விலகி
அவள் உடுத்தியிருக்கும்
பச்சைப் புடவை
பரவலாகத் தெரிய,
குளத்தில் தேங்கியிருக்கும்
தண்ணீரையும்
தாமரை அல்லியையும்
நீந்தும் இரைக்காக
காத்திருக்கும்
மீன்கொத்தியையும்
கொக்கையும்
சாம்பல் நிற
மடையானையும்
ரசித்தபடி
சன்னலை வெறித்தபடி,
மேயப் புறப்பட்ட
ஆடு மாடு கோழி
குருவி குளவி வண்டு என
அஃறிணையோடு
அடிக்கடி தடதடக்கும்
சிறிய பெரிய
வாய்க்காலையும்
ஆளில்லா கேட்டையும்
கடந்து,
திருநெல்லிக்காவலில் ஏறும்
பண்டம் விற்பவர்களிடம்
சுண்டல் பனங்கிழங்கு
வேர்க்கடலை
அரிசி முறுக்கு என
ஒன்றை வாங்கி
அசைபோட்டுக் கொண்டு,
"வழிநெடுக வீற்றிருக்கும்
மரம் போல் மனமும்
ஓரிடத்தில்
நிலையாக நின்றாலும்
காட்சிப்பிழையாக
உடலை மட்டும்
நகர்த்துகிறது காலம்" என்ற
மகா சிந்தனையோடு,
ஸ்டேஷன் நெருங்குகையில்
படிக்கட்டுகளில் நின்று
ஆழ்ந்து ஒருமுறை
அதற்கும் ஒருமுறை
மறுமுறை இது
எங்க ஊர் காற்றென
கர்வத்தோடு
மூச்சிழுத்து உள்செலுத்தி,
பயணிகள் கவனத்திற்கு
அழகு பெண்குரலோடு
சூடான வடை
சமோசா டி காபி
குரலையும் கேட்டபடி
நிதானமாக வண்டி
நிற்குமுன் இறங்கி,
அரசமரத்தடியில்
அமர்ந்திருக்கும்
சித்தி விநாயகரை
நலம் விசாரித்து
ஒரு சலாம் போட்டுவிட்டு,
சார்! ரிக்ஷா வேணுமா?
சார்! ஆட்டோ வேணுமா?
சார்! டாக்ஸி?
கேட்பவர்களுக்கு
ஒரு நட்பை
ஒரு சொந்தத்தை
பார்த்த தொணியில்
வேண்டாம் என்பதையும்
மனதார புன்னகைத்து
பதிலளித்து,
தலையில் குல்லா
கழுத்தில் மப்ளர்
அவர் வயதிற்கு
பொருத்தமில்லாத
டிசர்ட்டுடன் காத்திருக்கும்
அப்பாவுடன்
ஸ்கூட்டரில் ஏறி,
எங்கங்கோ
சுற்றித்திரிந்து விட்டு
சொந்த கூட்டிற்குத் திரும்பும்
அந்த கடைசி மணிநேர
பயண சுகத்திற்காக
பல்லாயிரம் மைல்
தூரத்திலிருந்து
இனிதே புறப்படுகிறது
தொடர்வண்டி
வாழ்க்கை.